Saturday, January 28, 2012

பால் எப்படி குடிக்க வேண்டும்?




நம்மில் பலருக்கு பாலை எப்போது குடிக்க வேண்டும்? அல்லது எப்படி குடிக்க வேண்டும்? என்று தெரிவதில்லை. உண்ணும் வகையறியாது உண்டால் எதுமே உடலுக்கு ஆகாது இல்லையா? அதற்குத்தான் இந்த பதிவு.

பாலை பகலிலும் அருந்தலாம். இரவிலும் அருந்தலாம். ஆனால் உணவு உண்ட பிறகுதான் குடிக்க வேண்டும்.

பாலைக் குடிக்கும்போது அமைதியாகவும் சிறுகச் சிறுகச் சுவைத்து குடிக்க வேண்டும். அதுவே உடலுக்கு நல்லது. அவ்வாறின்றி மளமளவென குடிப்பது மற்றும் பெரும் அளவில் விழுங்குவது ஆகியவற்றால் வயிற்றில் செரிப்பதில் பிரச்சினை ஏற்படும்.

பாலுடன் சர்க்கரையைச் சேர்த்துக் குடிப்பதால், சர்க்கரை பாலின் தன்மையைக் கெடுத்து, அதை இரைப்பையில் புளிக்கும்படியும் வாயு உண்டாகும்படியும் செய்கிறது. அதனால் சர்க்கரை சேர்க்காமலே குடிப்பது நல்லது.

அப்படியானால் இனிப்பு வேண்டுமே என்ன செய்வது என்று கேட்கிறீர்கள். அப்படித்தானே? அதற்கு ஒரு கரண்டி தேனை கலந்து சாப்பிடலாம். அது உடலுக்கு மிகவும் நல்லது.

பிற நாடுகளைவிட நம் இந்திய நாட்டு மக்கள் உட்கொள்ளும் பாலின் அளவு மிகக் குறைவு என்று ஒரு சர்வே தெரிவிக்கிறது. சைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிகமாக பால் அருந்த வேண்டும்.

மற்ற எல்லா பிராணிகளின் பாலைவிட பசும்பால்தான் உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கிறது. (அப்பாடா....சந்தேகம் தீர்ந்தாச்சா?) அதனால்தான் வீக் ஆக இருக்கும்போது மருத்துவர்கள் இந்த பாலை அருந்தச் சொல்கிறார்கள்.

பால் ஆகாரமாக மாறும்போது குற்றமற்ற இனிய திரவமாகிறது. காயம் பட்டவர்களுக்கும் தாது (Sperm) பலவீனப்பட்டவர்களுக்கும் இது நன்மை தரும்.




களைப்பு, மயக்கம், சுவாச காசம், அதிக தாகம், பசி, இரத்தக் குறைவு இவற்றையெல்லாம் பசும்பால் எளிதில் குணப்படுத்தும்.

பாலிலே 101 வகை நன்மை தரக்கூடிய பொருட்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாலில் புரோட்டின் அதிகமாக உள்ளது. இது உடலின் திசு உற்பத்திக்கும், பராமரிக்கும் உதவுகிறது.

எலும்புகளுக்கு உரமூட்டும் கால்சியமும், உடலில் அதிக அளவில் செல்கள் உற்பத்தியாவதற்கும் பாஸ்பரசும் போதிய அளவு இந்த பாலில் இருக்கிறது.

உடலின் சூட்டை பாதுகாக்க கொழுப்பு வேண்டும். அதுவும் பாலில் நிரம்ப உள்ளது. விசேஷம் என்னவென்றால் இதிலுள்ள கொழுப்பு எளிதில் செரிமானம் அடையக் கூடியது.

பாலைக் காய்ச்சும்போது மேலே ஆடை படிகிறதல்லவா. அதுதான் கொழுப்பு. பாலிலுள்ள கொழுப்புப் பகுதியைப் பிரித்தெடுத்து வெண்ணையாகவும், நெய்யாகவும் நாம் பயன்படுத்துகிறோம்.

இதையெல்லாம் நான் சொல்லலீங்க.. வாழ்வாங்கு வாழ்ந்த நம் முன்னோர்களின் அனுபவ மொழிகள்தான் இவை.

பாலில் இவ்வளவு நன்மை இருக்கிறதினால் நல்லா பால் குடிங்க. அதை முறையாகவும் குடிங்க. வரட்டுங்களா..........!


வாழ்க நலமுடன் !








.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

15 comments:

  1. நல்ல பதிவு,பொதுவாகவே நொறுங்கத்தின்றால் நூறு வயது என்கிற சொல் திரித்து புரிந்து கொள்ளப்படுவது கொஞ்சம் வருத்தமளிப்பதாகவே/

    ReplyDelete
  2. வணக்கம் அண்ணே,
    ஆரோக்கிய வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில்
    பாலை எவ்வாறு பயனுள்ளதாக குடிக்கலாம் என்பதனை விளக்கிச் சொல்லும் அருமையான பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
    ரொம்ப நன்றி.

    ReplyDelete
  3. ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து தெரிந்துகொள்ள உதவும்
    உங்கள் பதிவுகள் பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷங்கள் நண்பரே..
    பகிர்வுகளுக்கு நன்றிகள் பல..

    ReplyDelete
  4. @ விமலன்

    வாங்க விமலன் சார். வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. @ நிரூபன்

    வாங்க நிரூபன். நல்லா இருக்கீங்களா?. நம்ம ஈழத்துச் சொந்தங்கள் எல்லாம் நல்லா இருக்காங்களா? நல்ல நல்ல பதிவெல்லாம் எழுதறிங்க. வாழ்த்துக்கள். தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரா.

    ReplyDelete
  6. @ ரத்னவேல் நடராஜன்

    வாங்க சார். தங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. @ மகேந்திரன்

    வாங்க மகேந்திரன் சார். தங்கள் வருகைக்கும் அருமையான அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  8. அவசியமான விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  9. நல்லதொரு பகிர்வு தோழர்..பாலை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது..வாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி.

    ReplyDelete
  10. பாலுக்குள் இவ்வளவு விசயமா!!! குடிச்சிருவோம்.நல்ல தகவல்.

    ReplyDelete
  11. பால் உடம்புக்கு நல்லதுன்னு மட்டும்தான் தெரியும்.அதை எப்படிக் குடிப்பது...அறிந்ததில் மகிழ்ச்சி !

    ReplyDelete
  12. very good and useful article . maraimalai,nj,usa

    ReplyDelete
  13. அன்பின் துரை டேனியல் - பசும்பாலினைப் பற்றிய நல்லதொரு பதிவு - தகவல் பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

    ReplyDelete
  14. //பாலுடன் சர்க்கரையைச் சேர்த்துக் குடிப்பதால், சர்க்கரை பாலின் தன்மையைக் கெடுத்து, அதை இரைப்பையில் புளிக்கும்படியும் வாயு உண்டாகும்படியும் செய்கிறது.//புதிய தகவல்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.