ஓ துறவிகளே!
மீசையைத் துறக்கச் சொன்னீர்கள்
துறந்துவிட்டோம்
உள்ளே முளைத்திருக்கிற
இந்த
ஆசையை
என்ன செய்வது?
உடையை மாற்றச் சொன்னீர்கள்
மாற்றி விட்டோம்
உள்ளே மறைந்திருக்கிற
இந்த
படையை
என்ன செய்வது?
வெளியே மட்டுமல்ல
உள்ளேயும் போராடி போராடி
ஓய்ந்துவிட்டோம்
ஒன்று
போர் ஓயட்டும்
இல்லை
உங்கள் பிரசங்கம் ஓயட்டும்!
.
Tweet | |||||