Friday, February 17, 2012

தலையணையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

சிலருக்கு தலையணையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவதில்லை. என்ன சார் இது? இதுல தெரிஞ்சிகக என்ன இருக்குது அப்படின்னு கேட்காதீங்க. கட்டுரையைப் படித்து முடிக்கும்போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. ஓ.கே. தொடர்வோம்.

தலையணையை சரியான அளவிலும் சரியான மிருதுத்தன்மையிலும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் பல பிரச்சினைகளிலிருந்தும் தப்பலாம். நம்புகிறீர்களா?

விலங்குகள் கூட இந்த அறிவைப் பெற்றிருக்கின்றன. தெரியுமா? உதாரணமாக யானைகளை எடுத்துக்கொள்ளுங்கள். காட்டு யானைகளை நான் சொல்லுகிறேன். அவை புற்களை சேகரித்து தலையணையாக பயன்படுத்திக்கொள்கின்றனவாம். ஒட்டகச் சிவிங்கிகள் பெரும்பாலும் நின்று கொண்டேதான் தூங்கும் பழக்கம் கொண்டவை. ஆனாலும் சில நேரங்களில் படுத்தும் ஓய்வெடுக்கும். அப்போதெல்லாம் தனது இடுப்பையே தலையணையாக பயன்படுத்துமாம்.

ஒழுங்கற்ற தன்மை, போதுமான மிருதுத் தன்மை இல்லாத தலையணைகளை பயன்படுத்தினால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. நம்முடைய கழுத்தெலும்பில் குறுக்குப் பட்டைகள் போன்ற எலும்புகள் (cervical vertebrae bones) தட்டு போல காணப்படுகின்றன.




இந்த எலும்பிலான குறுந்தட்டுகள் இடையே நிறைய இடைவெளிகள் காணப்படுகின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான நரம்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை மூளைக்கும், கைகளுக்கும், தோள்களுக்கும் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் செல்லும் முக்கியமான உணர்கடத்திகளாகும்.

நீங்கள் உங்கள் கழுத்துக்கு போதுமான அளவு ஓய்வை அளித்தீர்களானால் இவை ஒரு பிரச்சினையில்லாமல் இயங்கி உங்கள் தூக்கத்தை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்குகின்றன. அதாவது மெல்லிய ஆனால் உறுத்தாத போதுமான அளவு உயரமான தலையணையைப் பயன்படுத்தும்போது.

ஆனால் சரியான தலையணையைப் பயன்படுத்தவில்லை என்றால் கழுத்துப் பகுதியிலிருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக கழுத்து வலி, தலைவலி, தோள் வலி, கழுத்து அப்படியே நின்று விடுதல் (Stiff Neck) மற்றும் கைகளில் மரத்துப்போய் வாதம் போன்ற நிலைமை ஆகிய விபரீத விளைவுகள் உண்டாகி விடுகின்றன.

ஓ.கே. அப்படியானால் எப்படி தூங்க வேண்டும் என்கிறீர்களா? சொல்கிறேன். தூங்குவதற்கு சரியான கோணம் எது? கழுத்து, தலை மற்றும் தோள் இவற்றை எந்த கோணத்தில் வைக்க வேண்டும். இதற்கு ஏதேனும் முறை உள்ளதா? நிச்சயம் உள்ளது.




நமது கழுத்துக்கு கீழே சரியாக 15 டிகிரி கோணத்தில் தலையணை இருக்க வேண்டுமாம். இதுவே மருத்துவர்கள் ஆராய்ச்சிகளின் முடிவாக நமக்கு தெரிவிக்கும் முடிவு. (உடனே போய் காம்பஸ் டப்பாவ எடுத்து அளந்துருங்க மக்காஸ்)

தலையணையின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும்?

நம்முடைய டர்க்கி டவல் இருக்கிறதே அந்த மிருதுத்தன்மையும், அதை நான்காக மடித்து வைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அந்த உயரம் போதும். சற்று உயரம் கூட இருந்தாலும் பரவாயில்லை. ரொம்ப உயரம் வேண்டாம். ரொம்ப மிருதுவான தன்மை கூடாது. காட்டன் தலையணை நல்லது.

மல்லாந்து படுத்தல் நல்லது

மல்லாந்து படுத்தலே நல்லது. பக்கவாட்டில் படுத்தல் நல்லதல்ல. காரணம் நம்முடைய இரத்த அழுத்தம் சீராக இராது. நேராக மல்லாந்து படுத்தால் இரத்த ஓட்டமும், அழுத்தமும் சீராக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.





வேலை செய்யும்போது மட்டுமல்ல. உறங்கும்போதும் அதற்கு தேவையான சக்தியை உடல் எடுத்துக்கொள்கிறது. அதனால்தான் காலையில் எழும்போது டயர்டாக இருப்பதைப் போல் உணர்கிறோம். அதுவும் மல்லாந்து படுக்கும்போது எடுப்பதைவிட ஒருக்களித்து பக்கவாட்டில் படுத்து உறங்கும்போது அதிக சக்தியை உடல் எடுத்துக்கொள்கிறது. அதனால் தலைவலி, மனஅழுத்தம், கழுத்து நின்றுவிடுதல் (சுளுக்கு), முதுகு வலி போன்ற இடையூறுகள் உண்டாகின்றன.






1 அல்லது 2 இன்ச் அளவுள்ள உயரம் மற்றும் 15 டிகிரி கோணம் இரண்டுமே தலையணைக்கு மிகச் சரியான அளவாக மருத்துவ விஞ்ஞானம் பரிந்துரைக்கிறது. சற்று அளவு வேறுபட்டால் பரவாயில்லை. மிகுந்த அளவில் வேறுபட்டால் மேற்கண்ட பாதிப்புகள் உண்டாகி நமது அன்றாட வேலைகளை பாதிக்கின்றன. ஓ.கே. வா? சரியான அளவுல தலையணை பயன்படுத்தி சுகமா தூங்குங்க.

நலமுடன் வாழ்க!



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

24 comments:

  1. ஆ... ஆ.. சுகமான தூக்கம் வருது. நல்ல உபயோகமான தகவல்.

    ReplyDelete
  2. தேவையான உடல்நலக்குறிப்பு அன்பரே..

    ReplyDelete
  3. ம்...இங்கு தலையணை விதம் விதமாக இருக்கிறது.சில விதைகளைக் கொண்டுகூட தலையணை இருக்கிறது.இடுப்பு,முதுகு வலிக்குப் பாவிப்பார்கள்.அருமையான பதிவு !

    ReplyDelete
  4. மிகவும் உபயோகமான தகவல். சில சமயம் பொருத்தமில்லாதத் தலையணைகளை உபயோகித்து அதனால் உண்டாகும் உடல்நலப் பிரச்சனைகளால் அன்றைய நாளே வீணாகும்போது, இது மிகவும் முக்கியமானப் பிரச்சனையே என்று எண்ணத் தோன்றுகிறது. மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. தலையணை வைத்துப் படுக்கும் பழக்கமே எனக்கு இல்‌லையே துரை. இது சரியா, தவறா என்றுதான் தெரியவில்லை...

    ReplyDelete
  6. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    பதிவுடன் விளக்கியிருந்தது புரிந்து கொள்ள
    மிக எளிதாயிருந்தது
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்கள்...நன்றி

    ReplyDelete
  8. நான் தலையணை யூஸ் பண்றதே இல்லை ...ஏதேனும் பிரச்சினை வருமா?

    ReplyDelete
  9. நான் எப்போதும் மல்லாந்துதான் படுப்பேன். ஒருக்களித்து படுத்தால் என்னவோ போலிருக்கும். எப்போதும் இப்படி மல்லாந்து படுக்க வேண்டியிருக்கிறதே என்றுகூட வருத்தம் இருந்தது- இந்த தகவலை படிக்கும்வரை... ரொம்ப நன்றி... உபயோகமான தகவல்.

    ReplyDelete
  10. ஒவ்வொருவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. பயனுள்ள குறிப்பு . ஆமாங்க வீட்டுக்கு யாரவது வந்தால் அவர்களுக்கு கொடுத்துட்டு தலையணை இல்லாம தூங்குவது கஷ்டமான ஒன்று . அப்போ நீங்க சொன்ன டர்க்கி உதவுவது என்னவோ உண்மைதான் .

    ReplyDelete
  13. விளக்கமான பதிவு ! கணேஷ் சாருக்கு உள்ளது போல் எனக்கும் சந்தேகம் உள்ளது ! அது இருக்கட்டும் ! படுத்தவுடன் சந்தோசமாக / நிம்மதியாக தூங்குவது எத்தனை பேர்?

    ReplyDelete
  14. மிகச்சரியாக சொல்லி இருக்கீஙக்.

    ReplyDelete
  15. @ விச்சு
    @ குணாதமிழ்

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  16. @ ஹேமா
    @ கீதமஞ்சரி
    @ ரமணி
    @ சென்னைப்பித்தன்
    @ காஜாமைதீன்
    @ ரத்னவேல் நடராஜன்
    @ சசிகலா

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. @ கணேஷ்

    - தலையணை வைதது படுகாமலே பழகியிருந்தால் ஒன்றும் செய்யாது சார். பயமில்லை. நன்றி.

    ReplyDelete
  18. @ Koodal Bala

    - வாங்க சார். தங்கள் முதல் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி. கணினிப் பிரச்சினையினால் பதில் தர தாமதமாகிவிட்டது. சாரி. தலையணை வைத்து படுக்காமல் பழகியிரந்தால் பிரச்சினை ஒன்றுமில்லை சார். பயப்படவேண்டாம். பொதுவாக வைத்து படுத்தால் நல்லது.

    ReplyDelete
  19. @ Abdul Basith

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  20. @ திண்டுக்கல் தனபாலன்
    @ Jaleela Kamal

    - நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  21. நல்ல உபயோகமான தகவல்.

    ReplyDelete
  22. நீங்கள் குறிப்பட்டபடியே தான் எனது தலையணை நிலை. நன்று. நல்ல பதிவு சகோதரா. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.