Tuesday, October 28, 2014

நீதியின் குரல்







ரெஹானா!
நீ போய் விட்டாய்
ஆனால் உன் கேள்விகள்
இந்த பிரபஞ்சத்தை இன்னும்
துளைத்துக் கொண்டுதான் இருக்கிறது

பணமும் செல்வாக்கும்
உன் உயிரை வேட்டையாடியிருக்கலாம்
ஆனால் உன் ஏக்கத்தை
உன் கண்ணீரை
அத்தனை எளிதில் மறந்துவிடாது சமூகம்

நீ மரித்துவிட்டாய் என
கயவர்கள் கருதினாலும்
நீ எங்கள் இதயங்களில்
உயிர்த்து விட்டாய்

இனி
பெண்களுக்கெதிராய்
அடக்குமுறை நடக்கும்
எத்தேசத்திலும்
உன் குரல்
நீதியின் குரலாய் ஒலிக்கும்
அதன் சத்தத்தில்
நீதியின் சூரியன்
தினந்தோறும் விடியும்.




.