பொம்மைகளுக்காக
இங்கே நடக்கின்றன
சில நிஜ திருமணங்கள்
மனிதர்களுக்காக
இங்கே நடக்கின்றன
சில போலித்திருமணங்கள்
பொம்மைகளா
மனிதர்களா எனத் தீர்மானிப்பது
சில மிருகங்கள்
சாவைத் தீர்மானிப்பதில் உள்ள
சுதந்திரம் கூட
வாழ்வைத் தீர்மானிப்பதற்கு இல்லை
இந்த சுதந்திர இந்தியத் திருநாட்டில்.
Tweet | |||||