Sunday, July 20, 2014

பொம்மைக் கல்யாணம்

பொம்மைகளுக்காக
இங்கே நடக்கின்றன
சில நிஜ திருமணங்கள்

மனிதர்களுக்காக
இங்கே நடக்கின்றன
சில போலித்திருமணங்கள்

பொம்மைகளா
மனிதர்களா எனத் தீர்மானிப்பது
சில மிருகங்கள்

சாவைத் தீர்மானிப்பதில் உள்ள
சுதந்திரம் கூட
வாழ்வைத் தீர்மானிப்பதற்கு இல்லை
இந்த சுதந்திர இந்தியத் திருநாட்டில்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

4 comments:

  1. சுதந்திரத்தை விடுதலையாக எடுத்துக் கொண்டால்...?

    ReplyDelete
  2. நல்லதுதான்.சகோ. நலம்தானே?

    ReplyDelete
  3. கட்டுப்பாடில்லாத சுதந்திரம் ஆபத்து. எனவே கட்டுப்படுத்துவதை மிருகத்தனம் என்று கூறுவதைவிட அக்கறை என்று கூட கூறலாமே!

    ReplyDelete
  4. வெகுநாட்கள் கழித்து வந்திருந்தாலும் நச்சுன்னு கவிதை படைச்சிட்டீங்க சகோ!

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.