பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland) எங்கு அமைந்துள்ளது? அது என்ன வேலை செய்கிறது?
பிட்யூட்டரி சுரப்பியானது நம்முடைய மூளையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது. மேலே உள்ள படத்தைப் பாருங்கள். தெளிவாகப் புரியும். ஹைப்போதாலமஸ் (hypothalamus) என்ற பகுதியுடன் இணைந்து அமைந்துள்ளது. ஆண்டிடியூரெடிக் (antidiuretic hormone), ஆக்சிடாசின், (oxytocin), புரோலாக்டின் (prolactin) போன்ற முக்கியமான சில ஹார்மோன்களை இது சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் நம்முடைய உடல் வளர்ச்சி, இரத்த அழுத்தம், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. வளரத்தூண்டுகிறது.
ஜப்பானிலுள்ள ஒசாகா பல்கலைக்கழம் வெளியிட்டுள்ள ஒரு ஆராய்ச்சி முடிவில் இவ்வாறு தெரிவிக்கிறது. கடினமான வேலைப்பளுவின் போதும், மிகுந்த மனஅழுத்தம் தோன்றும் போதும், அளவுக்கு மீறிய டென்சன் போன்ற சூழ்நிலைகளிலும் நம்முடைய பிட்யூட்டரி சுரப்பியானது மிகவும் சுருங்கி ஒரு ஸ்பான்ஞ் கேக்கைப் போல ஆகி விடுகிறதாம். சாதாரண நிலையிலிருந்த ஒரு சுரப்பி நம்முடைய டென்சனால் இப்படி பஞ்சுக் கேக்கைப் போல சுருங்கி விட்டால் விளைவுகள் எவ்வளவு விபரீதமாக இருக்கும்? எண்ணிப் பாருங்கள்!
பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்படும்போது நம்முடைய உள்ளுறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்படுகிறது. தற்கொலைகள் நிகழ்வது இதனால்தான். எப்படி தெரியுமா? அதிகப்படியான டென்சன் அல்லது மனஅழுத்தம் நம்முடைய பிட்யூட்டரி சுரப்பியை பாதித்துவிடுகிறது. அதன் பிறகு அது நம்முடைய மூளை செல்களையும் பாதிக்கிறது. உடனே மூளை தவறான சிக்னல்களை நமது எல்லா உள்ளுறுப்புகளுக்கு அனுப்பத் தொடங்கி விடுகிறது.
தவறான சிக்னல்களினால் உள்ளுறுப்புகள் தமது வழக்கமான இயக்கத்திற்கு மாறாக இயங்கத் தொடங்குகின்றன. இவ்வித தவறான சிக்னல்கள் மூளைக்குத் திரும்ப வரத்துவங்கி விடுகின்றன. இப்போது மூளை தாறுமாறாக இயங்கி திடீரென இயக்கத்தை நிறுத்திவிடலாம். அல்லது தற்கொலைக்கு நம்மைத் தூண்டலாம். இப்படித்தான் திடீர் மரணங்களும், தற்கொலைகளும் நிகழ்கின்றன என்று அந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
இப்படித்தான் மிகக் கடினமான வேலைகளும், அளவுக்கு மீறிய கவலைகளும் நமக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கி பிட்யூட்டரி சுரப்பியைப் பாதித்து தொடர்ந்து நம்முடைய மூளையையும் பாதித்துவிடுகிறது.
கவலைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று நம்முடைய முன்னோர்கள் எழுதி வைத்த பழமொழியின் அர்த்தம் இப்போது புரிகிறதா?
சரி இதிலிருந்து விடுபடுவது எப்படி?
நம்முடைய உடல் நலத்தைக் காத்துக்கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. டயட், உடற்பயிற்சி, சுற்றுப்புறச் சூழ்நிலையை சுத்தமாக வைத்தல் என்று எவ்வளவோ வழிகள் உள்ளன.
எல்லாவற்றையும் விட முக்கியமாக மனஅழுத்தம் வராதவாறு உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.
பிரார்த்தனை, நல்ல புத்தகங்களை வாசித்தல், நல்ல மனிதர்கள், நண்பர்களுடன் உரையாடுதல், மகிழ்ச்சியாக, நகைச்சுவையாக பேசுதல் போன்ற செயல்களைச் செய்து பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இவைதான் மனஅழுத்தத்திலிருந்து விடுபட வழிகள். நோய்களிலிருந்தும் விடுதலைபெறவும் இவைதான் வழிகள். சரி. வரட்டுங்களா?......
நலமுடன் வாழ்க!
.
Tweet | |||||
நலமுடன் வாழ நல்ல கருத்துக்களை வழங்கியிருக்கிறீர்கள் துரை. மன அழுத்தம் அண்டாமல் இருக்க நான் செய்யும் செயல்... புத்தகங்கள் படிப்பதுதான்! கவலைகள் எல்லாம் பறந்துவிடும் எனக்கு! மற்றவர்களும் ஏதாவது ஒரு வழியைக் கடைப்பிடித்து நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். அக்கறையான பதிவுக்கு நன்றி துரை!
ReplyDeleteதமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்
ReplyDeleteமன அழுத்தம் உண்டாவதால் மூளை பாதிப்படைவதையும் அதனால் உண்டாகும் சிக்கல்களையும் அவற்றை நீக்கும் வழிமுறைகளையும் மிகவும் தெளிவாகவும் படங்களுடனும் விளக்கியவிதம் அருமை. மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.
ReplyDeleteஉளநலம் தேடும் பதிவு நன்று நண்பரே.
ReplyDeleteநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு