Wednesday, April 18, 2012

சேலை உரியும்வரை...

நிறம் மாறும் சிகரம்
குணமும் மாற்றி அனல் உமிழும்
கொதித்தெழுந்த பூமிக்கயிறு
உயிரினம் கட்டி ஓயும்

காற்றின் நிறம் மாற்றும்
காற்றின் சுவை கசக்கும்
தூசிப்போர்வை போர்த்த
பூமியுடல்
தொலைந்த சிறுமிபோல்
நடுங்கும்

பூமியா ஆகாயமா
இனம்காணா
பறவைகள்
கண்சுருக்கி கவிழும்

கண்ணவிந்த
விமானக் காதலர்கள் மோதி
மேகப் பெண்கள்
கற்பிழத்தல் நடக்கும்

பொருளாதாரத் தாடை வீங்கி
பணவீக்க தைராய்டு முளைக்கும்
அடுத்தடுத்த அரசியல் ஆலோசனைகள்
நேரம் விழுங்கும்
காரியமில்லை
காரணம் சாத்தியமில்லை

தன் விஞ்ஞான அழுக்குக் கையை
நீட்டி நீட்டி
பூமிப் பெண்ணின்
சேலை உரியும்வரை...

தொடரும்
இந்த ஆங்காரத்தை
சகித்துத்தான் ஆகவேண்டும்
இந்த அவதாரங்களை
பொறுத்துத்தான் ஆகவேண்டும்..

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

19 comments:

 1. பொருளாதாரத் தாடை வீங்கி
  பணவீக்க தைராய்டு முளைக்கும்

  ஆழமாகச் சொன்னீர்கள் அன்பரே.

  ReplyDelete
 2. தொடரும்
  இந்த ஆங்காரத்தை
  சகித்துத்தான் ஆகவேண்டும்
  இந்த அவதாரங்களை
  பொறுத்துத்தான் ஆகவேண்டும்.


  உண்மை.

  ReplyDelete
 3. கண்ணவிந்த | விமானக் காதலர்கள் மோதி | மேகப் பெண்கள் | கற்பிழத்தல் நடக்கும். உவமைக் கவிஞர் துரை அசத்திட்டார். பொறுமை ஒன்றினால்தானே மனிதர்கள் வாழ்கிறார்கள். மனதில் நின்றது கவிதை.

  ReplyDelete
 4. //கண்ணவிந்த
  விமானக் காதலர்கள் மோதி
  மேகப் பெண்கள்
  கற்பிழத்தல் நடக்கும்//.

  நல்ல கவிதை.... வாழ்த்துகள்

  ReplyDelete
 5. அத்துமீறலாய் போன குளறுபடிகளால்
  இன்றை வாழ்வாதாரம் சிதைந்து இருப்பதை
  ஆதங்கத்துடன் சொல்லிய விதம் அருமை..

  ReplyDelete
 6. மிக நல்ல சொல்லாடல். அருமை. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 7. ம்ம்ம்......
  உண்மைதான் சார்

  ReplyDelete
 8. என்ன துரை சார் எப்படியிருக்கீங்க..கவிதை பிடித்தது..வர்ணிப்புகள் ரசிக்க வைத்தது..

  ReplyDelete
 9. இந்த ஆங்காரத்தை
  சகித்துத்தான் ஆகவேண்டும்
  இந்த அவதாரங்களை
  பொறுத்துத்தான் ஆகவேண்டும்.// பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா ?

  ReplyDelete
 10. oru naal!
  ivarkal mukathirai kizhiyum!

  ReplyDelete
 11. ஆதங்கம்மட்டும்தான்.அடுத்து என்ன செய்வது !

  ReplyDelete
 12. பொறுத்துப் பொறுத்துத் தான் புமி
  நன்றாக ஆள்கிறாள் நம்மை...

  கவிதையின் கரு அருமை துரை அவர்களே!

  ReplyDelete
 13. தொடரும்
  இந்த ஆங்காரத்தை
  சகித்துத்தான் ஆகவேண்டும்
  இந்த அவதாரங்களை
  பொறுத்துத்தான் ஆகவேண்டும்.
  >>>
  இதுதான் நமக்கு விதிக்கபட்டதுன்னு ஒதுங்கி போகனும்ன்னு சொல்றீங்களா அண்ணா.

  ReplyDelete
 14. தமிழ்10, இண்டில இயுடான்ஸ்ல இணைச்சுட்டேன் அண்ணா.

  ReplyDelete
 15. சிறந்த சுற்று சூழல் விழிப்புணர்வு கவிதை!

  ReplyDelete
 16. //தன் விஞ்ஞான அழுக்குக் கையை
  நீட்டி நீட்டி
  பூமிப் பெண்ணின்
  சேலை உரியும்வரை...

  தொடரும்
  இந்த ஆங்காரத்தை
  சகித்துத்தான் ஆகவேண்டும்
  இந்த அவதாரங்களை
  பொறுத்துத்தான் ஆகவேண்டும்//

  கவிதை வடிவில் வந்த பாடம்!
  இந்த உலகம் கொள்ள வேண்டியவை!
  நன்று துரை!

  ReplyDelete
 17. @ குணாதமிழ்
  @ கணேஷ்
  @ ராஜபாட்டை ராஜா
  @ நண்டு @ நொரண்டு
  @ வெங்கட் நாகராஜ்
  @ மகேந்திரன்
  @ மதுமதி (நான் நல்லாருக்கேன் சார். நீங்க நலம்தானே?)
  @ சசிகலா
  @ சீனி
  @ கோவைக்கவி
  @ செய்தாலி
  @ ஹேமா
  @ Arona Selvamae
  @ ராஜி
  @ Koodal Bala
  @ புலவர் இராமாநுசம்

  - வருகை தந்து வாக்கிட்டு கருத்துரையிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.