Monday, February 6, 2012

யார் ஏமாற்றுவது? நாமா? அவர்களா?




வெறும் பிதற்றல்களும்
வெட்டி பேச்சுகளுமாய்...
நகர்கிறது
இந்த வாழ்க்கை

பொய்களை விற்றுத்தான்
நிஜங்களை
வாங்க வேண்டியிருக்கிறது

இமைகளை பிடுங்கியபின்
தரிசனங்களின் உதயம்
நகங்களைப் பிடுங்கியபின்
நகப்பூச்சுகளின் நளினம்

யாருக்கும் யார்மீதும் கோபமில்லை
என்றாலும்
எல்லாருக்கும் எல்லார்மீதும் கோபம்

வெள்ளை மனசுக்கார
பட்டங்களுக்குப் பின்னால்
கறுப்பு இதயங்கள்

சுகமா என்கிற
நலம் விசாரிப்புகளுக்குப் பின்னால்
நச்சுப்பாம்பின் விஷப்பற்கள்

சுத்தம் சோறுபோடும் என்ற
போதனைக்குப் பின்னால்
அழுக்குக் கரங்களால்
அர்ச்சனைகள்

யார் ஏமாற்றுவது
நாமா?
அவர்களா?

யாருமில்லை
ஏமாற்றங்களே
ஏமாற்றங்களை
ஏமாற்றிக்கொள்கிறது

இந்த
கோமாளி நாடகத்தில்
கூத்தாடித்தான் ஆகவேண்டும்

நடிக்க மறுத்துவிட்டால்
நாடகங்கள் முடிவதில்லை...
நாமே மடிந்துவிடுகிறோம்.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

3 comments:

  1. யாருக்கும் யார்மீதும் கோபமில்லை
    என்றாலும்
    எல்லாருக்கும் எல்லார்மீதும் கோபம்

    வெள்ளை மனசுக்கார
    பட்டங்களுக்குப் பின்னால்
    கறுப்பு இதயங்கள்

    அருமையான வாழ்க்கையின் எதர்த்த வரிகள்
    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  2. அனுபவ வரிகள்.மனதைக்கவர்ந்தது.

    ReplyDelete
  3. நடிக்க மறுத்துவிட்டால்
    நாடகங்கள் முடிவதில்லை...
    நாமே மடிந்துவிடுகிறோம்.
    உண்மையான வரிகள் நம்மை நகர்த்துகிறது வாழ்க்கை,
    அருமையான பகிர்வு .

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.