Wednesday, April 4, 2012

பால் குடிக்கும் பாம்புகள்




என் பந்தலெங்கும்
நெளிகின்றன
சாரையும் விரியனும்

பூமி துளைத்து
வெளிவரும்
லாவாப் பூச்சிகள்
பொசுக்கிக் கரைக்கின்றன
என் மேனியை

அடி முதல்
முடி வரை
நாற்ற வெள்ளம்

நக்கி நக்கி
பால்குடித்த
என் பாம்புகள்

என் கருப்பையையே
அழிக்க தீர்மானித்த வேளையில்
விஸ்வரூபம் கொண்டது
என் கழுகு

வேட்டை வேட்டை
எங்கும் வேட்டை
ஒரு பிரளயப் போர்...

இப்போது
சுத்தமாகிவிட்டது
என் கோயில்
பூஜை நேரம்
பின்னர் அறிவிக்கப்படும்.




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

14 comments:

  1. இப்போது
    சுத்தமாகிவிட்டது
    >>>
    சுத்தமாகிவிட்டதா?! ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
  2. உணர்வுகள் விழித்துக்கொண்டால்..
    செம்மையாக வாழலாம்..
    இல்லையேல் சிற்றுயிராய் போய்விடுவோம்
    என்று அழகுற உரைத்துநிற்கும் கவிதை...

    ReplyDelete
  3. நல்ல கவிதை.....

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. வேட்டை வேட்டை
    எங்கும் வேட்டை
    ஒரு பிரளயப் போர்...
    ஆதங்க வரிகள் அருமை .

    ReplyDelete
  5. நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. ''...என் கருப்பையையே
    அழிக்க தீர்மானித்த வேளையில்
    விஸ்வரூபம் கொண்டது
    என் கழுகு..''
    சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதோ.!..பாதி புரிந்தும் புரியாமல்....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. அனைவருக்குள்ளும் சீறும் நாகம் குறித்தும்
    சிறகு விரித்து எழவேண்டிய கழுகு குறித்தும்
    நினைவிறுத்திப் போகுது பதிவு அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மனதுக்குள் ஏதோ அகோரம் வார்த்தைகளாய் !

    ReplyDelete
  9. சுத்தங்கள் எப்போதும் ஆக்கப்படுவதுதானே?

    ReplyDelete
  10. என் பந்தல், என் மேனி, என் பாம்புகள், என் கழுகு, என் கோயில் எல்லாமே என்னைச் சார்ந்தே அமையும் தத்துவம் யோசிக்கவைக்கிறது. தீக்குணமும் நற்குணமும் நம்மிடத்தில்தான் என்பதைப் பறைசாற்றுகிறதோ கவிதை? எனக்குப் புரிந்தவரை கவிதை சார்ந்திருக்கும் கரு மிகவும் அபாரம். பாராட்டுகள்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.