Thursday, December 5, 2013

சந்திப்பு





இரு விதைகளை விதைத்தேன்
ஆழத்திலும் ஆழமில்லாமலும்
ஒன்று முளைத்தது
ஒன்று துளைத்தது
இரண்டும் சந்தித்தபோதோ
பிணம் மிதந்தது




.

Wednesday, December 4, 2013

நான் நானாகவே




இன்னும் இருட்ட வில்லை
ஆனாலும் தூங்கச் சொல்கிறீர்கள்       
இன்னும் விடியவில்லை
ஆனாலும் பூபாளம் பாடச் சொல்கிறீர்கள்
இன்னும் பூக்கவில்லை
ஆனாலும் பறிக்கச் சொல்கிறீர்கள்
நானாக நீங்கள் மாற
எப்போதும் முயற்சிகள் ஏன்?
நான்
நானாகவே
இருந்துவிடுகிறேனே?



.

Monday, December 2, 2013

போதி மரம்

ஆவென்று திறக்கும்
அந்த
ஏழைச் சிறுவனின்
வாய்க்குள் தெரிகிறது
பசியும் வாழ்க்கையும்



.
என் மவுனங்கள்தான்
உங்கள் வார்த்தை யுத்தங்களை
உடைக்கும் ஆயுதம்

என் பொறுமைதான்
உங்கள் கோபத்தை சிதறடிக்கும்
அணுகுண்டு

என் அமைதிதான்
உங்கள் சலசலப்புகளை துடைத்துப்போடும்
ஜலப்பிரளயம்


இனி
என் வானத்தில்
இருளில்லை
காரணம்
அங்கே
இரவே இல்லை



.

Sunday, December 1, 2013

முகமூடிகள் அழுக்கானவை



போட்டுக்கொள்ள
ஏராளம் முகமூடிகள் இருந்தாலும்
முகமூடிகள் தேவையில்லை

முகமுடையவனாகவே இரு
முகமூடிகள்
வலிக்கும்
உடைக்கும்
பிளக்கும்

உன் பூக்களை கொய்து
பந்தங்களை பற்ற வைக்கும்
சொக்கப்பனையாய் சுட்டெரிக்கும்
வேரறுந்து விழவைக்கும்

முகங்களுக்காக முகமூடிகள் என்றால்
பரவாயில்லை
முகமூடிகளுக்காக முகங்கள் என்றால்

வேண்டாம்
முகமுடையவனாகவே இரு
முகமூடிகள் அழுக்கானவை


.