Tuesday, November 29, 2011

சிகரெட் - சில உண்மைகள்

நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்குத்தான். புகை பிடிப்பவர்கள் தங்கள் பணத்தையும் தங்கள் நுரையீரலையும் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். மற்ற பழக்கங்களை விடுகிறது போல இப்பழக்கத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிகிறதில்லை. பலர் இப்பழக்கத்தை விட்டுவிட நினைக்கிறார்கள். ஆனால் முடிவதில்லை. ஜெயிக்கிற சதவீதத்தை விட தோற்கிற சதவீதமே மிக அதிகம்.

ஏன் பலர் இதில் தோல்வியடைகிறார்கள்?
மனஉறுதி இல்லாதது மட்டுமே இதற்குக் காரணமா? இல்லை இல்லை. நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் சிகரெட்டுக்கு அடிமையானவர்கள் அதன் பிடியிலிருந்து மீள்வதென்பது எமனின் பிடியிலிருந்து மீள்வதுதான்.

நம்முடைய மூளையில் நிறைய நுண்ணிய உணர்கடத்திகள் (Receptors) உள்ளன. அவற்றில் சில வகைதான் இந்த நிகோடின் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் உள்ளன. நீங்கள் புகை பிடிக்கும்போது சிகரெட்டின் நிகோடின் ஆனது இந்த உணர்கடத்திகளிடம்தான் முதலில் செல்கிறது. பின்னர் இந்த உணர்கடத்திகள் நமது மூளையின் மற்றொரு பகுதியான டோபாமின் (Dapomine) என்ற உணர்கடத்திகளுக்கு இந்த நிகோடினை அனுப்புகிறது. இந்த டோபாமின்கள் தான் நமக்கு சந்தோஷத்தை தருகிற உணர்கடத்திகளாகும். ஆனால் இந்த டோபாமின்கள் இந்த நிகோடினால் உண்டாகும் சந்தோஷத்தை வெகுநேரம் தன்னிடம் வைத்திருக்காமல் துப்பி விடுகிறது. மேலும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அந்த சந்தோஷத்திற்காக ஏங்கத் துவங்கி விடுவதால் நமக்கு மீண்டும் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடுகிறது.

தற்போது விஞ்ஞானிகள் ஒரு புதிய உணர்கடத்திகளை (Verenicline) செயற்கையாக உற்பத்தி செய்ய தீவிரமான ஆராய்ச்சியில் இருக்கிறார்கள். இந்த வெரனிக்ளின்கள் மார்க்கட்டுக்கு வந்துவிட்டால் உங்கள் பாடு கொண்டாட்டம்தான். ஏனென்றால் அதன்பிறகு சிகரெட் விடுவதை எளிதில் நிறுத்திவிட முடியும். இவை டோபாமின்களின் சந்தோஷ உணர்வுகளின் உற்பத்தியை தடுத்துவிடக் கூடிய திறன் பெற்றவை. ஆகையினால் நீங்கள் சிகரெட் பிடித்தாலும் அதன் மூலம் திருப்தி கிடைக்காது. மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இவற்றைப் பயன்படுத்தும்போது நிச்சயமாக நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவீர்கள். (வேண்டாத பொண்டாட்டி கூட எத்தனை நாள் சார் வாழ முடியும்?). அதுவரைக்கும் காத்திருக்கப் போறீங்களா? மனஉறுதியோட இப்பழக்கத்தை விட முயற்சி பண்ணுங்க சார்.

சரி. இப்போது சிகரெட்டைக் குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகளை பார்க்கலாம்.

1. ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கும் ஒரு மனிதன் சிகரெட்டினால் மரணடைகிறான்.

2. சிகரெட்டின் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கே 25 வருடங்கள் ஆகுமாம் (மக்கா ஜாக்கிரதை).

3. நீங்கள் புகைக்கும் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்களை குறைத்துவிடுமாம்.

4. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆங்கிலத்தில் சிகரெட் என்ற வார்த்தை கிடையாது. அதற்கு முன்பெல்லாம் சிகரட் போன்ற பானங்களை குடிப்பார்களாம். அதாவது பருகும் சிகரெட்.

5. மருத்துவ காரணங்களுக்காக கி.பி. 1559-ல் பிரான்சில் உள்ள பிரெஞ்சுத்தூதர் நிகோட் என்பவர்தான் இந்த நிகோடினை கண்டுபிடித்தார். (இப்படில்லாம் ஆகுமுன்னு தெரிஞ்சிருந்தா கண்டு பிடிச்சுருக்கமாட்டார் இல்ல)

6. தென் அமெரிக்க மக்கள் புகையிலையை 2000 வருடங்களுக்கு முன்பே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பிரேசில்காரர்கள்தான் இந்த சிகரெட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

7. முதன் முதலில் இதை பிரபலமாக்கியவர்கள் ஐரோப்பிய மாலுமிகளே.

8. உலகிலேயே அதிகம் சிகரடெ; புகைப்பவர்கள் கிரீஸ் நாட்டுக்காரர்கள்தான். அங்கு வயதுக்கு வந்த ஒரு வாலிபன் வருடத்திற்கு 3000 சிகரெட்டுகளை புகைத்துத் தள்ளுகிறானாம். (நீங்க எப்படி?)

சரிங்க. சிகரெட்டை பத்தி நிறைய விஷயங்களைச் சொல்லிவிட்டேன். இதைப் படிச்ச நீங்க மனஉறுதியோட இந்த பழக்கத்தை விட்டுட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். செய்வீங்களா?

மறுபடியும் சந்திப்போம் – அடுத்த பதிவில்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

44 comments:

  1. அருமையான உபயோகமான தகவல் நண்பரே

    தமிழ் மணம் முதல் வாக்கு

    ReplyDelete
  2. நீங்கள் புகைக்கும் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்களை குறைத்துவிடுமாம்.//

    புகைப்பவர்கள் உணர்வார்களா ?

    ReplyDelete
  3. Hi there,

    Verenicline is already available in market. Manufactured by pfizer and sold in the name of champix in India. I was a smoker for 20 years, and now an ex-smoker for past 6 months after taking champix. Pls consult your physician before taking this pill.
    With love,
    mp

    ReplyDelete
  4. இது புகைப்பரை மாத்திரமன்றி, தன்னை அழித்ததற்காக, அவருடன் பக்கத்தில் இருந்து சுவாசித்தவரையும் சேர்த்துப் பழிவாங்குமாம்.

    ReplyDelete
  5. ஒரு விழிப்புணர்வு பதிவு..

    பகிர்வுக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.
    நான் புகை பிடிப்பதில்லை!

    ReplyDelete
  7. Varugaikkum pakirvukkum nanri Sago. M.R.
    Unga blog la ennaala pinnoottam ida mudiyala. Seekkiram vazhi kandupidikkiren.

    ReplyDelete
  8. Varugaikkum pakirvukkum nanri Sago. Anonymous. Market ku vanthuttaa. Thagavalukku nanri.

    ReplyDelete
  9. Varugaikkum thagavalukkum nanri Sago. Johan Paris.

    ReplyDelete
  10. Varugaikkum pakirvukkum nanri Sago. Vedanthangal Karun.

    ReplyDelete
  11. Varugaikkum pakirvukkum nanri Sago. Chennaipithan.

    ReplyDelete
  12. பயனுள்ள பகிர்வு. சிகரட் புகைக்கும் நண்பர்களுக்கு உறைத்தால் நல்லது

    ReplyDelete
  13. அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அருமையான தகவல்கள்.கவனத்துக்கு எடுத்துக்கொண்டால் எவ்வளவு நல்லது தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் !

    ReplyDelete
  15. Thangal muthal varugaikkum karuthuraikkum nanri Sago. Mohankumar.

    ReplyDelete
  16. நானும் கூட என் ஆயுளில் நிறைய பதினோரு நிமிடங்களை தொலைத்திருக்கிறேன்... இப்போது நிறுத்திவிட்டேன்...

    ReplyDelete
  17. எச்சரிக்கை பதிவு.... எல்லா திரட்டியிலும் ஓட்டு போட்டாச்சு...

    ReplyDelete
  18. Thangal varugaikkum pakirvukkum nanri Sago.Philosophy Prabakaran.

    ReplyDelete
  19. என் அப்பா புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர். உங்க பதிவை படிக்க சொல்லியிருக்கேன். அம்மா, நான் சொல்லி புகையை விடாதவர் இதை படித்துவிட்டு திருந்தினால் சரி. பகிர்வுக்கு நன்றி சகோதரா!

    ReplyDelete
  20. Thangal varugaikkum pakirvukkum Vaakkukalukkum nanri Sago.Sasikumar.

    ReplyDelete
  21. Raji said//என் அப்பா புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர். உங்க பதிவை படிக்க சொல்லியிருக்கேன். அம்மா, நான் சொல்லி புகையை விடாதவர் இதை படித்துவிட்டு திருந்தினால் சரி. பகிர்வுக்கு நன்றி சகோதரா!//

    Appadiya Sago.Raji. Romba nanri.Romba Santhosam. Varukakkum Pakirvukkum nanri.

    ReplyDelete
  22. // அதுவரைக்கும் காத்திருக்கப் போறீங்களா? மனஉறுதியோட இப்பழக்கத்தை விட முயற்சி பண்ணுங்க சார்.//


    முத்தான கருத்து இவ் வரிகளே!
    புகைப்பவர் உடன் கையாளுவது நன்று!
    நல்ல, தேவையான பதிவு!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. புலவர் இராமாநுஜம் said // அதுவரைக்கும் காத்திருக்கப் போறீங்களா? மனஉறுதியோட இப்பழக்கத்தை விட முயற்சி பண்ணுங்க சார்.//
    நன்றி அய்யா. தங்களது வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  24. புலவர் இராமாநுஜம் said // முத்தான கருத்து இவ் வரிகளே!
    புகைப்பவர் உடன் கையாளுவது நன்று!
    நல்ல, தேவையான பதிவு!
    .//
    நன்றி அய்யா. தங்களது வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  25. Thangal varugaikkum karuthuraikkum mikka nanri Sago. Munaivar. Gunaseelan avargale.

    ReplyDelete
  26. பயனுள்ள ஆனால் எனக்கு பயனில்லாத பதிவு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  27. Appadiya Sago.Sibi. Neenga avvalo Nallavaraa??!!..
    Avvvv.....

    ReplyDelete
  28. சீக்ரெட்டா சிகரெட் பிடிக்கறாங்க சிலபேரு...இதைப்படிச்சாவது திருந்தணும் நல்ல இடுகை.

    ReplyDelete
  29. அரிய தகவல்கள்
    அறிந்து கொள்ளவேண்டிய தகவலகள்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 12

    ReplyDelete
  30. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  31. சிகரெட் பற்றிய விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.... நாமே நம்மை திருத்தனும். அடுத்தவங்களால முடியாது.


    எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
    வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

    ReplyDelete
  32. Varugaikkum pakirvukkum nanri Sago.Tamilvasi prakash. Ungal sontha domain lum thodarvom. Vaalthukkal.

    ReplyDelete
  33. இந்த மாதம் விகடன் யூத் விகடனில் உங்கள் பதிவு வந்துருகிறது வாழ்த்துகள்.............

    ReplyDelete
  34. சிகரெட் சில உண்மைகள். நல்ல பதிவு. சிகரெட் மற்றும் மது பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக பரவியிருப்பது வருத்தத்தைத்தருகிறது.

    ReplyDelete
  35. cigarettal heartattack vandhu ippothu padukkaiyil athi16661@gmail.com

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.