Saturday, February 25, 2012

பின்னோக்கி நடத்தல் மற்றும் ஓடுதல் (Backward Walking and Running) - சில உண்மைகள்




நாம் சாதாரணமாக எப்படி வாக்கிங் அல்லது ரன்னிங் போகிறோம்?
முன்னோக்கி நடக்கிறோம். முன்னோக்கி ஓடுகிறோம். ஆனால் பின்னோக்கி நடத்தல் அல்லது பின்னோக்கி ஓடுதல் (Backward Walking and Running) என்பது முன்னோக்கி நடத்தல் அல்லது ஓடுதலைவிட மிகவும் சிறந்த பலனைத் தருகிறது. அதாவது நம்முடைய கலோரியை அதிகமாக எரிக்கிறது. நம்முடைய கேட்கும் திறனும், பார்வைத்திறனும் அதிகரிக்கிறது. அத்தோடு நம்முடைய உணர்வுகளை கூர்மையாக்குகிறது. எப்படியெனில் பின் நோக்கி நடக்கும்போது ஏதாவது பொருளின் மேல் அல்லது ஆட்களின் மேல் இடித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக நாம் இருப்பதால் நாளடைவில் நம்முடைய உணர்வுத்திறனும் அதிகரிக்கிறது.

நம்முடைய முன்னோர்களாலும் பின்பற்றப்பட்ட அற்புதமான உடற்பயிற்சிதான் இந்த பின்னோக்கி நடத்தல் அல்லது ஓடுதல். இது நம்முடைய மன மற்றும் உடல் உறுதிக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. மேலைநாடுகளில் குறிப்பாக ஜப்பானில் இது ஒரு இயக்கம் போலவே பின்பற்றப்படுகிறது. இப்படி கடந்த 40 வருடங்களாக செய்பவர்கள் மற்றவர்களை ஆரோக்கியமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.




இந்த பின்னோக்கி நடத்தல் நம்முடைய இதயம், நுரையீரல், தசைகள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது. மேலும் நம்முடைய இடுப்பு, கால்கள் ஆகியவற்றையும் பலப்படுத்துகிறது. நம்முடைய வயிறுக்கும் முதுகுக்கும் சரியாக வேலை கொடுப்பதால் இரண்டுமே வலுப்பெறுகிறது.
சுருக்கமாகக் கூறுவதென்றால் நாம் பின்னோக்கி நடத்தலில் நடக்கும் ஒவ்வொரு 100 அடி நடைகளும் முன்னோக்கி நடக்கும் 1000 அடி நடைகளுக்குச் சமமானது.

சிலரைக் கேட்டால வாக்கிங்கோ ஜாக்கிங்கோ போக நேரம் இல்லை என்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்படி பின்னோக்கி நடந்தால் அல்லது ஓடினால் நேரம் மிச்சமாகும். அதாவது 100 ஸடெப் நடந்தாலே 1000 ஸ்டெப் நடந்ததற்கு சமமாகும். மேலும் அதை விட பலனும் அதிகமாகும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இப்படி பின்னோக்கி நடத்தலின் போது நம் கால்கள் வளையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நேராக இருந்தால்தான் முழுப்பலனும் கிடைக்கும்.

நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நம்முடைய வீடு அல்லது அலுவலகம் ஆகியவற்றின் மாடியே போதும். 100 அடி நடந்தால் போதுமானது. மிகுந்த பலன் கிடைக்கும் என்பது உறுதி. பின்னால் கவனமாக பார்த்து நடக்கவேண்டும் என்பதுதான் இதற்கான ஒரே நிபந்தனை. மற்றபடி பலனோ வானளவு.

பின்னோக்கி நடந்து அல்லது ஓடி மிகுந்த பலனைப் பெற்று வாழுங்கள் !

நலமுடன் வாழ்க !





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

16 comments:

  1. நடக்கவே ஒசிப்பவங்க நிறைய பேர் இருக்காங்க . இதுல ஓட சொல்றிங்க . அதுவும் பின்னாடி ..
    அருமையான பகிர்வுங்க .

    ReplyDelete
  2. உடல் நலம் பற்றிய பதிவு!
    முயன்று பார்க்கக் கூடயிலாது நம்மால்.

    சா இராமாநுசம்

    ReplyDelete
  3. அருமையான ஆரோக்கியமான பகிர்வு
    நன்றி சகோ

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு நண்பரே...

    பின்னோக்கி நடக்கும் ஒரு இந்திய நபர் பற்றி நான் எழுதி இருக்கிறேன்... அவர் பெயர் பூரண் சந்த்....

    http://www.venkatnagaraj.blogspot.in/2011/09/blog-post_29.html

    முடிந்தால் படித்துப் பாருங்கள்...

    ReplyDelete
  5. நல்ல அய்டியா! மாடியில் நடந்தால் பலன் என்றால் இன்னும் சௌகர்யமே. உடனே அமூல் படுத்த வேண்டியது தான்.

    நன்றி.

    ReplyDelete
  6. நல்ல தகவல் நன்றி நண்பா

    ReplyDelete
  7. மிக நல்ல தகவல் பகிர்ந்து உள்ளீர்கள் .
    மிக்க நன்றி .
    முயன்று பார்த்தேன் . நடக்க வருகிறது .
    சற்று எச்சரிக்கையாக தினமும் தவறாமல் செய்ய
    நினைத்திருக்கிறேன் . பார்க்கலாம்.

    ReplyDelete
  8. நல்லதுதான்.நம்ம ஊரில் தனியாக இப்படிச் செய்தால் நம்மைப் பைத்தியம் என்று சொன்னாலும் சொல்லி விடுவார்கள்.

    ReplyDelete
  9. புதிய தகவல்
    நாளை முதல் முன் பக்கம் நடப்பதை
    பின் பக்கமாக ஒரு வாரம் நடந்து பார்க்க நினைத்துள்ளேன்
    பயனூள்ள பதிவு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நல்லதொரு தகவல்,.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. ஓ....புதிய செய்தி.முன்னுக்கு ஓடவே நேரமில்லன்னு இருக்கு.இப்ப பின்னுக்கு !

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.