சிலர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பார்த்து பலர் சொல்வது எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கக் கூடாது. பைத்தியம் என்று நினைப்பார்கள் என்று. ஆனால் உண்மை என்ன தெரியுமா? பார்ப்போம்.
இன்று நிறைய விஞ்ஞானிகளும், பல்கலைக்கழங்களும் சிரிப்பைக் குறித்தும் அதுவும் பலத்த சிரிப்பைக் குறித்தும் நிறைய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளின் சுருக்கம் சிரிப்பானது அழுகை, கோபம் இவற்றை விட நம் உடலுக்கு நன்மை விளைவிப்பதாகும் என்பதே ஆகும்.
நீரிழிவு நோயாளிகள் நன்றாக அடிக்கடி சிரிக்கும் வழக்கமுடையவர்களானால் சீக்கிரம் குணமடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. கேன்சர் நோயாளிகளும் விரைவில் குணமடைகிறார்கள். ஞாபகசக்தி குறைவுள்ளவர்களுக்கு சிரிப்பு வைத்தியம் அளித்ததில் அவர்களுக்கு நன்றாக நினைவுத்திறன் திரும்பியதாம். சிரிப்பு நம்முடைய மூளையையும் இளமையாக வைக்கிறதாம். நோய்களை குணமாக்குவதில் சிரிப்புக்கு உள்ள முக்கியத்துவம் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.
ஜப்பானில் ஒரு விஞ்ஞானிகள் குழுவொன்று ஒரு ஆராய்ச்சி செய்தது. எப்படியென்றால் வயதான சில நபர்களை ஒரு நகைச்சுவை நாடகம் ஒன்றிற்கு அனுப்பிவைத்து ரசிக்க வைத்தது. அனுப்பும் முன்பாகவும், நாடகம் முடிந்தபிறகும் அவர்களது இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன.
பரிசோதனையின் முடிவு விஞ்ஞானிகளை ஆச்சர்யப்பட வைத்தது. அதாவது நாடகம் முடிந்த பிறகு அவர்களது இரத்தத்தில் ஆச்சர்யப்படத் தக்க விதத்தில் ஒரு இரசாயன மாற்றம் ஏற்பட்டிருந்தது. இரத்தத்தில் உள்ள கூட்டுப்பொருள் ஒவ்வொன்றும் ஆச்சர்யப்படத்தக்கவிதத்தில் ஆரோக்கியமாக மாறியிருந்தன. அதாவது குறுகிய நேரத்தில அவர்களது இரத்த அணுக்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மாறியிருந்தன. நகைச்சுவை உணர்வானது மனதை மட்டுமல்ல உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பது மருத்துவ விஞ்ஞானம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
உணர்ச்சிகள் நம்முடைய இரத்தத்தில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துபவை. நன்றாக சிரிக்கும்போது இரத்தத்தில் உள்ள எண்டோதிலியம் (Endothelium) என்ற இரத்த திசுக்கள் நன்றாக விரிவடைகின்றன. ஆகையால் இரத்த ஓட்டம் நன்றாக நடைபெறுகிறது. அதே நேரம் மன அழுத்தத்தின் போது இவை நன்றாக சுருங்குகின்றன. இரத்த ஓட்டமும் தடைபடுகிறது என்று அந்த ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கின்றன. நம்முடைய இதய தசைகளும் நன்றாக சிரிக்கும்போது நன்றாக இயங்குவதாகவும், மன அழுத்தத்தின் போது சரியாக செயலாற்ற இயலா நிலையில் இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு நிமிடங்களாவது சிரிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
நன்றாக நகைச்சுவை உணர்வுள்ள, நன்றாக சிரிக்கும் தன்மையுள்ள குடும்பங்களில் நோய்கள் விரைவில் குணமடைகின்றன என்று மேலும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மூச்சுக்குழலும் சீராக இயங்குகிறதாம்.
முடிவாக, நன்றாக சிரியுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். ஏனென்றால் சிரிப்பு உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கிறது என்று சொல்வதை விட வாழும்வரை நோயின்றி வாழலாம் என்ற உறுதியைக் கொடுக்கிறது.
வாழ்க நலமுடன் !
.
Tweet | |||||
சிரித்து வாழ்வோம்...சீரான உடல்நிலையோடு இருப்போம்...நன்றி
ReplyDeleteசிரிப்பு... இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு. அதனால்தான் நான் எந்தக் கவலை வந்தாலும் சிரித்தே சமாளித்து வருகிறேன். பிளட் பிரஷர் வராமல் தடுக்கும் நல்மருந்தாயிற்றே... அருமை துரை.
ReplyDeleteகாசா பணமா
ReplyDeleteசிரிக்க மனம்தான் வேண்டும்
சிரித்து மகிழ்வோம்
ஆரோக்கியமும் இலவசமாய்ப் பெறுவோம்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சிரிப்போம் சிந்திப்போம் அருமையான பதிவு .
ReplyDeleteசிரித்து வாழ வேண்டும் ! சிறப்பான பதிவு !
ReplyDeleteசிரிக்கத் தெரிந்தவன் மனிதன். அது தெரியாமல்தான் நிறைய பேர் தடுமாறுகிறார்கள்.
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள் அன்பரே.
ReplyDelete