Tuesday, February 7, 2012

நாம் நிமிடத்திற்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறோம். தெரியுமா உங்களுக்கு?





நீங்கள் இப்போது நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா? உங்கள் நாற்காலியை இறுகப்பிடித்துக்கொண்டு ஒரு பெருமூச்சு விடுங்கள். இந்த நேரத்தில் (4 வினாடிகள்) நீங்கள் 100 கிலோ மீட்டர் தாண்டி விட்டீர்கள். மீண்டும் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விடுங்கள். இப்போது மேலும் 100 கிலோ மீட்டர் தூரம் தாண்டிவிட்டீர்கள். இது உண்மை.

நாம் வசிக்கும் இப்பூமி சூரியனைச் சுற்றி வினாடிக்கு (per second) 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பூமி இந்த குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதனால்தான் சூரியனின் பயங்கரமான ஈர்ப்பு சக்தியினால் இழுக்கப்பட்டுச் சூரியனுடன் மோதி அழிந்து விடாமலிருக்கிறது.

இதைவிட சற்றுக் குறைந்த வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனால் இழுக்கப்பட்டு எரிந்து விடும். இதைவிட சற்று அதிக வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனைவிட்டு அதிக தூரம் விலகிப்போய் மிகவும் குளிர்ந்து விடும். விறைத்துச் சாகவேண்டியதுதான் (பனிக்கட்டி மூடிவிடுவதினால்).

ஆகவே, பூமி சுற்றும் வேகம் சிறிது மாறினால் கூட போதும். பூமியின் மீது எந்த ஜீவராசியும் (தாவரம், மிருகம், மனிதர்) உயிர் வாழவே முடியாது. இவ்விதமாகவே இப்பூமி இவ்வித இரண்டு பயங்கர ஆபத்தான நிலைமைகளுக்கு இடையே மயிரிழையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வினாடிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நம்மால் பிரயாணம் பண்ணக் கூடுமானால், நாம் ஐந்தரை நிமிட வேகத்தில் பூமத்திய ரேகையிலிருந்து வட துருவத்தையோ அல்லது தென் துருவத்தையோ அடைந்துவிடலாம். ஆனாலும் அப்பிரயாணம் அலுப்பு மிக்கதாகவும், சலிப்புடையதாகவும் இருக்கும்.

ஏன் தெரியுமா? அவ்வளவு வேகத்தில் செல்லும்போது நம் கண்களால் எதையுமே பார்க்க முடியாது. பார்த்தாலும் எல்லாமே மிகவும் மங்கலாகவும், அதிவேகமாகவும் ஓடுபவையாகவும் காணப்படும். சாதாரணமாக இப்பூமியின் மீது நாம் எங்கேனும் பிரயாணம் செய்யும்போது, நாம் கடந்து செல்கின்ற பொருட்களைக் கொண்டுதான் நாம் பிரயாணம் செய்யும் வண்டியின் வேகத்தையும், அசைவையும் நம்மால் அறிய முடிகிறது.

நாம் தொடர்ந்து செய்யும் விண்வெளிப் பிரயாணத்தைக் குறித்த உணர்வு நமக்கு ஏன் இல்லாமல் இருக்கிறது என்பது இதிலிருந்து நமக்கு புரிகிறதல்லவா? இந்த பூமி எப்போதுமே இப்படித்தான் தொடர்ந்து அண்டவெளியில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறது.

நாம் யாவரும் இதன்மீது பிறந்தவர்களும், இப்பூமியின் வாழ்வாகவும் இருக்கிறோம். வேகத்தைப் பொறுத்தமட்டில் நாமும் இப்பூமியும் ஒன்றுதான். மேலும் இப்பூமியானது அருகிலுள்ள அநேகப் பொருட்களினூடே கடந்து செல்லுமானால் பூமியும் நாமும் அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் உணர முடியும். அப்படியில்லாது பூமிக்கருகில் நாம் காணக்கூடிய எப்பொருளும் இல்லாதிருப்பதினால் நாம் இப்பூமியோடு சேர்ந்து அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் சற்றேனும் உணர முடியவில்லை. எவ்வளவு வியப்பாக இருக்கிறது. இல்லையா?

நன்றி!










.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

150 comments:

  1. அருமையான பதிவு
    விஞ்ஞானம் மூலம் மெய்ஞானத்தை தொட முயலும்
    உங்கள் பதிவு அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. துரை... ஆத்திகர்களுக்கு மரண அடிதானே என்று தப்பாக இருப்பதை நாத்திகர்களுக்கு மரண அடிதானே என்று திருத்தி விடுங்கள். நல்ல விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
  3. ஓட்டுப் பெட்டிவேலை செய்கிறது
    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  4. ஓட்டுப் பட்டை வேலை செய்கிறது. நானும் பாஷித் பதிவின் மூலம் தான் சரிசெய்து கொண்டேன். அவருக்கு உங்கள் மூலமும் நன்றி தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  5. @ ரமணி

    தங்களது உடனடி வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார். ஓட்டுப்பட்டையைக் குறித்த தகவலுக்கும் மிக்க நன்றி.

    அப்பாடா! பெரும் பிரச்சினை தீர்ந்தது. நிம்மதி!

    ReplyDelete
  6. @ கணேஷ்

    //துரை... ஆத்திகர்களுக்கு மரண அடிதானே என்று தப்பாக இருப்பதை நாத்திகர்களுக்கு மரண அடிதானே என்று திருத்தி விடுங்கள். நல்ல விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள். அருமை.//

    - திருத்திவிட்டேன் சார். தவறைச் சுட்டிக்காட்டியதற்கும் உடனடி வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் ஓட்டுப்பட்டையை குறித்த தகவலுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  7. @ கணேஷ்

    //ஓட்டுப் பட்டை வேலை செய்கிறது. நானும் பாஷித் பதிவின் மூலம் தான் சரிசெய்து கொண்டேன். அவருக்கு உங்கள் மூலமும் நன்றி தெரிவிக்கிறேன்//

    - நன்றி கணேஷ் சார். உங்களுக்கும் நண்பர் பாசித்துக்கும். பாசித்துக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ஒரு வாரமா ஓட்டுப்பட்டை வேலை செய்யாமல் ரொம்ப கஷ்டப் பட்டேன்.
    ஒரு பெரிய பிரச்சினையை தீர்த்து விட்டார். இப்பொழுதுதான் நிம்மதியாக உள்ளது.

    ReplyDelete
  8. May peace and blessings of Almighty be upon u brother,

    A Very Interesting post...thanks for sharing.

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  9. புதிய தகவலை தெரிந்துக் கொண்டேன்.

    தங்கள் பாராட்டிற்கும் நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  10. இவ்வளவு நாள் இருந்த குழப்பத்தை நீக்கி இருக்கீங்க நண்பரே... மிக்க நன்றி...

    ReplyDelete
  11. ஸலாம் சகோ.துரை டேனியல்,
    //இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த இப்பேர்ப்பட்ட மிகப் பிரம்மாண்டமான அமைப்பை இயற்கையாகவே உண்டாக்கியிருக்க முடியுமா. எல்லாம் ஒரு நேர்த்தியாய் இருக்கிறதே. எப்படி? நிச்சயமாக கடவுள் இருக்கிறார் என்பதை இது விளங்கப்பண்ணவில்லையா நாத்திகர்களுக்கு மரண அடிதானே இது?...//---அருமை சகோ.துரை. பதிவுக்கு நன்றி.

    மேலும்,

    பூமியை மட்டும் 23.5 பாகை சாய்த்து வைத்தது யார்,
    வாயுக்கள் எல்லாம் அந்தந்த % மிகச்சரியாக இருக்க காரணம் என்ன,
    புவி ஈர்ப்பு விசை ஏன் எதற்கு இந்த அளவினதாக சரியாக இருக்க வேண்டும்,

    ---இப்படி எல்லாம் இன்னும் கணக்கிட முடியாத அளவுக்கு இருக்கிறது..!

    இதுபோல சிந்திக்க ஆரம்பித்தால்...
    நாத்திகம் ஒழியும்..!

    ReplyDelete
  12. நிறைய அறிந்து கொள்ளும் பதிவு இது ,.,
    பகிர்ந்தமைக்கு நன்றிங்க சார்

    ReplyDelete
  13. சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுட்டுமாக,

    அருமையான வியப்புட்டும் விளக்கங்கள்.

    //இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த இப்பேர்ப்பட்ட மிகப் பிரம்மாண்டமான அமைப்பை இயற்கையாகவே உண்டாக்கியிருக்க முடியுமா. எல்லாம் ஒரு நேர்த்தியாய் இருக்கிறதே. எப்படி?//

    நல்ல கேள்வி.

    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  14. கடவுளை இவ்வளவு எளிதாக உங்களை விட நிரூபிக்க முடியாது.அருமைக் கட்டுரை வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. சிறந்த பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. இவ்வளவு விழயம் இருக்கா ?

    ReplyDelete
  17. அருமையாக விளக்கி உள்ளீர்.

    வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவிடவும்.

    ReplyDelete
  18. அன்பு சகோ டேனியல்.,

    அருமையான விளக்கங்கள்

    //இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த இப்பேர்ப்பட்ட மிகப் பிரம்மாண்டமான அமைப்பை இயற்கையாகவே உண்டாக்கியிருக்க முடியுமா//

    நிச்சயமாக இதைப்போன்ற கேள்விகளுக்கு நாத்திகத்திடம் பதிலில்லை.

    அதுமட்டுமில்லை இன்னும் நிறைய கேள்விகளுக்கு கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளையும் தான் இயற்கை பதிலாக வைத்திருக்கிறது

    பகிர்ந்த கருத்திற்கு நன்றி சகோ
    இன்னும் தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. //எல்லாம் ஒரு நேர்த்தியாய் இருக்கிறதே. எப்படி? நிச்சயமாக கடவுள் இருக்கிறார் என்பதை இது விளங்கப்பண்ணவில்லையா நாத்திகர்களுக்கு மரண அடிதானே இது?...//

    நல்ல விஞ்ஞான பூர்வமான எடுத்துக்காட்டுகள். ஆனால் சந்தடிசாக்கில் இதை வேத புத்தகங்கள் சொல்லும் அபத்தக் கடவுள்கள் செய்ததாக ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்புத்தகங்களில் காணும் விளக்கங்கள் உங்கள் எடுத்துக்காட்டுக்களுடன் ஒத்துப்போகின்றனவா?

    தெரியாத ஒன்றை தெரியாது என்ற நிலையிலேயே புத்தனைப்போல மவுனமாக இருப்பதுதான் மேலும் பல விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு மனம் பக்குவப்படும். அடிதடிக்கு உதவவேண்டாம்.

    ReplyDelete
  20. அன்புள்ள சகோதரனுக்கு,இயேசு கிறிஸ்த்துவின் திருப்பெயரால் வாழ்த்துக்கள். அருமையான பதிவு. இறைவன் அதினத்தின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறார் என்று பரிசுத்த வேதம் கூறுகிறது. ஆம் தேவன் எவ்வளவு நேர்த்தியாய் படைத்திருக்கிறார் என்பதை உங்களின் இந்த சிறிய பதிவு விளக்குகிறது.நன்றி. பணி தொடர என் வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    இம்மான், waytoheaven2011.blogspot.com

    ReplyDelete
  21. நல்லதொரு அறிவியல் பதிவு.

    ReplyDelete
  22. மிக எளிமையாக சொல்லிட்டீங்க, அருமை.

    வல்ல ஏகனே ஹிதாயத் கொடுப்பவன், முயற்சியை அழகிய முறையில் தொடருவோம் ...

    இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  23. @ Aashiq Ahamed

    Thank You my beloved Brother! Thanks for your coming and comment. Almighty God bless You!

    ReplyDelete
  24. @ ரஹீம் கஸாலி

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  25. @ Abdul Basith

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. பிளாக்கர் பிரச்சினையைத் தீர்த்து வைத்ததற்கு ஒரு ஸ்பெசல் நன்றி சகோ.!

    ReplyDelete
  26. @ சசிகுமார்

    அப்படியா சசி சார். ஓ.கே. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  27. முஹம்மது ஆசிக் said //பூமியை மட்டும் 23.5 பாகை சாய்த்து வைத்தது யார்,
    வாயுக்கள் எல்லாம் அந்தந்த % மிகச்சரியாக இருக்க காரணம் என்ன,
    புவி ஈர்ப்பு விசை ஏன் எதற்கு இந்த அளவினதாக சரியாக இருக்க வேண்டும்,

    ---இப்படி எல்லாம் இன்னும் கணக்கிட முடியாத அளவுக்கு இருக்கிறது..!

    இதுபோல சிந்திக்க ஆரம்பித்தால்...
    நாத்திகம் ஒழியும்..! //

    - வணக்கம் சகோ. ஆசிக்! தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நாத்திகவாதிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள். தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  28. @ அரசன் சே

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும நன்றி சகோ.

    ReplyDelete
  29. @ ராஜகிரி ஹாஜாமைதீன்

    தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  30. @ Dhanasekaran

    தங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  31. @ கவனப்பிரியன்

    தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  32. @ ராஜபாட்டை ராஜா

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  33. @ கார்பன் கூட்டாளி

    தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    நான் ஒரு ஆத்திகவாதி. ஆகவே நிச்சயமாக தொடர்ந்து பதிவிடுவேன். சந்தேகமில்லை சகோ.

    ReplyDelete
  34. Gulam said //நிச்சயமாக இதைப்போன்ற கேள்விகளுக்கு நாத்திகத்திடம் பதிலில்லை.

    அதுமட்டுமில்லை இன்னும் நிறைய கேள்விகளுக்கு கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளையும் தான் இயற்கை பதிலாக வைத்திருக்கிறது.

    - உண்மைதான் சகோ. நாத்திக வாதம் போலியானது. நிலையற்றது. போலியாக நிரூபணம் பெற்றது. அது தோற்றுத்தான் போகும். தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  35. குலவுசனப்பிரியன் said //நல்ல விஞ்ஞான பூர்வமான எடுத்துக்காட்டுகள். ஆனால் சந்தடிசாக்கில் இதை வேத புத்தகங்கள் சொல்லும் அபத்தக் கடவுள்கள் செய்ததாக ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்புத்தகங்களில் காணும் விளக்கங்கள் உங்கள் எடுத்துக்காட்டுக்களுடன் ஒத்துப்போகின்றனவா?

    தெரியாத ஒன்றை தெரியாது என்ற நிலையிலேயே புத்தனைப்போல மவுனமாக இருப்பதுதான் மேலும் பல விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு மனம் பக்குவப்படும். அடிதடிக்கு உதவவேண்டாம். //

    - இல்லை. அப்படியில்லை. வேதங்கள் என்று சொல்வதே தவறு சகோ. வேதம் என்பதுதான் சரி. இரண்டாவது சந்தடி சாக்கில் சொல்லவில்லை. 100 சதவீதம் உறுதியுடன் நெஞ்சு நிமிர்த்திதான் சொல்கிறேன். நான் 100 சதவீதம் கடவுளை நம்புகிறவன். இதைச் சொல்ல பெருமைப் படுகிறேன். காலமும் மனிதர்களும் மாறலாம். வேதம் மாறுவதில்லை.விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட வேண்டிய அவசியம் வேதத்திற்கு இல்லை. வேதம் சொல்வதை விஞ்ஞானம் நம்பினால் விஞ்ஞானத்திற்குத்தான் நல்லது. மனுஷ ஞானம் தெய்வீக ஞானத்தை ஒருபோதும் அளந்துவிட முடியாது. நம்முடையது குருவி மூளை. அம்மூளை இப்பிரபஞ்சத்தை உண்டாக்கிய சர்வ ஞானியின் மூளையை ஒருபோதும் அளந்துவிட முடியாது. புரியவில்லை என்பதற்கா எதுவும் பொய்யாகிவிடாது சகோ. கடைசியாக இதில் அடிதடி வருவதற்கு என்ன இருக்கிறது? தெரியா ஒன்றை அல்ல. தெரிந்த ஒன்றைக் குறித்துத்தான் இந்த பேச்சு. அடிதடி வர இது என்ன நாத்திக மேடையா? எனக்கு தெரிந்ததை சொல்ல எனக்கு என்ன அச்சம்?

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  36. @ Jeus Coming Soon

    தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. இயேசுவின நாமத்தினால் உங்களையும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  37. @ விச்சு

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  38. @ நட்புடன் ஜமால்

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  39. @ முனைவர் இரா குணசீலன்

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி முனைவரே!.

    ReplyDelete
  40. சகோ துரைடேனியல்,

    நல்ல பதிவு. ஆத்திகத்தை விஞ்ஞான பூர்வமாக முயற்சிக்கும் உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். தொடர்ந்து பதிவிடுங்கள். கார்பன் கூட்டாளியும் இதே போன்று ஒரு இடுகை பதிவிட்டுள்ளார். நேரம் இருந்தால் பார்வை இடுங்கள்.

    http://carbonfriend.blogspot.com/2012/02/blog-post.html

    ReplyDelete
  41. புள்ளி விவரங்களுடன் தெளிவான பகிர்வு.... நன்றிங்கோ....

    ReplyDelete
  42. நல்லபதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. //இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த இப்பேர்ப்பட்ட மிகப் பிரம்மாண்டமான அமைப்பை இயற்கையாகவே உண்டாக்கியிருக்க முடியுமா. எல்லாம் ஒரு நேர்த்தியாய் இருக்கிறதே. எப்படி?//

    இதுபோல் நாம் சிந்திக்க, சிந்திக்க இறைவனின் அச்சம் மேலோங்குவதுபோல் அவர்களும் சிந்தித்தால் ஏக இறைவனை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். அருமையான கட்டுரை சகோ, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. //எப்படி? நிச்சயமாக கடவுள் இருக்கிறார் என்பதை இது விளங்கப்பண்ணவில்லையா நாத்திகர்களுக்கு மரண அடிதானே இது?...\\

    நாத்திகம் ஆத்திகம் இருவருக்குமே மரண அடி என்று சொல்லுங்கள் அதுதான் சரி.,

    ஈர்ப்பு சக்தியும், விலக்கும் சக்தியும் இப்பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருகிறது. அந்த சக்திகளை ’இறை’ என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கலாம்.

    மற்றபடி ஆதி மனிதரில் சில சாதனைகளை செய்தவர்கள் இன்று கடவுள் என்றும் தெய்வம் என்றும் வழிபடப்படுகின்றனர்.

    இவர்களைத் தான் ’படைத்தகடவுள்’ என நம்பும்போதுதான் ஆத்திகம் நாத்திகமே தோன்றுகிறது. அர்த்தமில்லாத சண்டைகளும் கூடவே வருகிறது.

    இறைசக்தி, அதன் இயக்க ஒழுங்கு, அது நம் வாழ்வில் எந்தவகையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்தாலே வாழ்க்கை செம்மையுறும்.

    நல்லதொரு கட்டுரை ஆனால் முடிவில் கடைசிவரியில் கவிழ்ந்துவிட்டது. முடிந்தால் கடைசி வரியை ஆன்மீகவாதிகளும், நாத்திகவாதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசய்ங்கள் இது என முடிக்கலாம் :))

    ReplyDelete
  45. ”மரணஅடி” என்ற உங்கள் வார்த்தையை வைத்துதான், நீங்கள் அடிதடிக்கு உதவவேண்டாம் என்று கேட்டேன்.

    வேதங்களில் இருக்கும் புனைவுகளுக்கு எதிர்மறையான விளக்கங்களை தரும் அறிவியலைக்கொண்டு கடவுளை பாதுகாக்க நினைப்பவர்கள், அதே அறிவியல் சிந்தனைகளுக்கும் கல்விக்கும் எப்போதும் இடையூறாகவே உள்ளனர் என்பது உங்கள் வாதங்களிலேயே வெளிப்படுவது நகைமுரண்.

    ReplyDelete
  46. தம்பீ!
    வியப்பைத் தரும் தங்கள் பதிவு கூடவே
    பயத்தையும் தருகிறது!
    அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  47. சரியாய் சொன்னீர்கள்....இறைவன் இருக்கின்றான்....இயக்குகின்றான்..

    ReplyDelete
  48. ////இக்கட்டுரையை வாசித்த உங்கள் முன் ஒரு சிந்தனையை வைக்கிறேன். இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த இப்பேர்ப்பட்ட மிகப் பிரம்மாண்டமான அமைப்பை இயற்கையாகவே உண்டாக்கியிருக்க முடியுமா. எல்லாம் ஒரு நேர்த்தியாய் இருக்கிறதே. எப்படி? நிச்சயமாக கடவுள் இருக்கிறார் என்பதை இது விளங்கப்பண்ணவில்லையா நாத்திகர்களுக்கு மரண அடிதானே இது?...////இது பற்றி நோ கமண்ட்ஸ்

    ஆனால் உங்கள் பதிவு மிக மிக அருமை

    ReplyDelete
  49. //இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த இப்பேர்ப்பட்ட மிகப் பிரம்மாண்டமான அமைப்பை இயற்கையாகவே உண்டாக்கியிருக்க முடியுமா. எல்லாம் ஒரு நேர்த்தியாய் இருக்கிறதே. எப்படி? நிச்சயமாக கடவுள் இருக்கிறார் என்பதை இது விளங்கப்பண்ணவில்லையா நாத்திகர்களுக்கு மரண அடிதானே இது?//

    பூமி சூரியன் சந்திரன் தவிர்த்து பிரபஞ்சத்தில் இயங்கும் அனைத்துக் கோள்கள், நட்சத்திரங்கள், கேலக்ஸி (ஒரு சூரியனை இயக்க இம்மாம் பெரிய கேலக்ஸி தேவையா ? உள்ளிட்டது) வரை அதனால் மனித இனத்திற்கோ பிற உயிரினத்திற்கோ எந்த பயனும் இல்லை, அவை முட்டாள் தனமான படைப்பா ? என்று நாத்திகன் கேட்டால் சொல்ல விடை வைத்திருக்கிறீர்களா ?

    ReplyDelete
  50. //எல்லாம் ஒரு நேர்த்தியாய் இருக்கிறதே. எப்படி?//

    தெளிந்த குளத்தின் கரையில் நின்று கொண்டு ஒண்ணுக்கு அடித்தால் கூட அது வட்ட வட்டமாக சிறிய அலைகளை தோற்றுவிக்கும், தண்ணீரை வீணாக்கவேண்டாம் என்றால் கல் எரிந்து பார்த்துவிட்டு ரசிக்கலாம்.

    நம் கற்பனைக்கு எட்டாத ஒன்றை வியந்துவிட்டு கடவுள் செயல் என்பதும், அதை ஏற்காதவர்களை தூற்றுவதும் தான் கடவுள் நம்பிக்கை என்றால் எனக்கு அது போன்ற நம்பிக்கைகள் சத்தியமாக கிடையாது.

    ReplyDelete
  51. சிந்திக்க வைத்த விளக்கமான பதிவு ! நன்றி சார் !

    ReplyDelete
  52. நாத்திகர்களுக்கு மரண அடி கொடுப்பதன் மூலம் எதைச் சாதித்திருகிறீர்கள்?
    இந்த பிரமாண்ட அமைப்பைக் கடவுள் தோற்றுவித்தார் என்றால், அந்தக் கடவுள் எப்படித் தோன்றினார் என்று கேட்கப்படும் கேள்விக்குப் பதில் கண்டுபிடித்துவிட்டீர்களா?
    பொத்தாம் பொதுவாக, அவரே எல்லாவற்றிற்கும் மூலமானவர்; அன்பு வடிவானவர்; அவரை உணரத்தான் முடியும் என்றெல்லாம் கதைப்பதை விட்டுவிட்டு, அவர் எப்படி இருப்பார்...எப்படிச் செயல்படுகிறார் என்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் தந்து விட்டீர்களா?
    மையப் புள்ளியோ எல்லையோ இல்லாத பிரபஞ்ச வெளியை ஒரே கடவுள்தான் படைத்தார்; காத்து வருகிறார் என்பதற்கு ஆதாரங்கள் தந்து விட்டீர்களா?
    நாத்திகன் கடவுள் இல்லை என்று சொல்வதால், எல்லாம் வல்ல உங்கள் கடவுளுக்கு எந்தவிதத்தில் ஊறு நேர்ந்துவிடும்? ஏன் இப்படி நாத்திகன் ...நாத்திகன் என்று அலறித் துடிக்கிறீர்கள்?!
    நாத்திகனுக்கு மரண அடி கொடுத்து, கடவுளைப் போற்றித் துதிப்பதால், வறுமை, நோய், பகைமை,காமம் போன்றவற்றால் உயிர்களுக்கு விளையும் அத்தனை துன்பங்களும் அகன்றுவிட்டனவா?
    பல நூற்றாண்டுகளாகக் கடவுளை நாத்திகரிடமிருந்து காப்பாற்றி என்ன சாதித்தீர்கள்?
    இத்தனை பேருக்குக் கண்பார்வை கொடுத்தார்....
    இத்தனை பேரின் தீராத நோய்களைத் தீர்த்தார்....
    இத்தனை சுனாமிகளைத் தடுத்தார்.....
    ....இப்படியாக, கடவுளால் விளைந்த நன்மைகளை ஒரு பட்டியலிட்டுக் காட்டுங்களேன் பார்க்கலாம்.
    உலகில் உள்ள அத்தனை ஆத்திகர்களும் சேர்ந்து அந்தப் பட்டியலைத் தயார் செய்யுங்கள்.
    அது...
    எத்தனை நீளம் வருகிறது என்று பார்ப்போம்.
    பட்டியல் போடத் தயார் ஆகிவிட்டீர்களா ஆத்திக நண்பர்களே?

    ReplyDelete
  53. உலகில் உள்ள அத்தனை மதத் தலைவர்களும் ஒன்று சேரட்டும்.
    இம்மண்ணுலக மக்கள் காணும்படியாக ஊடகங்கள் ஒலி ஒளிபரப்புச் செய்ய....
    ஒரு குறிப்பிட்ட நேரத்தில், கண்பார்வை இழந்த ஒருவருக்கு [வேறு சாதனை செய்தாலும் சம்மதமே]
    கடவுளின் பெயரால், பார்வையை மீட்டுத் தர முடியுமா இவர்களால்?
    இதைச் செய்தால், நாத்திகர்கள் பூண்டோடு அழிந்து நாசமாகிவிடுவார்கள்!
    ஆத்திகர்கள் அனைவரும் சேர்ந்து உங்கள் மதத் தலைவர்களிடம் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தச் சொல்லலாமே?
    ஆத்திக நண்பர்களே, செய்வீர்களா?

    ReplyDelete
  54. உங்களுக்கு உண்டான... உங்கள் சொந்த பந்தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைத் தீர்க்கும்படி, எத்தனை முறை உங்கள் கடவுளிடம் வேண்டுதல் வைத்தீர்கள்?
    எத்தனை தடவை அவர் உங்கள் துயர் துடைத்தார்?
    ஒரு பட்டியல் போட்டுப் பாருங்கள்.
    துன்பத்தைக் கடவுள்தான் தீர்த்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?
    கடவுள் நமக்குத் துன்பம் உண்டுபண்ண மாட்டார் என்கிறீர்கள்.
    ஏதோ ஒரு அடிப்படையில் துன்பம் தானாக வந்தது என்றால், அது ஏன் தானாகத் தீர்ந்திருக்கக் கூடாது?
    இப்படியெல்லாம் சிந்திக்கலாமே.
    எல்லாவற்றிற்கும் காரணம் கடவுளே என்று முற்றுப்புள்ளி வைப்பதால், நம் சிந்திக்கும் திறன் மட்டுப்படும் என்பதை ஆத்திக நண்பர்களே நீங்கள் உணரவில்லையா?
    உணர மறுக்கிறீர்களா?
    நாலு வரியில் கொஞ்சம் எழுதி, நாத்திகனுக்கு மரண அடி கொடுத்துவிட்டதாக நம்பி, கடவுள் இருக்கிறார் என்று நிரூபித்துவிட முடியாது.
    நிரூபிக்க விரும்பினால்......
    போதிய ஆதாரங்களுடன் இன்னும் நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  55. மனமார்ந்த வாழ்த்துக்கள் துரை. தமிழ்மணத்தில் மகுடம் சூடிய படைப்பாக உங்கள் இப்படைப்பைக் காடடுகிறது!

    ReplyDelete
  56. பிரமாண்ட அமைப்பு எப்படித் தோன்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
    தொடர்ந்து ஆராய்வது அறிவுடைமை.
    அவசரப்பட்டு கடவுளே காரணம் என்று முடிவெடுப்பதால் பயன் ஏதுமில்லை.
    கடவுளே என்பது வெறும் அனுமானமே.
    எல்லா அனுமானங்களும் உண்மை ஆகிவிடா.

    ReplyDelete
  57. @ பரமசிவம்

    நான் இதுவரை ஆன்மீக பதிவுகள் எதுவும் இடவில்லை. என் முந்தைய பதிவுகளை நீங்கள் வாசித்தால் அது தெரியும். இந்த ஒரு பதிவில்தான் கடைசி பாராவில் என் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன். அது உங்களுக்கு பொறுக்கவில்லையா? உங்கள் எல்லா கேள்விகளுக்கும் விரிவான பதில்கள் என்னிடம் உண்டு. ஆனால் சண்டை சச்சரவுகளை நான் வெறுக்கிறேன். ஆகவே அமைதி அடையுங்கள். காலம் உங்களுக்கு புரியவைக்கும். நண்பர் குலவுசனப்பிரியனுக்கு நான் சொன்ன பதிலை படியுங்கள். இதையும் மீறி பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமென்றால் என்னுடைய இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். விவாதிக்கலாம். இங்கே வேண்டாம். பதிவுலகில் ஏராளம் நண்பர்களைச் சம்பாதித்திருக்கீறேன். அவர்கள் மனம் புண்படுவதை விரும்பவிலலை. இவைகளை விட்டு வெளியே இருக்க விரும்புகிறேன். நன்றி சகோ.

    ReplyDelete
  58. 100 கிலோமீட்டர் என்பது தவறானது.

    சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பூமத்தியரேகை பகுதியில் மணிக்கு சுமார் 1000 கிலோமீட்டரும்,(பூமியின் சுற்றளவு 25000கி.மீ அதை 24 மணி நேரத்திம் சுற்றிவிடுவதால்) சூரியனைச் சுற்றும் பாதையில் மணிக்கு சுமார் 15000 மைல் வேகத்திலும் பயணிக்கிறோம். ஆகவே தறைத்திருத்திக் கொள்ளுங்கள் மேலும் படிக்க
    http://chandroosblog.blogspot.in/2012/02/2.html

    ReplyDelete
  59. The average distance from the Earth to the Sun is 149,597,890 km. Therefore in one year the Earth travels a distance of 2*Pi*(149,597,890)km. This means that the velocity is about:

    velocity=2*Pi*(149,597,890)km/1 year

    and if we convert that to more meaningful units (knowing there is 365 days in a year, and 24 hours per day) we get:

    velocity=107,300 km/h (or if you prefer 67,062 miles per hour)

    So the Earth moves at about 100,000 km/h around the Sun (which is 1000 times faster than the speeds we go at on a highway!)

    ReplyDelete
  60. விஞ்ஞானத்தையும் அஞ்ஞானத்தும் போட்டுக்குழப்பிக் கடைசியில கடவுள் இருக்கார் பாருங்கன்னு முடிச்சிட்டீங்க.யோசனைதான் !

    ReplyDelete
  61. @சிராஜ்

    தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  62. @ தமிழ்வாசி பிரகாஷ்

    நன்றி சார். வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  63. @ புதியதென்றல்

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  64. @ அஸ்மா

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  65. நிகழ்காலத்தில் சிவா சொன்னது //நாத்திகம் ஆத்திகம் இருவருக்குமே மரண அடி என்று சொல்லுங்கள் அதுதான் சரி.,

    ஈர்ப்பு சக்தியும், விலக்கும் சக்தியும் இப்பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருகிறது. அந்த சக்திகளை ’இறை’ என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கலாம்.

    மற்றபடி ஆதி மனிதரில் சில சாதனைகளை செய்தவர்கள் இன்று கடவுள் என்றும் தெய்வம் என்றும் வழிபடப்படுகின்றனர்.

    இவர்களைத் தான் ’படைத்தகடவுள்’ என நம்பும்போதுதான் ஆத்திகம் நாத்திகமே தோன்றுகிறது. அர்த்தமில்லாத சண்டைகளும் கூடவே வருகிறது.

    இறைசக்தி, அதன் இயக்க ஒழுங்கு, அது நம் வாழ்வில் எந்தவகையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்தாலே வாழ்க்கை செம்மையுறும்.

    நல்லதொரு கட்டுரை ஆனால் முடிவில் கடைசிவரியில் கவிழ்ந்துவிட்டது. முடிந்தால் கடைசி வரியை ஆன்மீகவாதிகளும், நாத்திகவாதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசய்ங்கள் இது என முடிக்கலாம் :)) //

    - இல்லை சார். மனிதர்களை வணங்குவது மிகப்பெரும் தவறு. நீங்கள் தவறுதாலான புரிதலை கொண்டுள்ளீர்கள். தெய்வத்துக்கு இணையாக மனிதனையோ மற்ற எந்த ஜீவராசியையோ வைக்கக் கூடாது. அவருக்கு நிகர் யாருமில்லை. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  66. குலவுசனப்பிரியன் சொன்னது //”மரணஅடி” என்ற உங்கள் வார்த்தையை வைத்துதான், நீங்கள் அடிதடிக்கு உதவவேண்டாம் என்று கேட்டேன்.

    வேதங்களில் இருக்கும் புனைவுகளுக்கு எதிர்மறையான விளக்கங்களை தரும் அறிவியலைக்கொண்டு கடவுளை பாதுகாக்க நினைப்பவர்கள், அதே அறிவியல் சிந்தனைகளுக்கும் கல்விக்கும் எப்போதும் இடையூறாகவே உள்ளனர் என்பது உங்கள் வாதங்களிலேயே வெளிப்படுவது நகைமுரண். //

    - தவறு. மிகத் தவறு உங்கள் கருத்து.

    1. வேதத்தில் எந்த முரணும் புனைவும் கிடையாது.
    2. விஞ்ஞானமும் வேதமும் ஒரு போதும் முரண்படுவதில்லை. நமக்குத்தான் ஞானம் போதாது.
    3.கடவுளைப் பாதுகாக்க யாரும் தேவையில்லை. நம்மைத்தான் அவர் பாதுகாக்க வேண்டும்.
    4.அறிவியல் சிந்தனையும் கல்வியும் கடவுள் தந்த வரங்களாகும். சரித்திரம் சொல்லும் உண்மையாகும்.
    5.என் வாதத்தில் எந்த நகைமுரணும் இல்லை. புரிநது கொள்ள கடவுளே ஞானம் தந்தாலொழிய புரியாது.

    ReplyDelete
  67. @ புலவர் சா இராமாநுசம்

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!

    ReplyDelete
  68. @ காஜாமைதீன்

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  69. @ K.s.s. Rajh

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  70. @ கோவிகண்ணன் சொன்னது //பூமி சூரியன் சந்திரன் தவிர்த்து பிரபஞ்சத்தில் இயங்கும் அனைத்துக் கோள்கள், நட்சத்திரங்கள், கேலக்ஸி (ஒரு சூரியனை இயக்க இம்மாம் பெரிய கேலக்ஸி தேவையா ? உள்ளிட்டது) வரை அதனால் மனித இனத்திற்கோ பிற உயிரினத்திற்கோ எந்த பயனும் இல்லை, அவை முட்டாள் தனமான படைப்பா ? என்று நாத்திகன் கேட்டால் சொல்ல விடை வைத்திருக்கிறீர்களா ? //

    - விடை இருக்கிறது. ஆனால் இன்னொரு பதிவாக அதை இடுகிறேன். கடவுள் வீணாக எதையும் படைக்கவில்லை. படைப்பதுமில்லை. ஒரு சிறு துரும்பைக் கூட கடவுள் ஞானமாகத்தான் உண்டாக்கி வைத்திருக்கிறார். கண்ணால் காண்கின்ற ஒவ்வொன்றையும் உற்றுப் பாருங்கள். எவ்வளவு அழகு. நேர்த்தி. இயற்கை தன்னால் இப்படி படைக்க முடியுமா. ஒரு கைவேலைத்திறன் தெரியவில்லையா? சகோ. அவருடைய படைப்புகளே அவரின் ஞானத்தை வெளிப்படுத்துகின்றன. நீங்களும் நானும் கூட அவர் படைப்புதான். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் சார்.

    ReplyDelete
  71. @ கோவிகண்ணன் சொன்னது - நம் கற்பனைக்கு எட்டாத ஒன்றை வியந்துவிட்டு கடவுள் செயல் என்பதும், அதை ஏற்காதவர்களை தூற்றுவதும் தான் கடவுள் நம்பிக்கை என்றால் எனக்கு அது போன்ற நம்பிக்கைகள் சத்தியமாக கிடையாது -

    - இல்லை. கற்பனைக்கு எட்டாததில்லை. பிரார்த்தனையில் ஈடுபடும்போது உணரமுடிகிற அனுபவம்தான் கடவுள் தன்மை. நான் எங்கே ஏற்காதவர்களைத் தூற்றினேன். நிச்சயமாக இல்லை. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  72. @ திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  73. @ கணேஷ்

    ஆம் சார். மகுடத்தில் ஏறிய தகவலைச் சொன்ன உங்களுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  74. @ பரமசிவம் சொன்னது -//நாலு வரியில் கொஞ்சம் எழுதி, நாத்திகனுக்கு மரண அடி கொடுத்துவிட்டதாக நம்பி, கடவுள் இருக்கிறார் என்று நிரூபித்துவிட முடியாது.
    நிரூபிக்க விரும்பினால்......
    போதிய ஆதாரங்களுடன் இன்னும் நிறைய எழுதுங்கள்//

    - நிச்சயமாக. நாலுவரி என்றால் என்ன நாற்பது வரி என்றால் என்ன? சரக்குதானே முக்கியம். இத்தோடு விட்டுவிடலாம் என்று நினைத்திருந்தேன். போதிய ஆதாரங்களுடன் அடுத்தடுத்து கட்டுரைகளை வெளியிடுகிறேன். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  75. @ Chandrus Rule of

    - சகோ. நீங்கள் தவறாய் புரிந்துகொண்டீர்கள். 4 விநாடிகளுக்கு ஒரு முறைதான் 100 கி.மீ என்று சொல்லியிருக்கிறேன். கணக்குப் போட்டுப்பாருங்கள். பதிவை இன்னும் நன்றாக வாசித்துப் பாருங்கள். புரியும். தமிழ்மணத்தில் ஒரு பதிவை இட்டுவிட்டால் தலைப்பை மாற்ற முடியாது. ஆனால் நேற்றே பதிவில் மாற்றி விட்டேன். இப்போது பதிவின் தலைப்பையும் பதிவையும் ஊன்றிப் படியுங்கள். மற்றபடி தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  76. @ ஹேமா

    வாங்க சகோ. கடைசி பாராவுல கடவுள் இருக்காருன்னு சொல்லிட்டேன். அதுனால வந்த கலாட்டாவப் பாருங்க. ஆனா நான் எழுதியது மறுக்க முடியாத உண்மை சகோ. சரி. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  77. என் இனிய நண்பரே,[துரை டேனியல்]
    நண்பர்களின் மனம் புண்படக் கூடாது என்று நினைக்கும் தங்களின் நல்ல மனதைப் போற்றுகிறேன்.

    நான் பிறரிடம் எதிர்பார்ப்பதும் இதைத்தான். ஆத்திகம் நாத்திகம் எல்லாம் அப்புறம்.

    தங்களின் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தியது [கடைசிப் பத்தியில்] பொறுக்கவில்லையா என்று கேட்கிறீர்கள்.

    என்னைப் பொறாமைக்காரன்...இழிகுணத்தவன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே!

    மன்னியுங்கள் நண்பரே. நான் இந்த விவாதத்தில் கல்ந்து கொண்டது பெருந்தவறு.

    தங்களின் அனுமதியின்றி என் கருத்துகளை முன் வைத்தது மன்னிக்க முடியாத குற்றம்.

    நான் முன்வைத்த கருத்துகளைத் திரும்பப் பெறுகிறேன்.

    மீண்டும் ஒரு முறை மன்னிப்பு வேண்டுகிறேன்.

    மன்னியுங்கள்.

    ReplyDelete
  78. மற்ற மிருகங்களில் இருந்து மனிதன் தன் சிந்திக்கும் திறனால் வேறுபடுகிறான்
    அதுவே அவனை இயற்கையிடமிருந்து தன்னை தொடர்ச்சியாக தற்காத்து கொள்ளவைக்கிறது
    ஆரம்பத்தில் மனிதன் இடி, மின்னல்,மழை இவைகளை பார்த்து பயந்தான், வணங்கினான்
    பின்னர் மனிதன் இடி, மின்னல் இவற்றிற்கான காரணம் கண்டுபிடித்தான் அவற்றை வணங்குவதை நிறுத்தினான்
    இந்த தொடர்ச்சியில் இன்றும் மனிதனுக்கு இயற்கை பல புதிர்களை வைத்திருக்கிறது மனிதன் அதை அவிழ்த்து கொண்டுதான் இருக்கிறன் அவனுடைய தற்காப்புக்கு (Survival of the fittest )
    என்னுடைய கேள்வி
    கடவுளை கண்டுபிடித்த மனிதன் யார்?
    இடி, மின்னல்,மழை இவைகளை பார்த்து பயந்து வணங்கிய இந்த மனிதன்தான் கடவுளை கண்டுபிடித்தவனா ?
    மனிதன் தன்னை தற்காத்து கொள்வதற்காக கண்டுபிடித்த கருவிகளெல்லாம் கடவுளுக்கு சவால் விடுபவையா?
    அந்த கருவிகளெல்லாம் இப்போது இல்லைஎன்றால் மனித இனம் இப்போது இருந்திருக்குமா? எப்படி?
    Survival of the fittest இல்லாத பல உயிரினங்கள் அழிந்து போக ஏன் கடவுள் அனுமதித்தார்?
    இப்படி கேள்விகள் பல
    நான் கடவுளை இல்லை என்று சொல்லவில்லை ஆனால் தேடிக்கொண்டிருக்கிறேன் தொடர்ச்சியான தேடலில் தற்போது நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிறேன்......

    ReplyDelete
  79. உணமையை மிகைப்படுத்தாமல், கருத்துக்களைக் கச்சிதமாகக் கூறும் உங்கள் பதிவு அருமை சகோ.

    ReplyDelete
  80. /* நம் கற்பனைக்கு எட்டாத ஒன்றை வியந்துவிட்டு கடவுள் செயல் என்பதும், அதை ஏற்காதவர்களை தூற்றுவதும் தான் கடவுள் நம்பிக்கை என்றால் எனக்கு அது போன்ற நம்பிக்கைகள் சத்தியமாக கிடையாது. */

    சகோ கோவி கண்ணன்,

    உங்களோட காவடி டான்ஸ் பார்த்தேன். ரொம்ப சூப்பரா காவடி தூக்கி ஆடி இருக்கீங்க. வருடா வருடம் காவடி தூக்குங்கள், ஒன்றும் கேட்டு விடாது. என்ன உங்கள் நாத்திக வேஷத்தை கலைத்து விட்டு இதெல்லாம் செய்தால் கொஞ்சமாவது நம்பகத் தன்மை இருக்கும்.
    போங்கய்யா நீங்களும் உங்க நாத்திகமும்....

    ReplyDelete
  81. /*
    @ கோவிகண்ணன் சொன்னது - நம் கற்பனைக்கு எட்டாத ஒன்றை வியந்துவிட்டு கடவுள் செயல் என்பதும், அதை ஏற்காதவர்களை தூற்றுவதும் தான் கடவுள் நம்பிக்கை என்றால் எனக்கு அது போன்ற நம்பிக்கைகள் சத்தியமாக கிடையாது -

    - இல்லை. கற்பனைக்கு எட்டாததில்லை. பிரார்த்தனையில் ஈடுபடும்போது உணரமுடிகிற அனுபவம்தான் கடவுள் தன்மை. நான் எங்கே ஏற்காதவர்களைத் தூற்றினேன். நிச்சயமாக இல்லை. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    */

    காவடி தூக்கி ஆடும் கோவி கண்ணனை எல்லாம் நாத்திகராக மதித்து பதில் சொல்லும் உங்களைப் பார்த்து நான் பரிதாபப் படுகிறேன் துரை டேனியல் சார்.

    வினவு, சார்வாகன் போன்று கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் நாத்திகர்களிடம் விவாதம் பண்ணுங்கள், நியாயம். அதைவிடுத்து இவர் கூடவெல்லாம்...

    போங்க சகோ.... அவர் வந்து பின்னூட்டம் போட்டா... வருகைக்கு நன்றின்னு ஒரே வார்த்தையில முடிச்சுருங்க சகோ.

    ReplyDelete
  82. வருகைக்கு நன்றின்னு சொல்றது தான் கோவி கண்ணன் போன்ற இரட்டை வேடும் போடும் கபட தாரிகளுக்கு சரியான பதில்.

    ReplyDelete
  83. பரமசிவம் சொன்னது //தங்களின் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தியது [கடைசிப் பத்தியில்] பொறுக்கவில்லையா என்று கேட்கிறீர்கள்.

    என்னைப் பொறாமைக்காரன்...இழிகுணத்தவன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே!

    மன்னியுங்கள் நண்பரே. நான் இந்த விவாதத்தில் கல்ந்து கொண்டது பெருந்தவறு.

    தங்களின் அனுமதியின்றி என் கருத்துகளை முன் வைத்தது மன்னிக்க முடியாத குற்றம்.

    நான் முன்வைத்த கருத்துகளைத் திரும்பப் பெறுகிறேன்.

    மீண்டும் ஒரு முறை மன்னிப்பு வேண்டுகிறேன்.

    மன்னியுங்கள். //

    - இல்லை. இல்லை. தாங்கள் என்னை தவறாக புரிந்துகொண்டீர்கள் சகோ. தங்களை நான் எங்கே இழிகுணத்தான் என்று சொன்னேன். தாங்கள் மட்டுமல்ல. எல்லோருமே எனக்கு நண்பர்கள்தான். ஆரோக்கியமான விவாதம் நல்லதுதானே. இமெயிலில் தொடருவோம் என்றுதானே சொன்னேன். அதற்காக வெளியேறினால் எப்படி? தொடர்ந்து ஆரோக்கியமான விவாதத்தில் கலந்துகொள்ளுங்கள். நிச்சயமாக தங்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்கிறேன். நன்றி சகோ.!

    ReplyDelete
  84. முனைவர் இரா.குணசீலன் சொன்னது //மற்ற மிருகங்களில் இருந்து மனிதன் தன் சிந்திக்கும் திறனால் வேறுபடுகிறான்
    அதுவே அவனை இயற்கையிடமிருந்து தன்னை தொடர்ச்சியாக தற்காத்து கொள்ளவைக்கிறது
    ஆரம்பத்தில் மனிதன் இடி, மின்னல்,மழை இவைகளை பார்த்து பயந்தான், வணங்கினான்
    பின்னர் மனிதன் இடி, மின்னல் இவற்றிற்கான காரணம் கண்டுபிடித்தான் அவற்றை வணங்குவதை நிறுத்தினான்
    இந்த தொடர்ச்சியில் இன்றும் மனிதனுக்கு இயற்கை பல புதிர்களை வைத்திருக்கிறது மனிதன் அதை அவிழ்த்து கொண்டுதான் இருக்கிறன் அவனுடைய தற்காப்புக்கு (Survival of the fittest )
    என்னுடைய கேள்வி
    கடவுளை கண்டுபிடித்த மனிதன் யார்?
    இடி, மின்னல்,மழை இவைகளை பார்த்து பயந்து வணங்கிய இந்த மனிதன்தான் கடவுளை கண்டுபிடித்தவனா ?
    மனிதன் தன்னை தற்காத்து கொள்வதற்காக கண்டுபிடித்த கருவிகளெல்லாம் கடவுளுக்கு சவால் விடுபவையா?
    அந்த கருவிகளெல்லாம் இப்போது இல்லைஎன்றால் மனித இனம் இப்போது இருந்திருக்குமா? எப்படி?
    Survival of the fittest இல்லாத பல உயிரினங்கள் அழிந்து போக ஏன் கடவுள் அனுமதித்தார்?
    இப்படி கேள்விகள் பல
    நான் கடவுளை இல்லை என்று சொல்லவில்லை ஆனால் தேடிக்கொண்டிருக்கிறேன் தொடர்ச்சியான தேடலில் தற்போது நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிறேன்...... //

    - கடவுளை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை. கடவுள்தான் மனிதனை கண்டுபிடித்தார் (உண்டாக்கினார்). பரிணாமக் கொள்கையை மனதில் வைத்துத்தான் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். அதற்கு ஒரு விரிவான பதிவிடலாம் என்று கருதுகிறேன். அதில் தேவையான பதில் இருக்கும். இரண்டாவது மனிதனுடைய கருவிகள் கடவுளுக்கு தூசு. இருப்பவைகளை கண்டுபிடிக்கலாமே தவிர மூலமெல்லாம் கடவுள் தந்த அருட்கொடைகளே.அடுத்ததுSurvival of the fittest இல்லாத பல உயிரினங்கள் அழிந்து போக ஏன் கடவுள் அனுமதித்தார்? என்ற உங்கள் கேள்விக்கு நான் சொன்ன பரிணாம கொள்கை பற்றிய பதிவில் பதில் சொல்கிறேன். கடவுளைத் தேடவேண்டாம். உங்கள் அருகிலேயே இருக்கிறார். பிரார்த்தனை செய்து பாருங்கள். உண்மையான கடவுளே என் உள்ளத்தில் வாரும் என்று பிரார்த்தனை செய்து பாருங்கள். நிச்சயமாக அவருடைய பிரசன்னத்தை நீங்கள் உணரமுடியும். நம்பிக்கை இழக்க வேண்டாம் முனைவரே! கடவுள் இருக்கிறார். பிரார்த்தனை செய்து மட்டும் வாருங்கள்.

    ReplyDelete
  85. @ சிராஜ்

    அன்பு நண்பர் சிராஜ். ஆத்திகர்கள் என்று அழைத்துக்கொள்கிற நாம் கொஞ்சம் பொறுமையாக அன்போடு பேசுவோமே. அப்போதுதானே அவர்களும் கடவுளைப் பற்றி சிந்திப்பார்கள்? ப்ளீஸ் சகோ... எல்லோருமே நமது சகோதரர்கள்தான். பதிவுலகில் ஒற்றுமை மிகவும் அவசியம். எல்லோரோடும் ஒத்துப் போக முடியாதுதான். ஆனாலும் விவாதம் கூட ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் நண்பரே. கோபம் ஒன்றும் இல்லையே என்மேல்.

    ReplyDelete
  86. @ Syed Ibramsha

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  87. இங்கே ஆத்திக நாத்திக விவாதமென்றால் இதையும் படியுங்கள். ஆத்திகன் vs நாத்திகன்

    http://chandroosblog.blogspot.in/2010/06/vs.html

    ReplyDelete
  88. //கண்ணால் காண்கின்ற ஒவ்வொன்றையும் உற்றுப் பாருங்கள். எவ்வளவு அழகு. நேர்த்தி. இயற்கை தன்னால் இப்படி படைக்க முடியுமா. ஒரு கைவேலைத்திறன் தெரியவில்லையா? சகோ. அவருடைய படைப்புகளே அவரின் ஞானத்தை வெளிப்படுத்துகின்றன. நீங்களும் நானும் கூட அவர் படைப்புதான். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் சார்.//

    இதெல்லாம் விழிப்புலனே இல்லாமல் பிறப்பவர்களுக்கு நீங்கள் எப்படி விளங்க வைப்பீர்கள் ?

    ஆஹா உன்னை இரட்டின் அழகை ரசிக்க இறைவன் குருடனாக படைத்தான், அவனது படைப்பின் நேர்த்தியை நான் பாராட்டுகிறேன், நீயும் பாராட்டு என்று நான் சொன்னால் ஒருவேளை என் மேல துப்ப முயற்சிப்பார்களா ? இல்லையா ?

    ReplyDelete
  89. //நீங்களும் நானும் கூட அவர் படைப்புதான். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் சார்.//

    நாத்திகனையும் நாத்திகத்தையும் படைச்சது கடவுள் தான் என்று நீங்கள் ஒருவேளை நம்பியிருந்தால் நக்கல் அடித்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

    இன்னும் நிறையவே கடவுள் சார்பில் சப்பைக் கட்டலாம் சார்.

    எய்ட்ஸ் என்ற ஒரு கிருமியை கடவுள் படைக்கவில்லை என்றால் பாலியல் ஒழுக்கம் பற்றி ஆண்கள் கவலையே படமாட்டார்கள்.

    சுனாமி அல்லது இயற்கை பேரிடர்களை கடவுள் செயல்படுத்தாவிட்டால் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கே முடியாது

    கும்பகோணம் குழந்தைகள் கோர எரிப்பை கடவுள் நடத்தி இருக்காவிட்டால் நெருப்பின் கொடுமையையும் பெற்றோர்களின் பாசத்தையும் நாம் உணரவே மாட்டோம்.

    அன்றாடம் நடக்கும் கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் கூட கடவுள் தான் பொறுப்பு ஏனென்றால் மனித குலம் அமைதியை விரும்ப கடவுளுக்கு இதை நடத்திக் காட்டுவதைத் தவிர்த்து வேற வழியே இல்லை.

    சிராஜ் போன்றவர்களையும் இன்னும் பல மதவாதிகளையும் கடவுள் தான் படைச்சார்....

    மேற்கண்ட காரணங்கள் இல்லாவிட்டால் எனக்கு கடவுள் நம்பிக்கை வந்திருக்குமோ ?

    ReplyDelete
  90. // நம்பிக்கை இழக்க வேண்டாம் முனைவரே! கடவுள் இருக்கிறார். பிரார்த்தனை செய்து மட்டும் வாருங்கள்.//

    உங்கள் பதிவில் கடவுள் என்ற சொல்லுக்கு பதிலாக சிவனோ கிருஷ்ணனனோ இருந்தால் சிராஜ் போன்றவர்கள் எட்டிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள், அவ்வாறு எழுதி இருந்தால் நீங்கள் காஃபீராக கருதப்பட்டு இருப்பீர்கள்.

    ஒரு மதவாதியைப் பொறுத்த அளவில் பிறமதவாதி அவனுக்கு நாத்திகன் தான்.

    இந்த உலகில் மதவாதிகள் உடைத்த வழிபாட்டுத் தளங்கள் பாலியல் வன்முறை செய்யபப்ட்ட பெண்கள், கொலை செய்யப்பட்ட ஆண்கள், கருவழிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அளவிட முடியாது, நாத்திகன் கடவுள் இல்லை என்று இதை வைத்து தான் சொல்லுகிறான், நாத்திகனால் சிதைக்கப்பட்ட வழிபாட்டுத் தளங்கள் என்று எதாவது இருந்தால் தெரியப்படுத்தவும்.

    மதவாதிகளின் ஆன்மிகப்பாடங்களை நீங்கள் செவியுற்றால் நீங்களே நாத்தினாக மாறிவிடுவீர்கள்.

    உங்கள் ஆத்திக எல்லை கடவுள் என்ற பொதுச் சொல்லில் மட்டுமே ஆராதிக்கப்படுகிறது அதைத் தாண்டி உங்கள் நம்பிக்குரிய கடவுள் பெயரை எழுதிவிட்டால் உங்களை சிராஜ் போன்றவர்களே பதில் சொல்லிவிடுவார்கள், நண்பர் சுவனப்பிரியன் கூட அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்.

    கடவுள் நம்பிக்கையை மூலதனமாக வைத்து மதவாதிகளை விமர்சித்துப்பாருங்களேன் நீங்கள் நாத்திகனா ஆத்திகனா என்று அவர்களே சொல்லுவார்கள்.

    ReplyDelete
  91. அன்பிற்குறிய சகோ துரை டேனியல் அவர்களுக்கு!

    //உங்கள் ஆத்திக எல்லை கடவுள் என்ற பொதுச் சொல்லில் மட்டுமே ஆராதிக்கப்படுகிறது அதைத் தாண்டி உங்கள் நம்பிக்கைக்குரிய கடவுள் பெயரை எழுதிவிட்டால்..//

    தோழர் கோவி கண்ணனின் இந்த அறை கூவலை ஏற்றுக் கொள்ளுங்கள் சகோ! என்ன நடக்கிறதென பார்த்து விடுவோம்.. பொதுச் சொல் இல்லாமல் அடுத்த முறை பதிவிடுங்கள்..எத்தனை பேர் பதிவிற்கு நேரெதிர் வாக்குகள் செலுத்தப் போகிறார்கள்,எவ்வகையான பின்னூட்டங்கள் வருகின்றன,தமிழ்மண உச்சாணி கொம்பில் வருமா என்பதையெல்லாம் பார்த்துவிடுவோம் சகோ..

    கடவுள் நம்மோடு இருப்பாராக,பொதுச் சொல்லின்றி!

    எனதன்புகள்!

    ReplyDelete
  92. முத்துப்பிரகாஷ் சொன்னது //உங்கள் ஆத்திக எல்லை கடவுள் என்ற பொதுச் சொல்லில் மட்டுமே ஆராதிக்கப்படுகிறது அதைத் தாண்டி உங்கள் நம்பிக்கைக்குரிய கடவுள் பெயரை எழுதிவிட்டால்..//

    - நான் கிறிஸ்தவன் என்று தெரியாமலா இஸ்லாம் சகோதரர்கள் இருப்பார்கள் என்று நினைத்திருக்கிறீர்கள். இல்லை. அவர்களுக்கு நன்கு தெரியும். இப்போதைய குறி நாத்திகம் மட்டுமே. மற்ற கதைகள் அப்புறம். ஓ.கே. இன்னொன்றும் சொல்கிறேன். எங்களது பழைய ஏற்பாட்டை (தோரா) அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆபிரகாம்தான் இப்ராகிம். ஆதாம் ஏவாள் அவர்களுக்கும் உண்டு. அத்தனை தீர்க்கதரிசிகளைளயும் (நபிகள்) ஏற்றுக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்துவையும் தீர்க்கதரிசி (நபி) என்ற அளவில் ஏற்றுக்கொள்வார்கள். அவரைத் தெய்வமாக மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது ஒன்றுதான் வேறுபடுகிறது. மற்றபடி நிறைய ஒற்றுமை உண்டு. புனிதஸ்தலங்கள் உட்பட. இப்போதைய குறி நாத்திகம் ஒன்றே. ஓ.கே. மேலும் நான் சர்ச்சைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. பொது ஆளாகவே இருக்க விரும்புகிறேன். நல்லா இருக்குற குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்காதீங்க சகோ.

    ReplyDelete
  93. //- நான் கிறிஸ்தவன் என்று தெரியாமலா இஸ்லாம் சகோதரர்கள் இருப்பார்கள் என்று நினைத்திருக்கிறீர்கள். இல்லை. அவர்களுக்கு நன்கு தெரியும். இப்போதைய குறி நாத்திகம் மட்டுமே. மற்ற கதைகள் அப்புறம். ஓ.கே. இன்னொன்றும் சொல்கிறேன். எங்களது பழைய ஏற்பாட்டை (தோரா) அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆபிரகாம்தான் இப்ராகிம். ஆதாம் ஏவாள் அவர்களுக்கும் உண்டு. அத்தனை தீர்க்கதரிசிகளைளயும் (நபிகள்) ஏற்றுக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்துவையும் தீர்க்கதரிசி (நபி) என்ற அளவில் ஏற்றுக்கொள்வார்கள். அவரைத் தெய்வமாக மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது ஒன்றுதான் வேறுபடுகிறது. மற்றபடி நிறைய ஒற்றுமை உண்டு. புனிதஸ்தலங்கள் உட்பட. இப்போதைய குறி நாத்திகம் ஒன்றே//

    அப்படி என்றால் நீங்கள் கடவுள் என்று நம்பும் ஏசு கிறிஸ்துவின் பெயரையோ அல்லது அல்லா என்றோ எழுதி இருக்கலாமே. நான் நீங்கள் கடவுள் என்று குறிப்பிடுவது சிவனையோ விஷ்ணுவையோ என்றே நினைத்தேன். துரை டேனியல் என்கிற பெயர் கிறித்துவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கிறிஸ்துவ பெயர்களில் பிற மததினர் உண்டு, சிங்கப்பூரில் சீனர்கள் கிறித்துவ பெயர் வைத்திருப்பார்கள், நம்ம ஊரில் ஜானகி இராமனை சுருக்கி ஜானி என்று அழைப்பார்கள். உங்க பேரும் கிறிஸ்துவ பெயரென்றும் நீங்கள் கிறிஸ்துவ மதக் கடவுள் சார்பில் இதை எழுதி இருக்கிறீர்கள் என்றும் தற்போது புரிகிறது.
    உங்கள் நம்பிக்கையை நான் குறை சொல்லவில்லை. ஆனால் பொதுப்படுத்தி 'கடவுள்' என்று எழுதியதால் இங்கு பின்னூட்டம் இட்டேன், ஏசு கிறிஸ்து அல்லா என்று கூறி இருந்தால் எஸ்கேப் ஆகி இருப்பேன்.

    மன்னிக்கவும்

    ReplyDelete
  94. சகோ கோவி கண்ணன் மற்றும் முத்து பிரகாஷ்,

    சரியான புரிதல் இல்லாமலே பின்னூட்டமிடுவீர்கள் என்பதற்கு இந்த பதிவு மற்றொரு சாட்சி.

    சகோ துரை டானியல் கிறித்தவர் என்பதை நன்றாக அறிந்தே நாங்கள் வோட்டும் பின்னூட்டமும் இட்டோம். பொதுவாக கடவுள் பத்தி பேசியதாலே எங்கள் பேராதரவை கொடுத்தோம்.
    மற்றவற்றிக்கு சில மணி நேரங்கள் கழித்து இறை நாடினால் பதில் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  95. @ Siraj

    Nanri. Ungalukkum anaithu Muslim Sagothararkalukkum.

    ReplyDelete
  96. சகோ.துரை டேனியல்,
    தங்கள் பதில்கள் அனைத்தும் அருமை..!

    குறிப்பாக, நொந்து போயி இருக்கும் சகோ.சிராஜிடம், //...அப்போதுதானே அவர்களும் கடவுளைப் பற்றி சிந்திப்பார்கள்? ப்ளீஸ் சகோ...// என்ற பதில் உட்பட..! :-))

    'நம்முடைய இடுகையை கண்ணால் பார்த்து இவர் படிக்கிறாரே, கண்ணால் பார்த்து பின்னூட்டம் இடுகிறாரே' என்றுதான்... விழிப்புலன் உள்ள அவரிடம்...

    "கண்ணால் காண்கின்ற ஒவ்வொன்றையும் உற்றுப் பாருங்கள்." என்று கூறி, பார்த்ததை பற்றி அவர் சிந்திப்பார் என்று எதிர்பார்த்து... அப்படி கூறினீர்கள் என்று எனக்கு புரிகிறது.

    ஒருவேளை 'விழிப்புலனே இல்லாமல் பிறந்த' ஒரு நாத்திகரிடம் "காதால் கேட்கின்ற ஒவ்வொன்றையும் உற்றுக்கேளுங்கள்." என்று சொல்லி இருப்பீர்கள்..!

    பிறவியிலேயே பார்வையும், செவிப்புலனும் கூட ஒருவரிடம் இல்லை என்றால், 'இறைவன் படைத்த ஆயிரக்கணக்கான வாசனைகளை நுகர்ந்து பாருங்கள்...' என்றோ...,

    இந்த புலனும் அற்றவர்களுக்கு 'ஆண்டவன் தந்திருக்கும் எண்ணற்ற சுவைகளை சுவைத்துப்பாருங்கள்...' என்றோ...,

    இந்த புலனும் அற்றவர்களுக்கு 'கடவுளின் படைப்புகளை தொட்டு தடவிப்பார்த்தாவது ஸ்பரிசத்தை உணருங்கள்...' என்றோ சொல்வீர்கள்... அல்லவா..?

    நான் உங்களிடம் கேட்கப்போகும் முக்கியமான கேள்வி என்னவென்றால்,

    ReplyDelete
  97. சகோ.துரை டேனியல்,

    நான் உங்களிடம் கேட்கப்போகும் முக்கியமான கேள்வி என்னவென்றால்.............

    "அனைத்து ஐந்து அறிவுப்புலன்கள் மூலமும் கடவுளின் படைப்புத்திறனை உணர்ந்து... நீங்கள் ஏன், அவரை ஆறாவது புலனாகிய பகுத்தறிவு கொண்டு 'சிந்தித்து பாருங்கள்'"என்று அந்த சொற்றடரை முடித்திருக்கலாம்.

    ஆனாலும்.....

    நான் பார்த்தவரை, பொதுவாக பதிவுலகில் தம்மை 'நாத்திகர்கள்' என்று சொல்லிக்கொள்வோர், கடவுள் விஷயத்தில் மட்டும் கடவுளை அறிந்துகொள்ள ஐந்து அறிவுகளை மட்டுமே உபயோகிப்பார்கள்; ஆறாவது அறிவை உபயோகப்படுத்தவே மாட்டார்கள்..! ஆனால் அவர்களிடமும் ஆறாவது அறிவு இருக்கிறது..! இறைவன் எதிர்பார்ப்பது யாதெனில்,
    மெய்யான பகுத்தறிவின் தந்தை இறைத்தூதர் இபுராஹீம் {ஆப்ரஹாம்} (அலை..) போல... மனிதன் தன்னை பகுத்தறிவின் மூலம் அறிய வேண்டும் என்பதே..!

    'உன் குழந்தையை கிணற்றில் போடாதே' என்று நாம் நாதிகரிடம் சொன்னால்... மீறி போட்டுவிட்டு, அது தண்ணீரில் மூச்சுத்திணறி செத்ததும்...

    "இந்த நொடி பிறந்த மீன்குஞ்சுகளுக்கு மட்டும் தண்ணீருக்குள் நீந்தி சுவாசிக்க தெரிகிறது... இந்த ஒரு வயசு குழந்தைக்கு தெரியவில்லையே... இந்த கொலைக்கு குழந்தையை dissolved oxygen ஐ சுவாசிக்கும் gills (செவுள்கள்) இல்லாமல், swimming கற்றுத்தராமல் படைத்த கடவுள் அல்லவா காரணம்...?"

    என்றுதான்
    சொல்லிக்கொண்டே...
    சொல்லிக்கொண்டே...
    சொல்லிக்கொண்டே...
    உள்ளார்கள்..!

    கேட்டால் 'இதுதாண்டா பகுத்தறிவு' என்கிறார்கள்..!

    அவரின் 'எயிட்ஸ் கிருமி பின்னூட்டம்' படித்து நொந்து போயி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..!

    இவர்களிடம் பலமுறை 'சிந்திக்க சொல்லி' விவாதித்து நொந்து நூடுல்ஸ் ஆனவன் நான் சகோ.துரை டேனியல்..!

    முதலில் நாஸ்திகர்கள் கடவுளை பகுத்தறிவின் துண்டைகொண்டு அறியட்டும்..!
    அப்புறம் கடவுளை குறிப்பிடும் மார்க்கம் எது என்று பகுத்தறிவோடு விவாதிக்கட்டும்..!

    ஒண்ணாங்கிளாசே தாண்டாமல், பல்கலைக்கழக பாடத்தை பற்றி நாத்திகர்கள் விவாதித்தால் அவர்களுக்கு அது நாஸ்திதான்..!!!

    ReplyDelete
  98. மூன்றாம் சுழி வலைப்பூவில் அன்பிற்குரிய அப்பாதுரை சார் எழுதிய பதிவை நண்பர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கிறேன்.நன்றி!

    http://moonramsuzhi.blogspot.in/2012/02/blog-post_08.html

    ReplyDelete
  99. //பிறவியிலேயே பார்வையும், செவிப்புலனும் கூட ஒருவரிடம் இல்லை என்றால், 'இறைவன் படைத்த ஆயிரக்கணக்கான வாசனைகளை நுகர்ந்து பாருங்கள்...' என்றோ...,

    இந்த புலனும் அற்றவர்களுக்கு 'ஆண்டவன் தந்திருக்கும் எண்ணற்ற சுவைகளை சுவைத்துப்பாருங்கள்...' என்றோ...,

    இந்த புலனும் அற்றவர்களுக்கு 'கடவுளின் படைப்புகளை தொட்டு தடவிப்பார்த்தாவது ஸ்பரிசத்தை உணருங்கள்...' என்றோ சொல்வீர்கள்... அல்லவா..?//

    ஆமாம் ஐயா, அப்பறம் அவன் உனக்கு இருக்கும் கண் எனக்கு இல்லை என்று கேட்டால் உன்னை இறைவன் சரியாக நாடவில்லை, நாடிக் கொண்டிருக்கும் பாதி வேளையில் வேறு வேலைக்கு ஓடிவிட்டார் என்றும் கூறுங்கள், ஆறாம் அறிவு இருந்தால் விழிப்புலன் அற்றவர் அதை ஏற்றுக் கொள்வார்

    ReplyDelete
  100. @ முஹம்மது ஆ‌ஷிக்

    - நன்றி சகோ. தங்கள் வருகைக்கும் அருமையான விரிவான அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. தங்களது பதிவுகளைப் படித்து இருக்கிறேன். அழகாக எழுதுகிறீர்கள். கடவுளை அறிய ஞானத்தைக் கூட நாம் கடவுளிடமிருந்தூன் பெற வேண்டும். அவர் தந்தாலொழிய அவரைப் புரிந்துகொள்வது இயலாத காரியம். நாத்திகர்களுக்கு அது கூடாத காரியம். முதலில் கடவுளை அறிய வேண்டும் என்ற அவா கொஞ்சமேனும் உள்ளத்தில் எழ வேண்டும். குதர்க்கமாக சிந்திப்பவர்களுக்கு கடவுள் தன்னை வெளிப்படுத்துவதில்லை. அது யாராய் இருந்தாலும் சரி. விதி இதுதான். ஆனால் வேடிக்கை என்னவென்றால் நாத்திகர்களையும் கடவுள் நேசிக்கிறார் என்பதுதான். அவர்களுக்காக அவருடைய இதயம் எப்போதும் திறந்தே இருக்கிறது. அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் முதல் அடி எடுத்துவைப்பதுதான்.

    ReplyDelete
  101. @ முத்துப்பிரகாஷ்

    - கண்டிப்பாக அப்பாதுரை அவர்களின் பதிவை படிக்கிறேன் சகோ.

    ReplyDelete
  102. @ கோவிக்கண்ணன்

    - சகோ. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே ஒரு மதிப்பீட்டை வைத்துக்கொண்டு கடவுளை அளக்க முயன்றால் தோல்வியடைவீர்கள். உங்கள் இதயத்தை திறந்த புத்தகமாக வைத்துக்கொண்டு கடவுளை ஆராய்ச்சி செய்தால் கண்டிப்பாக அவர் உங்களுக்கு தன்னை வெளிப்படுத்துவார். ஆனால் நாம் என் செய்கிறேர்ம் என்றால் விமர்சிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு மட்டும் அவரைத் தேடுவோமானால் நிச்சயம் தோல்விதான் அடைவோம். நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களைப் பற்றி பேசும்போது மிகவும் கவனமாக பேசுதல் நல்லது. இல்லை நான் அப்படித்தான் விமர்சிப்பேன் என்றால் என்னை விமர்சியுங்கள். என் பதிவை விமர்சியுங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். இல்லாத ஒன்றைப் பேச எங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? யோசித்துப் பாருங்கள். இல்லை என்ற கண்ணோட்டத்தோடு பார்ப்பதை விட்டு இருக்குமோ என்ற கண்ணோட்டத்தோடு பாருங்கள். நானும் ஒரு காலத்தில் நாத்திகனாக இருந்தவன்தான் சார். அப்புறம் நீங்களாக இருந்தாலும் சரி. முஸ்லிம் சகோதரர்களாக இருந்தாலும் சரி. கிறிஸ்தவ சகோதரர்களாக இருந்தாலும் சரி. யாராய் இருந்தாலும் ஒருமையில் பேசுவது பண்பாடா? யார் பேசுவது தவறாகவே இருப்பினும் நாம் முறையாக பேசுவதுதானே அழகு. யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்வர்கள் அல்ல. ஆனால் அதைக் கூட நாகரிகமாகவே விமர்சிப்போமே. சொல்வதை அழகான வார்த்தைகளில் சொல்லலாமே? ஏசுவதைக் கூட வார்த்தை நாகரிகத்தோடு பேசலாமே. தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். ஒரு சகோதரனாக நினைத்தே இவற்றை சொல்லுகிறேன். இல்லை இந்த விவாதப்பொருளை விட்டே விலகுவோம். வேறு நல்ல விஷயங்களைப் பேசுவோம். கடவுளைப் பற்றி சரியாகப் பேசுவதை விட தவறாகப் பேசாமல் இருப்பதுதான் நல்லது. நன்றி.

    ReplyDelete
  103. //இல்லை என்ற கண்ணோட்டத்தோடு பார்ப்பதை விட்டு இருக்குமோ என்ற கண்ணோட்டத்தோடு பாருங்கள். // Good point.

    ReplyDelete
  104. நண்பர் துரை டேனியல் அவர்களுக்கு, நாம் நிமிடத்திற்கு நூறு கி.மி.வேகத்தில்
    பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். That 's funny !ஒரு விஷயம்: கடவுள் இருக்கிறார் என்பதற்கு பத்து உதாரணம் காட்டினால் இல்லை என்பதற்கு நூறு காட்ட முடியும். இதெல்லாம் வெறும் வார்த்தை விளையாட்டு தான். நாம் எதையும் தீர்க்கமாக சொல்ல முடியாது.
    //நிச்சயமாக கடவுள் இருக்கிறார் என்பதை இது விளங்கப்பண்ணவில்லையா நாத்திகர்களுக்கு மரண அடிதானே இது?...//இப்படியெல்லாம் எழுதுவதால் கடவுள் இருக்கிறார் என்று ஆகி விடாது. உங்களுக்கு ஹிட்ஸ் மற்றும் சண்டை போடும் பின்னூட்டங்கள் கிடைக்கலாம் அவ்வளவுதான்.....TBC

    ReplyDelete
  105. நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்த விஷயங்களை வைத்துக் கொண்டு கடவுளை நிரூபிப்பது எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். கடவுளை உணர
    உண்மையிலேயே நாம் என்ன செய்தோம்? கண்மூடி நமக்குள் என்ன இருக்கிறது என்று யோசித்தோமா? நமக்குள் தெய்வீகம் இருக்கிறதா என்று அறிய முயற்சி செய்தோமா?சரி பூமி, சூரியன், மனிதன்
    இவையெல்லாம் கச்சிதமாக இருப்பதால் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன
    சொல்ல வருகிறீர்கள்? வாராவாரம் கோயிலுக்குப் போ, உன் மடத்தனங்களை continue பண்ணு, பஸ்ஸில் போகும் போது கோயில்
    வந்தால் கன்னத்தில் போட்டுக் கொள் என்றா? இந்த மாதிரி அரைகுறை விஷயங்களால்
    என்ன பயன் என்று தயவு செய்து யோசிக்கவும். TBC ..

    ReplyDelete
  106. வேகம் என்பது ஒரு RELATIVE TERM ..100 km /min என்றால் With respect to what ?
    இதைப் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை.அறிவியல் பதிவுகள் எழுதும் போது கொஞ்சம் கவனமாக நிறைய REFER
    செய்து எழுதவும்.அப்புறம் இது இப்படி இருக்கலாம் என்று எழுதுங்கள். இது இப்படித்தான் அவனை அடி இவனை உதை என்றெல்லாம் எழுத வேண்டாம். அறிவியலை எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏதோ எங்கேயோ
    படித்த விஷயத்தில் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதுவது சரிதான்.தெரியாதவர்கள் ஆஹா அருமை என்று பதில் போடுவார்கள். (அவர்கள் பதிவுக்கு நீங்களும் வந்து கமென்ட் போடவேண்டும்
    என்று எதிர்பார்ப்பவர்கள்)உங்களுக்கு
    அதுதான் வேண்டும் என்றால் தாரளமாக எது வேண்டுமானாலும் எழுதலாம்.அப்புறம் the so called நாத்திகர்கள் சண்டைக்கு வருவார்கள்.பூமி
    சுற்றுகிறது என்றால் அது எப்படி கடவுள் இருப்பதற்கு சான்றாக முடியும் என்று ...TBC

    ReplyDelete
  107. பூமி சூரியனை சுற்றிப் போவதை நாம் பஸ்ஸில் போவதோடு ஒப்பிட முடியாது.பஸ்ஸில் போகும் போது நாம் 'பூமியைப் பொறுத்து' இன்ன வேகத்தில்
    பயணிக்கிறோம்.(பூமி நிலையாக இருக்கிறது என்ற Assumption இல்)அதே போல பூமி இன்ன வேகத்தில் பயணிக்கிறது என்று சொல்லும் போது அதற்கு என்ன
    REFERENCE என்று தயவு செய்து சொல்லவும்.THERE IS NO ABSOLUTE SPACE என்று நியூட்டனின் விதி சொல்கிறது.ஈதரும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.சூரியனைப் பொறுத்தா?என்றால் அதுவும் இல்லை.ஏனென்றால் சூரியனும் பால்வெளியின்
    மையத்தை சுற்றுகிறது. (பயங்கர வேகத்தில்) பால்வெளி காலக்ஸியே நம் பிரபஞ்சத்தின்
    மையத்தை சுற்றிக் கொண்டு இருக்கலாம். எனவே நம் வேகம் என்ன? சூரிய மண்டலத்தின் வேகத்துடன் ஒப்பிடும்போது நம் பூமியின் வேகம் ஜுஜுபி. அது அடிபட்டுப்போய் விடும். எனவே நம் உண்மையான வேகம் என்ன? இதற்கு
    ஓரளவு சரியான பதில் வேகமே இல்லை என்பது தான். வேகம் என்பது சீராக இருக்கும்
    வரை அதை நாம் நிலையான ஒரு FRAME OF REFERENCE உடன் வேறுபடுத்த முடியாது.
    இதன் அடிப்படையில் தான் ஐன்ஸ்டீனின் தியரி உருவானது. இதில் எதற்குத் தேவையில்லாமல் கடவுளை இழுக்க வேண்டும் என்று தெரியவில்லை. TBC

    ReplyDelete
  108. @ சமுத்ரா
    'கடவுள் இல்லை' என்று ஆதாரத்துடன் அறிவியலால் நிரூபிக்கப்பட்ட சான்று ஏதேனும் உள்ளதா..? TBC

    ReplyDelete
  109. //அப்படியில்லாது பூமிக்கருகில் நாம் காணக்கூடிய எப்பொருளும் இல்லாதிருப்பதினால் நாம் இப்பூமியோடு சேர்ந்து அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் சற்றேனும் உணர முடியவில்லை. எவ்வளவு வியப்பாக இருக்கிறது. இல்லையா?//சரி. ஸ்கூல் லெவலில் இந்த விளக்கம் சரிதான். ஆனால் நட்சத்திரங்களை
    மறந்து விட்டீர்களே? தூரத்து நட்சத்திரங்களை நாம் REFERENCE ஆக வைத்துக்
    கொள்ள முடியும்.[With respect to what என்ற கேள்விக்கு இது ஒரு 'கிட்டத்தட்ட' பதில்]
    தூரத்து நட்சத்திரங்கள் நிலையாக இருக்க பக்கத்து விண்மீன்களின் நிலை
    அடிக்கடி மாறுவதை வைத்து, மேலும் பருவ காலங்கள் மாறுவதை வைத்து பூமி
    சூரியனை சுற்றுகிறது என்று கண்டுபிடித்தார்கள்.

    ReplyDelete
  110. @ சமுத்ரா
    எந்த ஒரு பம்பும் இயங்க மோட்டார் வேண்டும். இதயம் என்ற பம்பின் மோட்டார் எது. பம்ப்புக்கு உள்ளேயே உள்ள பேஸ்மேக்கர் என்றால் அதை யாரு ஸ்டார்ட் பண்ணினது? எப்படி? TBC

    ReplyDelete
  111. Ocean ,@ சமுத்ரா
    'கடவுள் இல்லை' என்று ஆதாரத்துடன் அறிவியலால் நிரூபிக்கப்பட்ட சான்று ஏதேனும் உள்ளதா..?
    ஒன்று இருக்கிறது என்பதற்கு தான் சான்று வேண்டும். இல்லை என்பதற்கு வேண்டாம் என்று
    நினைக்கிறேன். ஆனால் அறிவியலாலும் கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாது.
    ஏனென்றால் கடவுள் என்பது நம் புலன்களுக்கும் கருவிகளுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு
    விஷயமாக இருக்கலாம்.

    ReplyDelete
  112. @ சமுத்ரா
    எந்த ஒரு பம்பும் இயங்க மோட்டார் வேண்டும். இதயம் என்ற பம்பின் மோட்டார் எது. பம்ப்புக்கு உள்ளேயே உள்ள பேஸ்மேக்கர் என்றால் அதை யாரு ஸ்டார்ட் பண்ணினது? எப்படி? TBC இயற்பியலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது
    திடீரென்று உயிரியலுக்கு மாறுகிறீர்கள், Btw, I'm not here to prove there is no God :-)

    ReplyDelete
  113. @ சமுத்ரா
    //ஒன்று இருக்கிறது என்பதற்கு தான் சான்று வேண்டும்.இல்லை என்பதற்கு வேண்டாம் என்று
    நினைக்கிறேன்.//

    ---நானும் பள்ளியில் அறிவியல் படித்துள்ளேன். ஒரு குடுவையில் 'ஆக்சிஜன் இல்லை' என்று நிரூபிப்பது எப்படி என்று.

    இன்னொரு பிலிப்ஸ் பல்பில் 'காற்று இல்லை' என்று நிரூபிப்பது எப்படி என்று.

    காப்பர் கம்பியில் 'மின்னோட்டம் இல்லை' என்று நிரூபிப்பது எப்படி என்று.

    உங்கள் ஸ்கூலில் 'இருப்பதற்கு மட்டும்'தான் சோதனை சொல்லி கொடுத்து இருக்காங்க போல.

    //ஆனால் அறிவியலாலும் கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாது.//---எப்படி சொல்கிறீர்கள்? உங்களுக்கு தெரியுமா? ஆய்ந்து அறிந்த அறிவியல் முடிவா இது?

    /////அறிவியல் பதிவுகள் எழுதும் போது கொஞ்சம் கவனமாக நிறைய REFER
    செய்து எழுதவும்.அப்புறம் இது இப்படி இருக்கலாம் என்று எழுதுங்கள். இது இப்படித்தான் அவனை அடி இவனை உதை என்றெல்லாம் எழுத வேண்டாம்./////---இப்படி துரை டேனியலுக்கு சொன்னவர் அல்லவா நீங்கள்?

    //நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்த விஷயங்களை வைத்துக் கொண்டு கடவுளை நிரூபிப்பது எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். ---சமுத்ரா said//---பிடிக்காதா? முடியாதா? எது சரி?

    //கடவுள் இருக்கிறார் என்பதற்கு பத்து உதாரணம் காட்டினால் இல்லை என்பதற்கு நூறு காட்ட முடியும். ---சமுத்ரா said//---ஒன்று சொல்லுங்களேன். (Btw, I'm not here to prove there is no God :-) )---அடடா!


    //ஏனென்றால் கடவுள் என்பது நம் புலன்களுக்கும் கருவிகளுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு
    விஷயமாக இருக்கலாம்.---சமுத்ரா said//---ஐம்புலனுக்கு அப்பாற்பட்டது என்று ஒத்துக்கொள்கிறேன். ஆறாவது புலனான பகுத்தறிவுக்கும் கடவுளை அறிய முடியாதா?

    சரி, இறுதியாக என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

    ஆத்திகர்களிடம் 'கடவுள் உண்டு' என்பதில் இருக்கும் தெளிவு, 'கடவுள் இல்லை' எனும் நாத்திகர் ஒருவரிடம் கூட நான் இதுவரை பார்த்தது இல்லை. நீங்களும் விதிவிலக்கல்ல.

    ஏகமாக குழம்பி உள்ளீர்கள். சந்திரன் ஏன் பூமியை சுற்ற வேண்டும்? பூமி ஏன் சூரியனை சுற்ற வேண்டும்? சூரியன் ஏன் பால்வீதி மையத்தை சுற்ற வேண்டும்? பால்வீதி மண்டலம் ஏன் பிரபஞ்ச மையத்தை சுற்ற வேண்டும்? பிரபஞ்சம் ஏன்.... (ஓ இன்னும் கண்டுபிடிக்கவில்லையோ) போன்ற கேள்விகளை எல்லாம் நான் நாதிகர்களிடம் கேட்பது இல்லை.

    ReplyDelete
  114. Ocean அவர்களுக்கு.. எனக்கு சண்டை போடப் பிடிக்காது.மேலும் நாம் இருவரும் ஒரே அர்த்தம் கொண்ட பேரை வைத்திருக்கிறோம் ;-)Still ,,,ஆக்சிஜன் இல்லை காற்று இல்லை
    மின்னோட்டம் இல்லை என்று நிரூபிப்பது வேறு. ஏனெனில் நாம் ஏற்கனவே ஆக்சிஜன் காற்று மின்னோட்டம் இவை 'இருக்கின்றன' என்று சோதனை செய்து கண்டுபிடித்து விட்டோம்.
    இருக்கின்ற ஒன்றை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்று நிரூபித்து விடலாம். கடவுள் விஷயத்தில் இது வேறு.

    ReplyDelete
  115. நான் நாத்திகன் இல்லை. சைக்கிள் கேப்பில் என்னை
    நாத்திகன் ஆக்கி விட்டீர்களே?:)I 'm just Agnostic !

    ReplyDelete
  116. ஏகமாக குழம்பி உள்ளீர்கள்.உண்மை தான்.. நான் ஆத்திகனும் அல்ல நாத்திகனும் அல்ல..அதனால் தான் இத்தனை குழப்பம். உண்மையை அறியும் பாதையில் எல்லாருக்கும் இந்த குழப்பம் இயற்கை.
    If you are Theist or Atheist, matter is over.. no confusion ;)

    ReplyDelete
  117. சந்திரன் ஏன் பூமியை சுற்ற வேண்டும்? பூமி ஏன் சூரியனை சுற்ற வேண்டும்? சூரியன் ஏன் பால்வீதி மையத்தை சுற்ற வேண்டும்? பால்வீதி மண்டலம் ஏன் பிரபஞ்ச மையத்தை சுற்ற வேண்டும்?//நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனின்
    பொது சார்பியல் கொள்கையைப் படித்து விட்டு
    வந்து சண்டை போடவும்.

    ReplyDelete
  118. சமுத்ரா அவர்களுக்கு,

    அறிவார்ந்த ஒரு விவாதத்தை சண்டை என்ற பெயரில் நீங்கள் அழைத்தால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. பெயர் முக்கியமில்லை, கருப்பன் என்ற பெயருடவர் வெள்ளையாக இருக்கலாம். மிக்க நன்றி.

    //ஏனெனில் நாம் ஏற்கனவே ஆக்சிஜன் காற்று மின்னோட்டம் இவை 'இருக்கின்றன' என்று சோதனை செய்து கண்டுபிடித்து விட்டோம்.//---வாவ். சூப்பர். மிகவும் நன்றி.

    அதாவது...
    நீங்கள் சொல்வது என்னவென்றால்...

    'கடவுள் உண்டு' என்ற ஆதி மனிதன் கருத்தை 'கடவுள் இல்லை' என்று புதிதாக மாற்ற பார்க்கிறீர்கள்.

    'கடவுள் இல்லை' என்பதுதான் ஆதிமுதல் கருத்து என்று உங்களால் சொல்ல இயலவில்லை. :-))

    'இருக்கிறது' என்று சொல்லப்பட்டு வரும் ஒன்றை எதற்கு 'இல்லை' என்று சொல்ல முயல்கிறீர்கள்?

    ReplyDelete
  119. கடவுள் என்ற ஒன்றை ஏதோ ஒரு
    OLD MAN IN THE SKY லெவலுக்குப் பார்ப்பதை
    முதலில் நிறுத்தவும்.படைப்பும் படைத்தவனும்
    வேறு இல்லை என்கிறார் ஓஷோ. கடவுள் என்று
    சொன்னால் தேவையில்லாமல் நிறைய Side effects
    வரும்,.அது அல்லாவா? விஷ்ணுவா? பரம பிதாவா?ஆணா பெண்ணா , அந்த ஆளை யார் படைத்தது என்றெல்லாம்..
    எனவே படைப்பை வியப்போம். பாறை மாதிரி
    இதயத்தை வைத்துக் கொள்ளவேண்டாம். படைப்பு
    தான் கடவுள். பிரபஞ்சம் தான் கடவுள்.
    //'கடவுள் உண்டு' என்ற ஆதி மனிதன் கருத்தை 'கடவுள் இல்லை' என்று புதிதாக மாற்ற பார்க்கிறீர்கள்.//ஆதி மனிதன் சொன்னான் என்பதற்காக ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆதிமனிதன் பூமியை நான்கு மெகா ஆமைகள் தாங்கிப் பிடிக்கின்றன என்றும் தான் சொன்னான்!

    ReplyDelete
  120. சமுத்ரா அவர்களுக்கு,

    //உண்மையை அறியும் பாதையில் எல்லாருக்கும் இந்த குழப்பம் இயற்கை.//---சரியே.
    //I 'm just Agnostic ! //---மிகவும் நன்றி.

    //படைப்பும் படைத்தவனும்
    வேறு இல்லை என்கிறார் ஓஷோ.//---அப்போ... பில் கேட்ஸ் தான், மைக்ரோ சாப்ட் மென்பொருளா?

    விஷயம் இப்படி இருக்க,
    அதி மனிதன் முதலில் theist ஆ?
    atheist ஆ?
    agnostic ஆ?

    "மனித இன இயலின் ஆதாரப்படி பூர்விக இனங்களின் ஆதிமதம் உண்மையிலேயே ஏக இறைக்கொள்கையாகவே இருந்தது" - என அகழ்வராய்ச்சித் துறையின் பிரபல பேராசிரியர் சர். சார்லஸ் மார்ஸ்டனும் (SIR. CHARLES MARSTON)

    " ... ஆதி மனிதனின் ஆரம்பக்கால வரலாற்றின் படி, மத நம்பிக்கை ஏக தெய்வ வணக்கத்திலிருந்து பல தெய்வ வணக்கத்தின் பால் சரிந்தது என்பதும் , ... ஆதி மனிதன் இறப்பிற்கு பின்னால் ஒரு வாழ்வு உண்டென்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தான் - என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் டாக்டர். லாங்க்டன் கூறுகிறார்.

    நாமே இன்னும் குழப்பத்தில் இருக்கும்போது அவர்களுக்கு கடவுள் பற்றி எப்படி தெரிந்தது? யார் சொல்லிக்கொடுத்தது?

    உயிர் வாழ சிறிதும் தொடர்பே இல்லாத இறை நம்பிக்கை என்ற ஒன்று ஏன் ஆதிமனிதனுக்கு ஏற்பட வேண்டும்..?

    அன்றைய கட்டத்தில் உயிர்வாழ காற்றே பிரதான ஆகாரமாக இருக்க "அக்ஸிஜன் குறித்து அறியவேண்டிய ஆரம்பகால மக்கள் கடவுள் குறித்து அறிந்து வைத்திருப்பது எப்படி?

    ReplyDelete
  121. Same side goal போடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் ப்ளாக்கிலும் கடவுள் உண்டு என்று நிறிய எழுதி இருக்கிறேன்:) தங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  122. Ocean, God is a belief..சரி கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.. What 's next ?அவரால் என்ன உபயோகம்? போலிச்சாமியார்கள் இன்னும் அதிகரிப்பார்கள்;கடவுளின் பெயரால் வியாபாரங்கள் பெருகும்.எனக்கு பணம் கொடு எனக்கு வேலை கொடு என்று கடவுளை ப்ரோக்கராக பார்க்கும் அபத்தங்கள் தொடரும்.இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருப்பதுதான்
    நல்லது.

    நந்தனார் கதையில் இருப்பது போல
    'கண்டாரும் கிடையாது
    விண்டாரும் சொன்னதில்லை
    ஆண்டாண்ட கோடியெல்லாம் ஒன்றாய் சமைந்திருக்கும்
    அல்லவோ? பறையன் சொல்லவோ? அங்கு செல்லவோ நேரமாகுதல்லவோ?'

    நான் கடவுளை அனுபவப்பூர்வமாக அறிந்து கொண்டு விட்டேன். .எனவே இனி
    விவாதிக்க ஒன்றும் இல்லை. என்னைப் பொறுத்த அளவில் கடவுள் சர்வ நிச்சயமாக உண்டு. எனக்கு நேரமாகிறது. சிதம்பரம் போகவேண்டும் என்கிறார்.
    எனவே கடவுளை அனுபவப்பூர்வமாக அறிந்திருந்தால் நானும் நீங்களும்
    இப்படி இங்கே யாரோ ஒருவர் வலைப்பூவில் சண்டை போட மாட்டோம்.

    ReplyDelete
  123. //அப்போ... பில் கேட்ஸ் தான், மைக்ரோ சாப்ட் மென்பொருளா?//இது போன்ற விதண்டாவாதங்கள் வேண்டாம்.

    ReplyDelete
  124. @ சமுத்ரா சொன்னது //Same side goal போடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் ப்ளாக்கிலும் கடவுள் உண்டு என்று நிறிய எழுதி இருக்கிறேன்:) தங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். //

    - அப்படியா சகோ. நன்றி. அதே போல நானும் ஒரு காலத்தில் தீவிர நாத்திகனாக இருந்திருக்கிறேன். தாங்கள் என் தளத்திற்கு வந்து அருமையாக மாற்றுக் கருத்துகளை வைக்கிறதற்காக நன்றி. தாராளமாக உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். ஆரோக்கியமான விவாதம் நல்லதுதானே. நன்றி. தொடர்ந்து வாருங்கள். உங்கள் கேள்விகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  125. கௌதம புத்தரின் முன் கேட்பதற்கு கீழ்வரும் கேள்விகள் தடைசெய்யப்பட்டிருந்தன.

    *கடவுள் உண்டா?இல்லையா?
    *மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது?
    * நான் யார்?
    *பிரபஞ்சம் ஏன் படைக்கப்பட்டது?

    Not that he did not know the answers, but these questions are merely Subjective...And one has to realize the truth through experience, not through ready-made philosophies...-OSHO

    ReplyDelete
  126. //சரி கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.. What 's next ?அவரால் என்ன உபயோகம்?//---ok. thats good.

    //போலிச்சாமியார்கள் இன்னும் அதிகரிப்பார்கள்;கடவுளின் பெயரால் வியாபாரங்கள் பெருகும்.எனக்கு பணம் கொடு எனக்கு வேலை கொடு என்று கடவுளை ப்ரோக்கராக பார்க்கும் அபத்தங்கள் தொடரும்.//---'கண்டவர் விண்டிலர்; விண்டியவர் கண்டிலர்' சரியாக சொல்லிவிட்டு அப்புறம் எதற்கு போலிகளை கண்டு ஏமாற வேண்டும்? கடவுளுக்கு புரோக்கர் கிடையாது.

    நீங்கள் எதற்கு இதுபோன்ற தவறான உதாரணங்களையே பார்க்கிறீர்கள்?

    பிரசவத்தின் போது ஓரிருவர் இறக்கலாம். அதற்காக கல்யாணமே வேண்டாம் என்ற முடிவு சரியல்ல.

    //அவரால் என்ன உபயோகம்?//---மிகவும் அருமையான கேள்வி.

    டாஸ்மாக் நம் அரசு நடத்துகிறது. அரசு செய்தால் அது சரியாகத்தான் இருக்கும். நாம் என்ன செய்ய வேண்டும்? நாட்டின் சட்ட அனுமதிப்படி குடிக்க வேண்டுமா? அல்லது போதையில் மதி இழந்து என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தமக்கும் பிறருக்கும் அநீதி இழைக்கனுமா? பின்னர் நோய் வந்து அவதிப்படனுமா? இது போன்ற கேள்விகளுக்கு விடை கடவுள் சொல்லி இருந்தாகனும் அல்லவா? அந்த கடவுளை எந்த மதம் சொல்கிறது? அந்த மதத்துக்காரர்கள் குடிக்காமல் இருப்பதுதான் அவர்களுக்கு கடவுளால் கிடைத்த உபயோகம் என்று நினைக்கிறேன்.

    //நான் கடவுளை அனுபவப்பூர்வமாக அறிந்து கொண்டு விட்டேன். .//--ஓகே நன்றி. குட் பை.

    ReplyDelete
  127. @ Ocean

    - எனக்கு ஆதரவுக் கரம் நீட்டியதற்காக மிக்க நன்றி சகோ. இப்படி நாலு பேரு வந்ததானே நமக்கு பூஸ்ட் குடிச்ச மாதீரி இருக்கும். தொடருங்கள். நானும் சேர்ந்துகொள்கிறேன். Once again a lot of thanks to You.

    ReplyDelete
  128. //ஓகே நன்றி. குட் பை. //பாயன்ட் கிடைக்கவில்லை என்பதற்காக குட் பை
    எல்லாம் சொல்லக்கூடாது. கடவுள் இருக்கிறார்
    என்ற நம்பிக்கையில் இன்று சில பல நல்ல
    விஷயங்கள் நடந்து வருவது உண்மைதான். கடவுள்
    தண்டித்து விடுவாரோ என்ற பயத்தில் நிறையப்பேர்
    தவறு செய்யாமல் இருப்பதும் நல்லது தான்.
    ஆனால் கடவுள் என்பது இதையெல்லாம் விட ஓர் அனுபவம். கடவுள் என்பதை சரியாகப் புரிந்து கொண்டால் பூமியே சொர்கமாக மாறும் என்பது தான் உண்மை.ஏனெனில் கடவுளை அனுபவமாக உணர்ந்தவன் அடுத்தவனை எந்த விதத்திலும் துன்பம் செய்யமாட்டான்.போரிடமாட்டான். கொல்லமாட்டான். அடுத்தவனை ஏய்த்து பணம் குவித்து வைக்க மாட்டான். மாறாக
    கடவுளை இப்படியெல்லாம் தத்துவரீதியாக
    அணுகினால் அது ஆபத்தானது. என்ன தான் சொன்னாலும் நீங்கள் அடுத்தவனை எதிரியாகத்தான் பார்ப்பீர்கள்.

    ReplyDelete
  129. துரைடேனியல், என்ன தான் சொன்னாலும் நீங்கள்
    எழுதியதில் எனக்கு உடன்பாடு இல்லை. நிறைய
    பேர் படித்து கருத்து சொன்னார்கள் என்பதால் தவறு
    உண்மையாகி விடாது. பூமி சுற்றுவதை நாம்
    உணர்வதில்லை. கொஞ்சம் கம்மியாக சுற்றினால் சூரியனில் விழுந்து விடும். எனவே கடவுள் இருக்கிறார் என்று சம்பந்தம் இல்லாமல் எழுதி இருக்கிறீர்கள். இது Pseudo science .. பதிவை மாற்றவும்..இல்லை 'நான் சொன்னது என் கருத்து தான். இதில் உண்மை இல்லாமலும்
    இருக்கலாம்' என்று ஒரு வரி சேர்க்கவும்.It may sound rude.. but Truth always hurts.Thank You

    ReplyDelete
  130. கடவுளை நிரூபிக்க பூமியின் வேகம், காலக்சி என்று போக வேண்டியதில்லை.
    நம் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருக்கும் அழகிய மலரைப் பார்த்தாலே போதும்.
    சரி. வாசகர்களைக் கவர இப்படி அறிவியல் ஆன்மிகம் என்று எழுதுவதில்
    தவறு இல்லை. ஆனால் இது தான் உண்மை என்ற தொனியில் எழுதாமல்
    இருந்தால் நலம்...நன்றி

    ReplyDelete
  131. @ சமுத்ரா

    - இல்லை. நான் கடவுள் உண்டென்று நிச்சயமாக நம்புகிறேன். அனுபவரீதியாக கண்ட உண்மை அது. மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறேன். அவ்வளவே.

    ReplyDelete
  132. விவாதங்களை விட்டுவிட்டு இதன் இயற்பியலைப் பார்ப்போம். பூமியின் வேகத்தை நாம் ஏன் உணர்வதில்லை? நல்ல கேள்வி..பூமி ப்ரேக் போடாதவரையில் ACCELERATE ஆகாத வரையில் நாம் உணர மாட்டோம். சீரான வேகமும் நிலையாக இருப்பதும் ஒன்று தான். எனவே பூமி நூறு அல்ல கோடி மைல்கள் நிமிடத்துக்கு ஓடினாலும்
    அது சீராக ஓடினால் அதன் வேகத்தை நாம் உணர மாட்டோம். விண்மீன்களைப்
    பார்த்துத் தான் பூமி நகருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பஸ்ஸில் நாம்
    போகும் போது தூரத்தில் உள்ள மரங்கள் வேகமாகவும் பக்கத்தில் உள்ளவை சீக்கிரமும்
    நகருமே ? அதுபோல . தூரத்து விண்மீன்கள் நகராது. பக்கத்தில் உள்ளவை கொஞ்சம்
    சில ஆர்க் செகண்டுகள் நகரும். அதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும்.
    சரி ..சீரான வேகத்தில் நேர்க்கோட்டில் செல்லும் பொருளின் வேகத்தை தான்
    (உள்ளே இருப்பவரால்) உணர முடியாது. Accelerated frame of ref .
    இல் உணர முடியும். Acceleration என்பது வேகமோ திசையோ மாறுவது.
    பூமியின் திசை மாறுகிறதே? அது ஒரு Accelerated Frame of Reference என்று
    எடுத்துக் கொள்ளலாமே?

    TBC ...

    ReplyDelete
  133. //இல்லை. நான் கடவுள் உண்டென்று நிச்சயமாக நம்புகிறேன். அனுபவரீதியாக கண்ட உண்மை அது. மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறேன். அவ்வளவே. //அப்படியானால் கடவுளை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்
    அதனால் கடவுள் உண்டு என்று உங்கள் பதிவில் சொல்லி இருக்கலாமே? பூமி, சூரியன் என்று எதற்கு தலையை சுற்றி மூக்கைத் தொடும் வேலை? என் வருத்தம் என்ன என்றால் அறிவியலை யாரும்
    தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பது தான்.

    ReplyDelete
  134. //அனுபவரீதியாக கண்ட உண்மை அது. மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறேன்.//உங்கள் அனுபவம் உண்மை என்றால் ஏன் மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறீர்கள்?இது நீங்கள் சந்தேகத்தில் இருப்பதையே காட்டுகிறது. கடவுள் உண்டு என்று
    நிச்சயம் நம்பினால் ஏன் மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறீர்கள்? உங்கள் ப்ளாக் பிரபலமடைய வேண்டும் என்றா? அதற்கு கடவுள் தான் கிடைத்தாரா?

    ReplyDelete
  135. ஒரு ரயில் நேரான பாதையில் சீராக ஓடிக் கொண்டிருந்தால் அதன் உள்ளே இருப்பவர்கள் அதன் இயக்கத்தை உணர மாட்டார்கள் (வெளியே எட்டிப் பார்க்காமல் இருந்தால்) அதே ரயில் ஒரு வளைவில் திரும்பினால் அதை உள்ளே இருப்பவர்களால் உணர முடியும். (without any ref )அப்படியானால் வெளியே விண்மீன்களை பார்க்காமலேயே நாம் பூமியின் இயக்கத்தை உணர முடியும் (அது பாதையை தொடர்ந்து மாற்றுவதால்) ஏன் உணர முடிவதில்லை?பூமி நம் சைசுடன் ஒப்பிடும் போது மிகப்பெரியது என்பதாலா? குறைந்த பட்சம் கடல்கள், மலைகள் அதை உணர வேண்டுமே????? TBC

    ReplyDelete
  136. @ சமுத்ரா

    - கொஞ்சம் அலுவலகத்தில் பிசியாய் இருக்கிறேன். சகோ. ப்ரீயா ஆனதும் தங்கள் கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதில் தருகிறேன். மாற்றுக்கருத்துக்களை வரவேற்பது கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் வரட்டுமே என்றுதான். அறிவியல் என்றால் என்ன? இருப்பதை விளக்குவது. நாங்கள் மூலங்களே கடவுளால்தான் என்று சொல்கிறோம். அவருடைய கைவண்ணத்தைப் பார்த்து வியந்து பாராட்டுகிறோம். ஓ.கே. Wait for my replies till today night Thank You Bro.!

    ReplyDelete
  137. இரண்டு விஷயங்கள் இங்கே:நான்காவது பரிமாணத்தையும் எடுத்துக் கொண்டால்
    பூமியின் பாதை ஒரு நேர்க்கோடு என்கிறது ஐன்ஸ்டீனின் தியரி. பூமி நேர்க்கோட்டில் தான் செல்கிறதாம்! நீள் வட்டப் பாதை அல்ல. எனவே பூமியின் இயக்கம் நேர்க்கோட்டில் இருப்பதாலும் வேகம் சீராக இருப்பதாலும் நம்மால் அதன் இயக்கத்தை நேரடியாக உணர முடிவதில்லை.இரண்டு :பூமி வளைந்த பாதையில் சென்றால் அதற்கு முடுக்கம் கிடைக்கிறது. இந்த முடுக்கம் நம்மால் உணரப்படும் முன்பே அதன் ஈர்ப்பாக மாற்றப்படலாம்.(GRAVITY ACCELERATION EQUIVALENCE) ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் படி ஈர்ப்பும் முடுக்கமும் என்றுதான்.பூமியின் திசை மாறுவதால் கிடைக்கும் ஒரு சிறிய முடுக்கம் அதன் ஈர்ப்புடன் சேர்க்கப்படலாம்.எனவே இரண்டு விதத்திலும் நம்மால் இயக்கத்தை உணரமுடியாது.

    ReplyDelete
  138. I had replied assuming that you meant the motion of orbiting around the Sun.Sorry if you meant earth's self Rotation :P :P :P

    ReplyDelete
  139. Bye..கடைசியாக, உங்களைப் புகழ்பவர்கள் எல்லாம் நண்பர்களும் அல்ல.விமர்சிப்பவர்கள் எல்லாம் எதிரிகளும் அல்ல... Let's meet in some other post if time permits..

    ReplyDelete
  140. துரை ,

    வணக்கம், நீங்க ஆன்மீகம் பேசுவது வேறு ஆனால் அதுக்கு எதுக்கு அறிவியலை துணைக்கு அழைக்கிறிங்க?

    புவி மையக்கொள்கை, , பூமி தட்டைனு எல்லாமே ஆன்மீகத்தின் தவறான புரிதலை ,எதிர்ப்பை மீறித்தான் அறிவியல் நிருபித்திருக்கிறது. இப்போ பூமி பயணிக்கும் வேகம் , அது இதுனு உங்க ஆன்மீகத்திற்கு துணைக்கு அழைக்க எப்படி முடியும் :-))

    எந்த கண்டுப்பிடிப்புகளை மதவாதிகள் எதிர்த்தார்களோ அதையே துணைக்கு அழைத்து கடவுள் இருக்கார்னு சொல்ல மதவாதிகளால் மட்டும் எப்படி முடியுது?

    மேலும் தவறாக புரிந்துக்கொண்டு /தெரிந்துக்கொண்டு பயன்ப்படுத்திறிங்க.

    //இதைவிட சற்றுக் குறைந்த வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனால் இழுக்கப்பட்டு எரிந்து விடும். இதைவிட சற்று அதிக வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனைவிட்டு அதிக தூரம் விலகிப்போய் மிகவும் குளிர்ந்து விடும். விறைத்துச் சாகவேண்டியதுதான் (பனிக்கட்டி மூடிவிடுவதினால்).

    ஆகவே, பூமி சுற்றும் வேகம் சிறிது மாறினால் கூட போதும். பூமியின் மீது எந்த ஜீவராசியும் (தாவரம், மிருகம், மனிதர்) உயிர் வாழவே முடியாது. இவ்விதமாகவே இப்பூமி இவ்வித இரண்டு பயங்கர ஆபத்தான நிலைமைகளுக்கு இடையே மயிரிழையில் வைக்கப்பட்டுள்ளது.//

    பூமி நீள்வட்டப்பாதையில் சுழல்கிறது(அதுவும் இல்லை ,சொன்னால் குழப்பும், ) எனவே பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் நிலை அல்ல.

    நீள் வட்ட பாதையில் அன்மை,சேய்மை என இரண்டு நிலை, கெப்ளர்ஸ் விதிப்படி பூமி சில இடங்களில் மெதுவாகவும் சில இடங்களில் வேகமாகவுமே பயணிக்கிறது. சராசரி வேகத்தை வைத்துக்கொண்டு கொஞ்சம் வேகமாக போனா , மெதுவாக போனால் என்றெல்லாம் பூ சுத்துகிறீர்களே :-))

    மேலும் பூமி சுழலும் வேகமும் நிலையானது அல்ல அதுவும் ஏற்ற இறக்கத்துடனே இருக்கு.பூமி,நிலா,சூரியன் பேரி சென்டர் , நியுட்டனின் இயங்கியல், & ஈர்ப்பு விதி என்று உள்ளே போனால் விளக்கம் கிடைக்கும், நேரம் இருந்தால் இணையத்தில் தேடிப்பார்க்கவும்.

    ---------

    சமுத்திரா,

    அவரே குழம்பி இருக்கார் நீங்க வேற இன்னும் போட்டு குழப்பிக்கிட்டு :-))

    ReplyDelete
  141. வவ்வால் (?) நன்றி..நான் குழப்பவில்லை. Just trying my best

    //மாற்றுக்கருத்துக்களை வரவேற்பது கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் வரட்டுமே என்றுதான். //நல்லது. ஆனால் மாற்றுக் கருத்துக்களால் சிலருக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கையும் போய் விடும் என்று நீங்கள் யோசிக்கவில்லையா? You will have to think of all possibilities.

    Try to understand.I'm not here to fight!ஆத்திக நாத்திக சண்டையெல்லாம் சங்கராச்சாரியார் லெவல் சமாச்சாரம்.நமக்கு இருக்கும் அறிவில் அதன் பக்கத்திலேயே போகமுடியாது.

    இன்றைய தேதியில் பிளான்க் எல்லையில் இருந்து பிரபஞ்சத்தின் விரிவடைதல் வரை எங்கும் கடவுளின் இருப்பு தென்படவில்லை.
    ஹிக்ஸ் போசான் கடவுளின் துகள் என்று அழைக்கப்படுவது ஒரு பெயர் மட்டுமே!
    கடவுளின் இருப்பு தென்படவில்லை என்று சொல்லும்போது நான் கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை. அவர் படைப்பாகவே இருக்கலாம்.Or he/she is so hidden..ஒரு கைதேர்ந்த கலைஞன் ஒரு படைப்பைப் படைத்தால்
    அதை மீண்டும் சரிசெய்யலாம் என்ற தேவையே வராது.அதன் பிறகு creator-இன் தேவை இல்லை.அதனால்தான் இந்தியாவில் பிரம்மனுக்கு கோயில்கள் இல்லை.காக்கும் தொழிலுக்கு கடவுள் தேவையில்லையா என்று நீங்கள் கேட்கலாம்.அது மனித மனத்தின் பிரமை.(வேலை வேண்டும் கல்யாணம் ஆக வேண்டும் etc )மற்றபடி Universe is self-motivated and stand alone! யார் தேவையும் இல்லாமல் தானே இயங்கி தானே அழிந்து
    மீண்டும் தானே உருவாகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது பிரபஞ்சம்.
    வடிவமைத்தவர் MAY BE கடவுளாக இருக்கலாம். யாருக்கும் தெரியாது.அதனால் அவருக்கு இந்த மாதிரி physical necessities இல்லை. மீண்டும் சொல்கிறேன். கடவுள் என்பது சொந்த அனுபவம்.
    அது இதயத்தின் அல்லது ஆத்மாவின் தேவை. பிரபஞ்சத்தின் தேவை அல்ல.இல்லை. மீண்டும் சொல்கிறேன். கடவுள் என்பது சொந்த அனுபவம்.
    கடவுளை நம்புபவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் பிரபஞ்சத்தின் விதிகள் ஒன்றுதான்.
    நம்பாதவர்களை யாரும் வற்புறுத்த முடியாது. தவறான உதாரணங்களைக் காட்டி
    நம்பு என்று கேட்க முடியாது.

    ReplyDelete
  142. //தங்கள் கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதில் தருகிறேன். //No need Sir..It will become an endless argument.அறிவியல் பதிவுகள் எழுதுங்கள். ஆனால் இனிமேல் சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாதவாறு எழுதுங்கள் :) :) :)நிறைய படித்து விட்டு எழுதுங்கள். எங்கோ எதிலோ ஒருவரி படித்து விட்டு அதில் உங்கள் குறிப்பை ஏற்றி கடவுளை சைக்கிள் கேப்பில் உள்ளே நுழைக்காதீர்கள்.

    ReplyDelete
  143. @ வவ்வால் & சமுத்ரா

    - நான் குழம்பவில்லை. ஆன்மீகத்தை அறிவீயல் ரீதியாக அணுகுகிறேன். நான் மற்றவர்களைப் போல கடவுளை ஏதோ ஒரு மரத்தடியில் இருப்பவர். காலனியில் இருப்பவர்களுக்கு மட்டும் அருள் தருபவர் என்று கருதுவபனல்ல. இருப்பவை அனைத்தும் அந்த பிரபஞ்சப் படைப்பாளியின் கைவேலைத்திறன் (Workmanship) என்று திடமாக நம்புகிறவன். அவர் சர்வஞானி, சர்வவியாபகர், சர்வ வல்லமை கொண்டவர் என்பது என்பது மறுக்க முடியாத உண்மை. தொடர்ந்து வரும் அடுத்த பதிவுகளைத் தொடர்ந்து படியுங்கள. அவைகளில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். அறிவியலே ஆண்டவனின் அருட்கொடை என்று கருதுபவன் நான். நன்றி.

    ReplyDelete
  144. சமுத்திரா,

    துரையே ஏதோ குத்துமதிப்பா புரிஞ்சுக்கிட்டு குழம்பி இருக்கார், நீங்க மேலும் பிரபஞ்சம் ,அறிவியல்னு பேசினா தானாவே அவர் குழம்பிடுவார் அதிகமாக என்பதற்கு சொன்னது. :-))

    -------

    துரை,

    //அவைகளில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். அறிவியலே ஆண்டவனின் அருட்கொடை என்று கருதுபவன் நான். நன்றி.//

    ஹி..ஹி இந்தப்பதிவில் நான் கேட்டதுக்கே பதிலைக்காணோம், நீங்க என்னைக்கேட்கப்போறிங்களா :-))

    அறிவியல் ஆண்டவனின் அருட்கொடையா எப்போது இருந்து? சொல்லவேயில்லை அவ்வ்வ்!

    சூரிய மையக்கொள்கை சொன்னதற்காக நிக்கோலஸ் கோபர் நிக்கஸ் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்டார், அவர் பின்னர் அது பற்றி பேசவே கூடாது என்றும் அச்சுறுத்தப்பட்டார், அதையே மீண்டும் சொன்ன கியாடார்ட் புருனோ உயிருடன் கொளுத்தப்பட்டார், பின்னர் கலிலியோவும் சொன்னதற்கு மிரட்டப்பட்டு , வாழ்நாள் முழுவதும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார், இதெல்லாம் செய்தது ஆண்டவனின் அருட்த்தூதர்களான போப்புகளே, அப்போதெல்லாம் அறிவியல் ஆண்டவனின் அருட்க்கொடை என்று ஏன் தெரியவில்லை. அல்லது போப் எல்லாம் நாத்திகர்களா ஆண்டவனின் அருட்கொடை அறிவியலை புறக்கணிக்க :-))

    இப்போதும் கூட பைபிளில் உலகம் தட்டை, புவியே மையம்னு தான் இருக்கு , நீங்க நாத்திகத்தனமாக பூமி சூரியனை சுற்றி வருது சொல்லுறிங்களே :-))

    ஒன்று பைபிளில் திருத்தம் செய்யுங்க , இல்லை , அறிவியல் வைத்து ஆண்டவனைத்தேடாதிங்க :-))

    ReplyDelete
  145. @ வவ்வால்

    - பைபிளில் உலகம் தட்டையாக இருக்கிறது என்று எந்த மடையன் சொன்னான்? நிரூபிக்க தில் இருக்கா? இதிலிருந்தே உங்க அறிவு தெரியுதே.

    "என் மீட்பர் உயிரோடு இருக்கிறார். அவர் கடைசி நாளில் பூமி உருண்டையின் மீது நிற்பார் " என்றுதான் யோபு புத்தகத்தில் வருகிறது. யோபு புத்தகம் எங்க இருக்குன்னு கேட்காதீங்க தோழரே! எதையும் ஆராயாமா பேசத் துணியாதீங்க.

    ReplyDelete
  146. இந்த அறிவியல் உண்மையை 1400 வருடங்களுக்கு முன்னாலே அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறிவிட்டான்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.