அடைகாத்து அடைகாத்து
மூச்சு முட்டுகிறது
எனக்கு
வெளிவராத என் மவுனங்களிலும்
சக்கர எண்ணங்களிலும்
அழுகித்தான் போகின்றன
ஆயிரம் முட்டைகள்
பொரிக்காத என்
முட்டைகளின் கனம்
கூடிக்கொண்டேதான் போகிறது
பொரித்த முட்டைகள் மட்டும்
விற்று விடுகிறதா என்ன
போகாத சந்தையில்
ஆகாத வீதியில்
ஆளரவமற்று கிடக்கின்றன
என் முட்டைக் கடைகள்
விற்பனைக்கு என்ற
என்
விளம்பரப் பலகையில்
வெற்றுக் காக்கைகளின்
எச்சங்கள்
ஒருநாள் இல்லை ஒருநாள்
என் பெரிய முட்டைகள்
பொரிக்கப்படத்தான் போகின்றன
அன்று....
அந்த
அக்கினிக் குஞ்சுகளின்
ஆசிட் வெள்ளத்தில்
காணாமல் போகப்போகின்றன
இந்த
கறுப்பு சந்தைகள்.
.
Tweet | |||||
என்றாவது முட்டைகள் பொரிக்கும் என்ற நம்பிக்கைதான் மனிதனை பல சந்தர்பங்களில் சமாதானபடுத்துகின்றன ......... அருமையான வரிகள் கருத்தாழத்துடன்.....
ReplyDeleteபொரிக்காத பொன்முட்டைகளை
ReplyDeleteஅடைகாத்து வைத்திருங்கள்
பொரிக்கும் நேரம் வருகையில்
கொழுந்துவிட்டு எரியும் தீ நாக்குகள்..
பொய்மையிலும் புரட்டுகளிலும்
பொல்லாத தீய சக்திகளையும்
பொசுக்கிப்போடும்..
அருமையான ஆதங்கக் கவிதை நண்பரே.
இந்த முறை விடுமுறைக்கு தூத்துக்குடி
வருகையில் தங்களை சந்திக்கிறேன்.
அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
@ இடிமுழக்கம்
ReplyDelete- நன்றி.
@ மகேந்திரன்
ReplyDelete- கண்டிப்பாக இந்த முறை நாம் சந்திப்போம். உங்கள் அன்புக்கு நன்றி. ஆதரவிற்கும் மிக்க நன்றி.
@ ரத்னவேல் நடராஜன்
ReplyDelete- தங்கள் வருகைக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்.
நல்லதொரு கவிதை.வித்தியாசமான ஆதங்கம்..வாசித்தேன் வாக்கிட்டேன்.நன்றி.
ReplyDeleteஅருமையான படைப்பு
ReplyDeleteஒருதரமான படைப்புகளைத் த்ரும்
படைப்பாளியின் தார்மீகக் கோபமும்
தன் படைப்புகளின் மீதுள்ள ஆழமான
அசைக்கமுடியாத நம்பிக்கையையும்
மிக அழகாகச் சொல்லிப் போகும்
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 4
ReplyDeleteகையாலாக ஆதங்கம்போல் வரிகள் துவங்கினாலும் ஆவேசத்துடன் வெளிப்படும் ஆணித்தரமான நம்பிக்கையில் முடிவுறுவது பிரமாதம். நெஞ்சக்கனலில் புடம்போட்ட நம்பிக்கைகள் ஒருநாளும் பொய்ப்பதில்லை.பாராட்டுகள்.
ReplyDelete@ Rathnavel
ReplyDeleteNanri Ayya!
விற்பனைக்கு என்ற
ReplyDeleteஎன்
விளம்பரப் பலகையில்
வெற்றுக் காக்கைகளின்
எச்சங்கள்
ஒருநாள் இல்லை ஒருநாள்
என் பெரிய முட்டைகள்
பொரிக்கப்படத்தான் போகின்றன
அருமைப் கவிதை வாழ்த்துகள்
அந்த
ReplyDeleteஅக்கினிக் குஞ்சுகளின்
ஆசிட் வெள்ளத்தில்
காணாமல் போகப்போகின்றன
இந்த
கறுப்பு சந்தைகள்.
ஆணித்தரமான நம்பிக்கைகள் வெல்லட்டும்..
''..போகாத சந்தையில்
ReplyDeleteஆகாத வீதியில்...''
''..அக்கினிக் குஞ்சுகளின்
ஆசிட் வெள்ளத்தில்
காணாமல் போகப்போகின்றன
இந்த
கறுப்பு சந்தைகள்...''
ஓ! ரெம்ப சூடாக இருக்கிறது கோபம்! நல்ல வரிகள் .வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
கொஞ்சம் வெப்பம் கூடிய வரிகள் ..
ReplyDeleteநம்பிக்கை வெல்லட்டும் .. வாழ்த்துக்கள
@ Madhumathi
ReplyDeleteNanri.
பொரித்த முட்டைகள் மட்டும்
ReplyDeleteவிற்று விடுகிறதா என்ன
போகாத சந்தையில்
ஆகாத வீதியில்
ஆளரவமற்று கிடக்கின்றன
என் முட்டைக் கடைகள்
என்று சோர்ந்து போகாமல்
அன்று....
அந்த
அக்கினிக் குஞ்சுகளின்
ஆசிட் வெள்ளத்தில்
காணாமல் போகப்போகின்றன
இந்த
கறுப்பு சந்தைகள்.
வீரிய மிகு வரிகளை தந்த விதம் அருமை .
அப்பாடி...இவ்ளோ கோவம்.கண்டிப்பாய் வேணும் !
ReplyDeleteARUMAI !
ReplyDeleteஅழகான வரிகள்
ReplyDeleteவாழ்த்துகள்