Friday, April 13, 2012

அரிசி ஒயின் (Rice Wine) சாப்பிட்டிருக்கிறீர்களா?

நம்முடைய உடல் கொழுப்பு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Sugar), உடல் பருமன், தோல் பிரச்சினைகள் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் அருமையான மருந்துதான் இந்த அரிசி ஒயின் ஆகும். உணவே மருந்து என்று சொல்வார்களே அதுதான் இது. இந்த உணவு மிகச் சிறந்த மருந்தாகும். வயது வந்தவர்கள் மட்டுமல்ல. குழந்தைகளும் இதைச் சாப்பிடலாம். சீனா, கொரியா, ஜப்பான் தேசங்களில் இன்றும் பயன்படுத்தப் பட்டு வருகிற உணவாகும் இது. இதை எப்படித் தயார் செய்வது பார்க்கலாம்.

செய்முறை:

1. ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் போதுமான அளவு அரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேருங்கள். கஞ்சி போன்ற பதம் வருமாறு தண்ணீரின் அளவு இருக்கட்டும். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.




2. இப்போது அதனுடன் சிறிதளவு ஈஸ்ட் சேருங்கள். பேக்கரியில் கேக் தயாரிப்பதற்கு பயன்படுத்துவார்களே அதே ஈஸ்ட் தான்.

3. இப்போது அந்த கண்ணாடிப் பாத்திரத்தை காற்றுப் புகாதவாறு இறுக்க மூடி விடுங்கள். உலோக மூடி அல்லது பாலித்தீன் பேக் கொண்டு மூடி விடலாம். அறை வெப்பநிலையில் மூன்று அல்லது நான்கு நாட்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

4. மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்து அந்த அரிசிக் கஞ்சியை திறந்து பாருங்கள். அது நன்றாக உருகி தண்ணீரைப் போல் மாறியிருக்கும். ஒயினைப் போல் ஒரு வாடை அடிக்கும். அப்படியானால் உணவு தயாராகி விட்டது என்று பொருள்.

5. இப்போது அந்த உணவுடன் தேனையோ அல்லது சர்க்கரையையோ போதுமான அளவு சேருங்கள். இப்போது அது இனிப்பான ஒயினைப் போல் அல்லது பால் உணவைப் போல் இருக்கும்.

இதுவே இந்த ஆரோக்கிய பானத்தை தயார் செய்யும் முறையாகும். மங்கோலியா, சீனா, கொரியா மற்றும் ஜப்பான் தேசங்களில் இதைச் சாப்பிடுகிற மக்கள் மேற்கண்ட கோளாறுகளுக்கு இது அற்புதமான மருந்தாகும் என்று சாட்சி சொல்கிறார்கள். தைரியமாக சாப்பிடலாம். பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்றும் சொல்கிறார்கள் அம்மக்கள். ஒரு தடவை சாப்பிட்டாலே இதன் மருத்துவக் குணம் அற்புதமாக வெளிப்படுவதாக சொல்கிறார்கள். நாமும்தான் சாப்பிட்டுப் பார்ப்போமே.



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

37 comments:

  1. நம்ம ஊருல செயற சண்ட கஞ்சி போல இருக்கு ...

    ReplyDelete
  2. @ ராஜபாட்டை ராஜா

    - வாங்க ராஜா சார். ஆமா உண்மைதான். நாம எப்பவோ செய்த சமாச்சாரங்களைத்தான் இவங்க இப்ப புதுசா மருந்துன்னு கண்டுபிடிக்கிறாங்க. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நம் ம ஊர் அரிசி கஞ்சிபோல்
    பார்வைக்குத் தெரிந்தாலும் இதன்
    பலன் அதிகம் என நினைக்கிறேன்
    நிச்சயம் செய்து பார்க்கிறோம்
    பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. நீங்க செஞ்சு சாப்பிட்ட அனுபவத்தை சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  5. சார்....போதை வராதே...!ஹிஹி! எதுக்கு கேட்கிறேனா கேரளா நண்பர் நெல்லிக்காய் ஒயின் தயார் செய்து கொடுத்தார் அதுவும் மருத்துவ குணமுடையது! என் பையன் பிரிட்ஜ்ல இருக்கிற ஜுஸ் என்று நிறைய குடிக்க மட்டையாகிட்டான்...ஹஹஹ

    ReplyDelete
    Replies
    1. ஹஹ்ஹஹ்ஹாஹா.
      சரி சரி அதை எப்படி மொதல்ல சொல்லுங்க

      Delete
  6. எங்களுக்கு முதலில் கொடுத்து டெஸ்ட் பண்ணுறீங்களா....

    ReplyDelete
  7. முயற்சி செய்கிறோம் .

    ReplyDelete
  8. சாப்பிட்டு பார்த்திருவோம் நண்பரே...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அண்ணே ஏதும் வில்லங்கம் ஆகிடாதே?! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா.

    ReplyDelete
  10. செய்து பார்த்து சாப்பிட்டு விட்டு சொல்கிறேன் நண்பரே ! நன்றி !

    ReplyDelete
  11. உணவே மருத்துவம்/நல்ல பகிர்வு. நன்றி, வணக்கம்.

    ReplyDelete
  12. @ ரமணி

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
    Replies
    1. துரை டேனியல் சார், சுண்டக்கஞ்சி செய்முறையை விளக்கமுடியுமா?

      Delete
  13. @ தமிழ்வாசி பிரகாஷ்

    - நான் செஞ்சு சாப்பிட்டிருக்கேன் சார். நல்லாத்தான் இருக்கும். பயப்படாமே சாப்பிடுங்க.

    ReplyDelete
  14. @ வீடு சுரேஷ்குமார்

    - பயப்படாமே சாப்பிடலாம் சார். ஆரம்பத்தில் நீங்க மட்டும் சாப்பிடுங்க. போதை வரலேன்னா சின்ன பசங்களுக்கு கொடுக்கலாம். (ஹி...ஹி...)

    ReplyDelete
  15. @ Arouna Selavame

    - அப்படித்தான்னு வச்சிக்கோங்களேன். (ஹி...ஹி..!)

    ReplyDelete
  16. @ கவிதை வீதி சௌந்தர்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  17. @ சசிகலா

    - அப்படியா. நன்றி சகோ.

    ReplyDelete
  18. @ மகேந்திரன்

    - தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  19. @ ராஜி

    - ஒண்ணும் ஆகாது சகோ. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  20. @ திண்டுக்கல் தனபாலன்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  21. @ விமலன்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  22. ஒயின் என்ற வார்த்தையே வேண்டாம்ப்பா நமக்கு! சா இராமாநுசம்

    ReplyDelete
  23. @ புலவர் சா இராமாநுசம்

    - பயமில்லை அய்யா. பேருதான் ஒயின். ஆனால் ஒயினைப் போல அல்ல. ஆனாலும் மனசுக்கு ஒப்பவில்லை என்றால் விட்டுவிடுங்கள். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  24. சரி சரி... சிம்பிளாச் செய்யக் கூடியதாத்தான் தெரியுது. ட்ரை பண்றேன் துரை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த நந்தன தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. என்ன சார் வைன் எல்லாம் தயாரிக்க சொல்லுரீங்க...

    ReplyDelete
  26. நல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. நம்ம ஊர் சுண்டக்கஞ்சி மாதிரி இருக்கு சார்

    ReplyDelete
  28. புழுங்கல் அரிசியில் செய்யும் கஞ்சி போல இருக்கிறது பார்க்க!

    தங்களுக்கு தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. @ கணேஷ்
    @ சிட்டுக்குருவி
    @ செய்தாலி
    @ வெங்கட் நாகராஜ்
    @ ரத்னவேல் நடராஜன்

    - அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  30. @ அனைவருக்கும்

    - இதை ஒயின் என்று குறிப்பிட்டது தவறு. மருந்து என்றே சொல்லியிருக்க வேண்டும். அதனால் தவறாக நினைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது. மன்னிக்க.

    ReplyDelete
  31. ஈஸ்ட்டை எதனுடன் சேர்க்க வேண்டும்? வெறும் அரிசியுடனா? அரிசி சோற்றுடனா? எந்த அரிசியைப் பயன்படுத்த வேண்டும்? புழுங்கல் அரிசியா? பச்சை அரிசியா?

    ReplyDelete
  32. @ அனைத்து உள்ளங்களுக்கும்

    - வருகை தந்து வாக்கிட்டு கருத்துரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  33. @ வாலிபள்

    - வாங்க சகோ. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. வெறும் புழுங்கல் அரிசி சோற்றுடன்தான். தாமத பதிலுக்கு சாரி. பின்னூட்டமிட நேரமே கிடைப்பதில்லை. பதிவெழுதவே ததிங்கிணத்தோம் போட்டுத்தான் எழுத வேண்டியிருக்கிறது. இந்த மின்சாரத் தடையும் எனது வேலைப்பளுவும்தான் காரணம்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.