Sunday, February 5, 2012

மரணமே உன்னிடம் ஒரு கேள்வி




மரணமே உன்னிடம் ஒரு கேள்வி
என்ன உன் கணக்கு?
எந்த கால்குலேட்டரில்
கணக்கு போடுகிறாய் நீ?

கூட்டலா
கழித்தலா
பெருக்கலா
வகுத்தலா
எது உன் கணக்கு?

இது எதுவுமே இல்லாத
புதுக் கணக்குதான்
உன் கணக்கு

அதனால்தான்
வாழ்வு தொடங்குமுன்னே
நீ கணக்கை முடித்துவிடுகிறாய்

கொள்ளையடிப்பவர்களின் வயது தொண்ணூறு
கோவில் கட்டுபவர்களின் வயது முப்பது

கற்பழிப்பவனின் வயது எண்பது
கற்பிப்பவனின் வயது இருபது

கொலைகாரரின் வயது எழுபது
மருத்துவரின் வயது நாற்பது

உன் கணக்கு புரியவில்லை

உன்னிடம் ஒரு வேண்டுகோள்
உயிர்ப்பூவை பறிக்குமுன்
ஒரு கணம் யோசி
அப்பூவை நம்பி
எத்தனை நந்தவனங்கள் என்று.





டிஸ்கி: பதிவர் மாயாவின் மரணத்தால் மனம் நொந்து எழுதிய கவிதை.
அவருக்கே அர்ப்பணம் இக்கவிதை.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

13 comments:

  1. அவர் ஆன்மா சாந்தியட வேண்டுகேன்றேன்

    ReplyDelete
  2. எந்த கணக்கிலும் அடங்காத ,தன்னை அடைத்துக்கொள்ளாத மரணம் என்கிற (சமயத்தில் கொடிய) மிகவும் சாமர்த்தியசாலியாக தன்னை புதுப்பித்துக்கொண்டு சென்று கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  3. காலனுக்கும் போதைப் பழக்கம் இருக்குமோ என்னவோ
    சிலசமயங்களில் என்ன செய்கிறோம் என்பதை
    அறியாமல் அவன்செய்து போவதைப் பார்க்க
    அப்படித்தான் தோன்றுகிறது
    மனம் க்வர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உயிர்ப் பூவைப் பறிக்கும் முன் யோசி- அப்பூவை நம்பி எத்தனை நந்தவனங்கள் என்று! கவிதை வரிகள் மனதை கனக்கச் செய்து விட்டன டேனியல்! காலத்தை வென்றவர் எவருளர்? நாம் அவருககு அஞ்சலி செலுத்தி ஆறுதல் கொள்வோம்!

    ReplyDelete
  5. நல்ல கவிதை அன்பருக்கு ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  6. மரணம் சுரணை அற்றது

    நண்பர் மாயா ராஜேஷிற்கு என்
    மௌன அஞ்சலிகள்..

    ReplyDelete
  7. நல்லவர்கள் இங்கிருந்து கஷ்ட படகூடாது என்று சீக்கிரம் அழைத்து கொள்கிறானோ என்னவோ?

    ஆழ்ந்த இரங்கல் நண்பருக்கு...

    ReplyDelete
  8. மாயா ராஜேஷிற்கு என்
    மௌன அஞ்சலிகள்..

    ReplyDelete
  9. மரணம் தந்த வலிகள் மனம் நொந்த வரிகளாய் இங்கே...

    கடைசிவரிகள் கசியவைத்தன. அந்த அறிமுகமற்ற நண்பருக்கு என் மானசீக அஞ்சலி.

    ReplyDelete
  10. மாயாவின் இழப்பு மனதில் உழன்றுகொண்டேயிருக்கிறது !

    ReplyDelete
  11. மிகவும் வருத்தமளிக்கும் சம்பவம் சார் ! கடைசி வரிகள் கண் கலங்க வைத்தது !

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.