Friday, February 10, 2012

சுடச் சுட காயங்கள்




பைத்தியங்கள் குணமடையும் வேளையில்
வைத்தியர்களைக் காணவில்லை
அறிக்கை சமர்ப்பித்தவர்கள்
ஆய்வுக்கு இங்கே வரவில்லை

இரசாயனங்ளில் நிகழும்
மாற்றங்கள்
மனங்களில்
நிகழவில்லை

பட்டிமன்றங்கள்
இங்கே
சூதாட்ட களங்களாயின

வலி இருக்கும்வரைதான்
அடிமைத்தனம் இருக்கும்
என்பதால்...

சூடுபட்ட காயங்கள்
ஆறுமுன்னே
சுடச் சுட
காயங்கள்

சுதந்திரப்பறவைகள்
இருட்டறைக்குள்
கூடுகள் கட்டி
பதுங்கிவிட்டன

வர்க்கவேறுபாடுகள்
களையச் சொன்ன
கருங்காகங்கள்
சொர்க்க விவாதங்களில்
சிகரெட் பொறுக்கும்
சில்லறை வேலையைச்
செய்துகொண்டிருக்கின்றன

இந்திரபுரிவாசிகளின்
இரவுப் பணிக்கு
காவலாளிகளான
சேரிப்பூக்களின்
சேலை முந்தானைகளில்
மூத்திரம் போயின
வெள்ளைக் கொக்குகள்

விடியுமா
விடியாதா என்ற
ஏக்கக்கண்களுக்கு
விடை சொல்லத்தெரியாத
காலமகள்
கடைசியில்......

வெள்ளுடை வேந்தர்களின்
அரசவையில்
நடனமாடி
சம்பாதித்துக்கொண்டிருக்கிறாள்.



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

28 comments:

  1. சுதந்திரப்பறவைகள்
    இருட்டறைக்குள்
    கூடுகள் கட்டி
    பதுங்கிவிட்டன

    வர்க்கவேறுபாடுகள்
    களையச் சொன்ன
    கருங்காகங்கள்
    சொர்க்க விவாதங்களில்
    சிகரெட் பொறுக்கும்
    சில்லறை வேலையைச்
    செய்துகொண்டிருக்கின்றன


    அருமைக் கவிதை....வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ம்...இன்றைய காலத்திற்குப் பொருத்தமான வரிகளோடு கவிதை.மனம் முழுக்க ஆதங்கம் நிறைந்து கிடப்பதாலேயே இக்கவிதை உருப்பெற்றிருக்கிறது !

    ReplyDelete
  3. சுடச் சுட காயங்கள்
    சுட்டேரிக்கின்றன வார்த்தைகள்
    சுகமான அம்புகளால்....
    வெள்ளுடை வேந்தர்களை
    நாசூக்காய் சாடும்
    நச் கவிதை.

    ReplyDelete
  4. டானியல்...என் உப்புமடச் சந்தியில் உங்களுக்காக ஒன்று காத்திருக்கிறது !
    http://santhyilnaam.blogspot.com/

    ReplyDelete
  5. //விடியுமா
    விடியாதா என்ற
    ஏக்கக்கண்களுக்கு
    விடை சொல்லத்தெரியாத
    காலமகள்
    கடைசியில்......///

    அழகிய வரிகள்

    ReplyDelete
  6. அருமையான கவிதை

    ReplyDelete
  7. நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
  8. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வெள்ளுடை வேந்தர்களின் அரசவையி்ல காலமகள் நடனமாடுகிறாள். ஆதங்கத்தில் தோய்ந்த வரிகள்! மனதைத் தொட்ட கவிதை இது! வெல்டன் துரை!

    ReplyDelete
  10. @ தனசேகரன்

    தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  11. @ ஹேமா

    தங்கள் வருகைக்கும் அருமையான பினன்னூட்டத்திற்கும் நன்றி சகோ. தங்கள் உப்புமட சந்திக்கு வந்தேன். பார்வையிட்டேன். நன்றி. நன்றி.

    ReplyDelete
  12. @ ராஜபாட்டை ராஜா

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தங்கள் தளத்துக்கு இப்போது வருகிறேன். நன்றி.

    ReplyDelete
  13. @ K.S.S. Rajh
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ ரத்னவேல்

    - நன்றி அனைவருக்கும். தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. @ கணேஷ்

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கணேஷ் சார். தொடரும் ஆதரவிற்கும் நன்றி.

    ReplyDelete
  15. கவிதை நல்லாயிருக்கு சார்.

    ReplyDelete
  16. சூடுபட்ட காயங்கள்
    ஆறுமுன்னே
    சுடச் சுட
    காயங்கள்
    அருமையான வரிகள் .

    ReplyDelete
  17. அன்போடு அழைக்கிறேன் நானும் எனது சொந்த ஊரும் தொடர் பதிவிற்கு .

    ReplyDelete
  18. @ Riyas

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  19. @ Sasikala

    - தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ. இதோ இப்போதே தொடர்பதிவிற்கு வருகிறேன்.

    ReplyDelete
  20. சமூக ஆதங்கத்தைப் பாடிவந்திருக்கும் கவிதை 

    ReplyDelete
  21. கவிதையின் தலைப்பு மட்டுமா சுடச்சுட
    கவிதையின் ஒவ்வொருவரிகளும்
    ஒவ்வொரு வார்த்தைகளும் கூட
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    சிறுமை கண்டு தொடர்ந்து பொங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. சொல்லாடல் புதுமையாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  23. @ தனிமரம்

    தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  24. @ ரமணி

    தங்கள் வருகைக்கும் அருமையான விரிவான உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  25. @ விச்சு

    தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.