Wednesday, February 15, 2012

எங்க சொந்த ஊரைப் பத்திங்கோ - தொடர் பதிவு




அன்பு சகோதரி சசிகலா அவர்கள் சொந்த ஊரைப் பற்றி ஒரு தொடர் பதிவு எழுத அன்பு வேண்டுகோள் விடுத்தார். அவர் அன்பிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. இது விருதுகள் மற்றும் தொடர் பதிவுகள் எழுதும் காலம் போலிருக்கிறது. இருக்கட்டும். இருக்கட்டும்.

எத்தனையோ பதிவுகளை இடுகிறேன். சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டு வாங்கியும் கட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு பிடித்தது கவிதை. கவிதை மட்டுமே. சொல்லப்போனால் கவிதைகள் மட்டுமே எழுதத்தான் பிளாக் ஆரம்பித்தேன். வெறும் கவிதைகள் எழுதினால் பிரபலமாகாமல் போய்விடுவோமோ என்று பயந்துதான் பல்சுவைப் பதிவுகள் எழுதி வருகிறேன். பார்ப்போம். காலம் கனிந்தால் கவிதைகள் மட்டுமே எழுதலாம். மற்றவைகளை விட்டுவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். போகட்டும். எதற்காக இங்கே இதைச் சொல்கிறேன் என்றால் என் சொந்த ஊரைப் பற்றியும் கவிதை நடையில் (அப்படித்தான்னு நானா நெனச்சிக்கிடறேன்) சில வாக்கியங்களை மட்டும் சொல்லி விட்டுக் கடந்து போகலாம் என்று இருக்கிறேன்.

என் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல். அழகான கிராமம். அற்புதமான ஊர். தேவதூதர்கள் கூட காற்று வாங்க சில நேரம் இங்கே வந்திடுவார்கள். காரணம் அந்த தாமிரபரணி நதி. அந்த நதிப்பெண்ணிடம் கேட்டாள் சொல்வாள் லட்சோபலட்சம் கதைகள். அந்த நதிக்கரையினில்தான் என் சிறுவயது வாழ்க்கை கழிந்திருக்கிறது. இப்போதும் அங்கே செல்லும் போதெல்லாம் அந்த தோழியிடம் பேசிவிட்டுத்தான் அடுத்த வேலை. இவளைப் பற்றி தனி கவிதை ஒன்றே எழுதி இருக்கிறேன். வாய்ப்பும் வசதியும் இருந்தால் அதைப் படித்துப் பாருங்கள். ( http://www.duraidaniel.blogspot.in/2011/12/blog-post_22.html ).

இயற்கை அழகு சூழ்ந்த அழகு கிராமம். சாயங்கால நேரம் ஆற்றங்கரையில் அமர்ந்தால் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு ஆனந்தமாய் இருக்கும். அப்புறம் ஊரில் ஒரு பஜார் உண்டு. ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்தில் சுமார் 2000 கடைகள் வரிசையாக இருபுறமும் நேர்த்தியாக அமைந்திருக்கும். இப்படி ஒரு பஜாரை நீங்கள் தமிழ்நாட்டில் எங்குமே பார்க்க முடியாது. அப்படி ஒரு அழகு. முழுவதும் பந்தல் போட்டு மூடி அழகாக பராமரிக்கப்பட்டிருக்கும் அந்த கடைவீதி. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்துக்காரர்களிடம் கேட்டுப் பாருங்கள். அதன் பெருமை தெரியும். சிட்டியில் கிடைக்காத பொருட்களும் அங்கு மலிவாக தரமாக கிடைக்கும். தமிழ்நாட்டிலேயே தங்கவிலை அங்கு கம்மி என்றால் பாருங்களேன். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? A to Z எல்லா சாமான்களும் வாங்கலாம். சுத்துப்பட்டி எல்லா கிராமங்களிலிருந்தும் பொருட்கள் வாங்க இங்கேதான் வருவார்கள். அவ்வளவு அழகிய கடைவீதி.

தாமிரபரணியும், கடைவீதியும்தான் எங்கள் ஊர் சொல்லும் பெருமைக்குரிய விஷயங்கள். வேறென்ன சொல்ல?

- இப்பதிவை எழுதத் தூண்டிய சகோ. சசிகலாவுக்கு மனமார்ந்த நன்றி.

இந்தப் தொடர் பதிவிற்கு கீழ்க்கண்ட 3 நபர்களை மட்டும் அழைக்கிறேன்.

1. சகோ. ரியாஸ் - http://riyasdreams.blogspot.in
2. தனசேகரன் - http://sekar-thamil.blogspot.in
2. என் ராஜபாட்டை ராஜா - http://rajamelaiyur.blogspot.in/

(சகோ. சசிகலா என்னை மன்னிக்கவேண்டும். நேரமின்மையால் நீங்கள் கேட்டுக் கொண்டபடி 10 பேரை என்னால் இந்த தொடர் பதிவிற்கு அழைக்கமுடியவில்லை)

.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

39 comments:

  1. சொந்த அழகாக மிகச்சுருக்கமாக கூறியிருக்கிறீர்கள்..

    என்னையும் தொடர்பதிவெழுத அழைத்ததற்கு மிக்க நன்றி..

    ஆனாலும் இந்தப்பதிவை இன்னொருவர் அழைத்ததன் பேரில் முன்னமே எழுதிவிட்டேன்..

    http://riyasdreams.blogspot.com/2011/07/blog-post_23.html

    ReplyDelete
  2. நதி பற்றிய தங்கள் கவிதையை முன்பே படித்து ரசித்திருந்தேன். ஊர் பற்றிய அழகைச் சொல்லும்போதே பெருமிதம் வழியும் எழுத்துக்களைக் காண்கிறேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அவங்கவங்க ஊரைப் பத்திச் சொல்லும் போது வார்த்தைகளில் பரவசமும், பெருமையும் உள்ளடங்கி விடுகின்றன இயல்பாகவே. உங்கள் எழுத்திலும் அதைப் பார்த்தேன் துரை. நன்று!

    ReplyDelete
  4. வணக்கம் சகொ,
    சொந்த ஊரின் பெருமையினைச் சொல்லும் அருமையான பதிவினை கொடுத்திருக்கிறீங்க.
    ஏரல் கிராமத்தினையும், அதனூடே செல்லும் தாமிரபரணியையும் ரசிக்க நாமும் வர வேண்டுமே எனும் உணர்வினை இப் பதிவு கொடுத்திருக்கிறது.
    நன்றி.

    ReplyDelete
  5. சலசலக்கும் நதி. கலகலக்கும் கடைவீதி .
    அகக்கண் முன் அழகாக விரிகிறது உங்கள் ஊர் .
    சுருக்கமான வர்ணனையில் நெருக்கமாகிப் போனது அது.
    நான் உங்களுக்கு நேர் எதிர்த் திசையில் .. அதாவது
    இப்போது தான் கவிதையுடன் கூட பல்சுவைப் பதிவுகள் இட
    ஆயத்தமாகி வருகிறேன்.

    ReplyDelete
  6. சுறுக்கமாக இருந்தாலும் உங்கள் ஏரல் அழகாக இருக்கிறது...

    சொந்த ஊரைப்பற்றி எழுதுவதே ஒரு தனி சுகம் தான் எழுத எழுத நிச்சயம் உங்கள் ஊர் நினைவு மனதில் நிறைந்திருக்கும்...

    தொடர்பதிவெழுதியற்கு மிக்க நன்றி... ( இந்த தொடரை ஆரம்பித்தவன் என்ற முறையில்)

    ReplyDelete
  7. என் அழைப்பை ஏற்று பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரர் துரைடேனியல் அவர்களே .
    அழகாக உள்ளது உங்கள் ஊர் சகோ . கண்ணில் வந்து போகிறது . ஆற்றங்கரையில் அமர்ந்தால் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு ஆனந்தமாய் இருக்கும். எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றல்லவா அது , உங்கள் கடை வீதியை காண ஆவல் கூடுகிறது . அருமை அருமை .
    நதி பற்றிய தங்கள் கவிதையை முன்பே படித்து ரசித்திருந்தேன்

    ReplyDelete
  8. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உங்கள் ஊரைக் கடந்து உமரிக்காடு செல்வதுண்டு. சேர்மன் கோவிலும் அதை ஒட்டிய தாமிரபரணி ஆறும் அந்த நீண்ண்ண்ண்ட பாலமும் அழகுதான்.

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே,
    சிறுவயதில் இருந்து ஆற்றுமணலை தோண்டி விளையாடிய
    இடம். ஏரல் என்ற பெயர் கேட்டதுமே.. அப்படியே எனக்கு
    சந்திரா தியேட்டர் ஞாபகம் வருகிறது...
    மறக்க முடியவில்லை நினைவுகளை..

    ReplyDelete
  10. இந்த கோடை விடுமுறைக்கு பிள்ளாஇகளுடன் உங்க ஊருக்குதான் வரப்போறேன் அண்ணா.

    ReplyDelete
  11. மிக்க மகிழ்ச்சி தோழரே.என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு.என் சொந்த ஊர் சிவகாசி.அதை பற்றி எழுத வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.விரைவில் எதிர் பாருங்கள்...

    ReplyDelete
  12. நீங்கள் உங்கள் ஊரின் அழகைப்பற்றி சொல்லும்போது
    ஹும்.... கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லத்தான் தோன்றுகிறது :)

    ReplyDelete
  13. சொந்த ஊர் பற்றிச் சொல்வதென்றால் மிக்க சந்தோஷம் தானே... சுருக்கமாய்ச் சொன்னாலும் சுவைபட சொல்லி இருக்கீங்க நண்பரே.... வாழ்த்துகள்

    ReplyDelete
  14. ஏரல் வந்திருக்கிறோம். நல்ல ஊர்.
    நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. எங்க ஊரா நீங்க நமக்கு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம்

    ReplyDelete
  16. எங்க ஊர் எங்க நாடுன்னு சொல்லும்போதே மனதின் சந்தோஷம் அத்தனைதான்.உங்களோடு சேர்ந்து உங்கஊரைச் சுத்தினமாதிரி ஒரு நினைப்பு !

    ReplyDelete
  17. @ ரியாஸ்

    - அப்படியா சகோ. ஓ.கே. பரவாயில்லை. நன்றி தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்.

    ReplyDelete
  18. @ கணேஷ்

    அப்படியா கணேஷ் சார்? நன்றி தங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்.

    ReplyDelete
  19. @ நிரூபன்

    - வாங்க சகோ. எங்க ஊருக்கு வாங்க. வரக்கூடிய காலம் வரும். வரவேற்கிறேன். தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  20. @ ராஜபாட்டை ராஜா

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  21. @ ஸ்ரவாணி

    - அப்படியா? பல்சுவைப் பதிவுகளை எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம். தங்களின் வருகைக்கும் அழகான விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  22. @ சங்கவி

    - தங்கள் முதல் வருகைக்கும் அருமையான அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. தாங்கள்தான் இந்த சொந்த ஊர் தொடர் பதிவை ஆரம்பித்தவரா? அழகான அருமையான சிந்தனை. எல்லாருடைய சொந்த ஊரைக் குறித்தும் அறிந்து கொள்ளலாமே? அருமையான யோசனை. நன்றி.

    ReplyDelete
  23. @ சசிகலா

    - ஓ.கே. சகோ. என் கவிதையையும் படித்திருக்கீறீர்களா? அதற்கும் ஒரு நன்றி. அத்தோடு இந்த பதிவிற்கும் வருகை தந்து அழகான பின்னூட்டம் இட்டீர்களே அதற்காகவும் ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ்.

    ReplyDelete
  24. @ Ponchandar

    - தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி. நீங்களும் நம்ம ஊரு பக்கமுங்களா? ரொம்ப சந்தோசமுங்க. உங்களுக்கு உமரிக்காடா? ஆஹா...ரொம்ப பக்கம் வந்திட்டீங்க. பார்க்கலாம். வாய்ப்பிருந்தால் சீக்கிரம் சந்திக்கலாம். நன்றி.

    ReplyDelete
  25. @ மகேந்திரன் சொன்னது //சிறுவயதில் இருந்து ஆற்றுமணலை தோண்டி விளையாடிய
    இடம். ஏரல் என்ற பெயர் கேட்டதுமே.. அப்படியே எனக்கு
    சந்திரா தியேட்டர் ஞாபகம் வருகிறது...
    மறக்க முடியவில்லை நினைவுகளை..//

    - ஆஹா.. எனது ஞாபகத்தையும் கிளறிட்டீங்களே! உண்மைதான் மகி சார். மணலில் வீடு கட்டியது, பொங்கலுக்கு ஆற்று மணலில் பட்டம் விட்டது. அதற்காக சண்டை போட்டது. தேக்குக் காட்டுக்குள் விளையாடியது. ஆற்றில் குளித்தது என்ற அத்தனையும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள். அந்த காலங்கள் திரும்பி வராதா என்று ஏங்குகிறேன்.

    ReplyDelete
  26. @ மகேந்திரன்
    - உங்களைப் போலவே என்னாலும் சந்திரா தியேட்டரையும் மறக்க முடியாது சார். இன்றைக்கும் அங்கே 5 ரூபாய் டிக்கெட் இருக்கிறது. சொன்னால் உலகம் நம்புமா? ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமே. அந்த தியேட்டரில் சிறு வயதில் பார்த்த படங்கள் எல்லாமே பசுமையாக நினைவிருக்கிறது. தற்போது சில வருடங்களாத்தான் திரைப்படங்கள் பார்ப்பதையே விட்டுவிட்டேன். மலரும் நினைவுகள் சார்.

    தங்கள் வருகைக்கும் அழகான உற்சாகமான மலரும் நினைவுகளை கீறிவிட்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  27. @ ராஜி சொன்னது //இந்த கோடை விடுமுறைக்கு பிள்ளாஇகளுடன் உங்க ஊருக்குதான் வரப்போறேன் அண்ணா. //

    - வாங்க. வாங்க ராஜி. என் அன்புத் தங்கையை வரவேற்கிறேன். கோடையை குடும்பமா அழகா கொண்டாட வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  28. @ Dhanasekaran

    - அப்படியா? உங்க ஊரு சிவகாசியா? எழுதுங்க உங்க ஊரைப்பத்தி. தெரிஞ்சுக்கறோம். தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  29. @ வேர்கள்

    - தொடரும் உங்கள் ஆதரவுக்கும், அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. டைம் இருந்தா எங்க ஊருக்கு வாங்க. அழகை ரசிக்கலாம்.

    ReplyDelete
  30. @ வெங்கட் நாகராஜ்

    - வருகைக்கும் வாழ்த்துக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  31. @ Rathnavel Natarajan

    - அப்படியா? ஏரலுக்கு வந்திருக்கிறீர்களா? ஓ.கே. நேரம் இருந்தால் மறுபடியும் வாங்க சார். அப்புறம் தொடரும் தங்கள் ஆதரவுக்கும், அழகான கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  32. @ பிரேம். சி சொன்னது //எங்க ஊரா நீங்க நமக்கு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் //

    - அப்படியா? உங்களுக்கு ஓட்டப்பிடாரம் தானா? ஆச்சர்யமா இருக்கே. ரொம்ப பக்கத்துலதான் இருக்கீங்க. உங்க ஊருக்காரரு ஒருத்தரு மாடசாமின்னு பேரு. என்கூட எங்க ஆபிசுல கிளார்க்கா வேலை பார்க்கறாரு. தெரியுமா? ஓ.கே. தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  33. @ ஹேமா சொன்னது //எங்க ஊர் எங்க நாடுன்னு சொல்லும்போதே மனதின் சந்தோஷம் அத்தனைதான்.உங்களோடு சேர்ந்து உங்கஊரைச் சுத்தினமாதிரி ஒரு நினைப்பு !//

    - அப்படியா ஹேமா! வாய்பிருந்தால் நேரிலும் சந்திக்க இறைவன் அருள்புரிவாராக! தொடரும் ஆதரவுக்கும், வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  34. >>. சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டு வாங்கியும் கட்டிக் கொண்டிருக்கிறேன்.

    haa haa நீங்களுமா? அவ்வ்வ்

    ReplyDelete
  35. ஏரல் அழகான் ஊர்!
    இரண்டு முறை நான் வந்திருக்கிறேன்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  36. எந்த ஊரானாலும் அந்த நம்மூரைப் போலாகுமா?கச்சிதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  37. என்ன..தங்கம் கம்மி விலைல கிடைக்குமா? நமக்கு ஒரு அரை கிலோ பார்சல் பண்ணிடுங்க டேனியல்.

    ReplyDelete
  38. சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப் போலாகுமா.. ஊரையும் அங்கே சுத்தித் திரிஞ்ச சிறுபிராய நினைவுகளையும் அசை போடுவதே தனி சுகம்..

    நதிக்கரையோர ஊர்ன்னாலே நினைவுகளும் மனசுல ஈரமாவே தங்கிருது போல இருக்கு.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.