போட்டுக்கொள்ள
ஏராளம் முகமூடிகள் இருந்தாலும்
முகமூடிகள் தேவையில்லை
முகமுடையவனாகவே இரு
முகமூடிகள்
வலிக்கும்
உடைக்கும்
பிளக்கும்
உன் பூக்களை கொய்து
பந்தங்களை பற்ற வைக்கும்
சொக்கப்பனையாய் சுட்டெரிக்கும்
வேரறுந்து விழவைக்கும்
முகங்களுக்காக முகமூடிகள் என்றால்
பரவாயில்லை
முகமூடிகளுக்காக முகங்கள் என்றால்
வேண்டாம்
முகமுடையவனாகவே இரு
முகமூடிகள் அழுக்கானவை
.
Tweet | |||||
ReplyDeleteமுகங்களுக்காக முகமூடிகள் என்றால்
பரவாயில்லை
முகமூடிகளுக்காக முகங்கள் என்றால்
வேண்டாம்
முகமுடையவனாகவே இரு
முகமூடிகள் அழுக்கானவை//
ஆழமான பொருளுடைய
அற்புதமான கவிதை
தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
பலதடவை வந்து போனேன்
இனியேனும் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்
தங்களது அன்பிற்கு நன்றி சார். தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.
Deletetha.ma 1
ReplyDelete/// முகமூடிகளுக்காக முகங்கள் என்றால்... ///
ReplyDeleteதொடர்ந்து எழுதிட வேண்டுகிறேன்...
நல்லாருக்கீங்களா தனபாலன் சார்? தங்களது அன்பிற்கு நன்றி. தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன். சில இடர்ப்பாடுகள் உண்டு. இருந்தாலும் முயற்சி செய்கிறேன். பல நண்பர்களை மிஸ் பண்ணியிருக்கிறேன்.
Delete” உங்களுக்கு என்ன ஆச்சு? “ என்று நானே மின்னஞ்சல் அனுப்பலாம் என்று இருந்தேன். மீண்டும் வந்ததற்கு நன்றி!
ReplyDelete// முகங்களுக்காக முகமூடிகள் என்றால்
பரவாயில்லை
முகமூடிகளுக்காக முகங்கள் என்றால் //
சிந்தனை வரிகள்! வலைப்பதிவு உலகில் மட்டுமல்லாது வெளி உலகிலும் இந்த முகங்களைக் காண முடிகிறது.
தங்களது அன்பிற்கு மிக்க நன்றி சார். இத்தனை நல்ல உள்ளங்கள் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
ReplyDeleteகுயில் ஒசையை நீண்டடடடடடடடடடடடடடடடடடட் காலத்திற்கு அப்புறம் இன்றுதான் கேட்கிறேன். இனிமையாக இருக்கிறது. துரைடேனியல் இணைய உலகில் மீண்டும் சிறகடிக்க வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்,
ReplyDelete