Wednesday, February 15, 2012

எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்




அன்பு சகோதரி ஹேமா அவர்கள் எனக்கு ஒரு விருது வழங்கியிருக்கிறார். அவரது அன்புக்கு மிக்க நன்றி. எனக்கு பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லி இதை பகிர வேண்டுமாம்.

பிடித்த 7 விஷயங்கள்:

1.தனிமை

(இதுதான் எனக்கு தரிசனங்களைத் தோற்றுவிக்கிறது)

2.கவிதை
(எத்தனையோ பதிவுகளை எழுதினாலும் கவிதை எழுதும்போதுதான்
எனக்கு இறக்கை முளைக்கிறது. ஒரு நல்ல கவிதை தந்தால்
என்னையே விற்றுவிடுவேன். அவ்வளவு பிரியம் இந்தக் கவிதையின் மீது. கவிதை என் சுவாசம். கவிதை என் காதலி.மற்றவையெல்லாம் சும்மா....)

3.இயற்கை:

எனக்கு துன்பம் வரும்போதெல்லாம் என்னைத் தேற்றுவது ரோஜாக்களும், சூரியகாந்திகளும்தான். நந்தவனங்களில்தான் என் கவிதைத் தேர் நிலைகொண்டிருக்கிறது.)

4.குழந்தைகள்:

(இந்த பூக்களிடம்தான் என் பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன)

5. வானம்

( இதன் வர்ணங்களில்தான் நான் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து என் கவிதைச்சுவர்களுக்கு பூசிக் கொள்கிறேன்)

6. மழை

( நனையாமல் விடுவதில்லை. அப்போதெல்லாம் என் நெஞ்சப்பஞ்சை நனைத்து நனைத்து வைத்துக்கொண்டு, என் வெயில் காலங்களில் உபயோகப்படுத்துகிறேன்)

7. பிச்சைக்காரர்கள்

(வாழ்க்கையின் தத்துவங்களை இவர்களிடம்தான் கற்று வருகிறேன்.)

- இந்த விருதை கீழ்காணும் என் அன்பு சகாக்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.அவர்கள் வாய்ப்பும் வசதியும் இருந்தால் அடுத்தவர்களுக்கு பகிர்ந்து மகிழட்டும்.

1. சகோ. ரியாஸ் - http://riyasdreams.blogspot.in
2. தனசேகரன் - http://sekar-thamil.blogspot.in
2. என் ராஜபாட்டை ராஜா - http://rajamelaiyur.blogspot.in/

நன்றி சகோ. ஹேமாவுக்கும் இதையெல்லாம் சகித்துக்கொள்ளும் உங்கள் பொறுமைக்கும்.


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

13 comments:

  1. உங்கள் திறமைக்கு இன்னும் இன்னும் விருதுகள் நிறையும் பாருங்களேன்.வாழ்த்துகள் உங்களுக்கும் உங்களிடம் வாங்கும் இளைஞர்களுக்கும் !

    ReplyDelete
  2. விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. விருதுக்கு ரொம்ப நன்றிங்க....

    ReplyDelete
  4. உங்களை கவர்ந்த விடயங்களில் அநேகமானவை என்னையும் கவர்ந்தவை..

    ReplyDelete
  5. கவித்துவமான ரசனைகள். விருது பெற்றதற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  6. தங்களால் எப்படி மிக அருமையான
    கவிதைகளைத் தர முடிகிறது என
    தங்கள் விருப்பமான விஷயங்களைப் படிக்கப் புரிகிறது
    நீங்கள் கவிஞராக இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியப் படவேண்டும்
    தங்கள்விருதுக்கும் தஙக்ளிடமிருந்து விருதினைப் பெறுபவர்களுக்கும்
    மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள். தங்கள் கவிதைக்காதல்
    உள்ளம் உவகை கொள்ள வைக்கிறது.

    ReplyDelete
  8. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் உங்களிடம் பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. விருதை பெறுபவர்களுக்கும் அதை முதலில் வாங்கிய உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. நல்ல ரசனை உங்களுக்கு துரை. மேலும் பல விருதுகள் குவித்து வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. விருதுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. விருது பெற்றதற்கும் அதை பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  13. @ ஹேமா
    @ கும்மாச்சி
    @ ரியாஸ்
    @ கீதமஞ்சரி
    @ ரமணி
    @ ஸ்ரவாணி
    @ தனிமரம்
    @ மதுமதி
    @ கணேஷ்
    @ சமுத்ரா
    @ வெங்ட்ராஜ்

    - வந்த பாராட்டி வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ். நன்றி!

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.