வெடித்துக் கிளம்பும்
புத்தகப் புழுக்களை
அப்படியே சாப்பிடுவதா
பொறித்துச் சாப்பிடுவதா
குழம்பியபடியே
கிறங்கிப் போய்
வேதாளம் போல்
சுற்றியதில்
சுவரெங்கும் ஓவியங்கள்
சுற்றிச் சுற்றி
தலைகீழாய் கவிழ்ந்தபோது
சிலந்திப் பாடம் படித்து
சீறிட்டெழுந்தேன்
நாகமாய்....!
Tweet | |||||
சுற்றிச் சுற்றி
ReplyDeleteதலைகீழாய் கவிழ்ந்தபோது
சிலந்திப் பாடம் படித்து
சீறிட்டெழுந்தேன்
நாகமாய்....!
அருமையான கரு
அசத்தலான வார்த்தைப் பிரயோகம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
விடாமுயற்சிக்கு உதாரணம் அல்லவா சிலந்தியின் பாடம். சீறி நாகமாய் எழுந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். மனதைக் கவர்ந்தது கவிதை.
ReplyDeleteஉற்சாகமூட்டும் வரிகள்...
ReplyDeleteஇவைகளிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்...
நன்றி சார்...(TM 3)
வருக வருக
ReplyDeleteநண்பரே..
நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பின்...
கஜினியின் நம்பிக்கைக்கு
உறுதுணை செய்ததாயிற்றே இந்த சிலந்தி...
தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும்
உதாரண காவியம்...
விடாமுயற்சியின் உந்துதலால் சீறி எழுந்த விதம் அருமை.
ReplyDelete@ ரமணி
ReplyDelete- வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்.
@ பாலகணேஷ்
ReplyDelete- வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்.
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete- தங்களின் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி சார்.
@ மகேந்திரன்
ReplyDelete- வாங்க மகி சார். தங்களின் வருகைக்கும் அழகான விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி.
mmmmm....
ReplyDeletethannanmpikkai!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி.
Deleteநல்ல கவிதை நண்பரே! (TM 7)
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!
Deleteபுரிந்தோ புரியாமலோ தலைகீழ்ப்பாடம்தான் அனைத்து மனங்களிலும். தக்கன பிழைக்குமாம். இங்கு தலைகீழாய்க் கிடந்தும் தக்கவைத்துக்கொள்பவையே பிழைக்கும்.
ReplyDeleteஅசத்தும் கருவும் கவியும். பாராட்டுகள் துரை டேனியல்.
நீண்ட நாட்கள் கழித்து பதிவு போட்டாலும் அப்போதும் வந்து கருத்து சொல்லும், அதுவும் ஆழமாக படித்து அருமையாக கருத்து சொல்லும் தங்களைப் போன்ற பதிவுலக சொந்தங்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ.கீதா!
Deleteதன்னம்பிக்கையும், தத்துவமும் இழையோடிய கவிதை நன்று அன்பரே.
ReplyDeleteநீண்ட நாள் சென்று நான் பதிவிட்ட போதும் உடன் வந்து அழகான கருத்துரையும் இட்ட முனைவருக்கு என் நன்றிகள் பல.
Deleteதூண்டும் கவிதை... உரமேத்துகிறது மனதுக்கு..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமாறு பட்ட சிந்தனை
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....