உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது? உங்கள் மூளை எப்படி இருக்கிறது? இவற்றைக் கண்டறிய பெரிய மருத்துமனைக்கெல்லாம் போகவேண்டாம். ஒரு சின்ன பரிசோதனை எந்த செலவுமில்லாமல் நாமே செய்து பார்த்துவிடலாம். ரெடிதானே?
மேலே உள்ள படத்தில் காட்டியது போல் இரண்டு கைகளையும் நேராக நீட்டிக்கொண்டு, ஒரு காலை உள்பக்கமாக சற்று மடித்துவைத்துக்கொண்டு எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஒற்றைக் காலில் நின்று கொள்ளுங்கள். உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். இந்த நிலையில் 10 விநாடிகள் தொடர்ந்து உங்களால் நிற்க முடிந்தாலே போதும். உங்கள் உடலும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். திருப்திதானே?
உங்களால் 5 விநாடிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லையென்றால் உடல் நிலையும் மனோநிலையும் சரியில்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் இனி மிகவும் கவனமாக உடல் நிலையையும் மனநிலையையும் பேணவேண்டும். கவனம்.
கீழே உள்ள போட்டோவில் உள்ளது போல் உங்களது குழந்தைகள் அல்லது எந்தக் குழந்தைகளுடனாவது காலை அல்லது கையைத் தூக்கி விளையாடுங்கள். அது மிகவும் நல்லது.
மேலும் கீழே காட்டப்பட்டுள்ள மூளையின் படத்தைப் பாருங்கள்.
சிவப்பு குறியிடப்பட்டுள்ள மூளையின் பகுதிகள்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதற்கான அறிகுறியாகும். இது ஒரு சி.டி. ஸ்கேன் படமாகும். இந்த குறிப்பிட்ட பகுதிகள் ஆரோக்கியமாக இல்லை என்றால்தான் மேலே சொன்ன சிறிய பயிற்சியினை (அதாவது ஒற்றைக் காலில் நிற்பது ) 5 விநாடிகளுக்கு மேல் செய்ய இயலாமல் போகும்.
அப்படிப்பட்டவர்கள் மற்றும் எல்லோருமே கீழ்க்கண்ட படங்களில் கண்டபடி எளிய உடற்பயிற்சிகளை தினமும் ஒரு அரைமணி நேரம் செய்துவந்தாலே போதும். பாதிப்புகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமடையலாம்.
நலமுடன் வாழ்க !.
.
Tweet | |||||
தகவலுக்கு நன்றி சார்....
ReplyDeleteஐந்து நிமிடம் கூட தாமதிக்காமல் உடன் செய்து பார்த்தேன்
ReplyDeleteநிற்க முடிந்தது.கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கொண்டேன்
பயனுள்ள ப்திவு பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 2
ReplyDeleteநின்று பார்க்கவேணும்.நல்ல அறிவுரைகள் !
ReplyDeleteநல்லது...
ReplyDeleteநன்றி தலைவரே...
அருமையான யோசனை. நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு மிக்க நன்றி
ReplyDeleteசிறப்பான பதிவு ! நன்று ! நன்றி !
ReplyDeleteஉடன் செய்து பார்த்தேன்...
ReplyDeleteஅய்யோ ரொம்ப சிம்பிள். இப்பவே நின்னு பார்த்துடுரேன்.
ReplyDeleteஎளிமையான வழி முறைதான் செய்து பார்கிறேன் . நன்றிங்க
ReplyDeleteநின்னாச்சு .. நின்னாச்சு ... நானும்கூட நின்னாச்சு!
ReplyDeleteVery useful article. You are doing a good job sir. Pl continue
ReplyDeleteநின்று பார்க்கும் நேரம் குறைவாகத்தான் இருக்கு பொருளாதார தேடலில் தகவல் பகிர்வுக்கு நன்றி.படங்கள் அருமை.
ReplyDeleteநல்ல தகவல் நன்றி
ReplyDeleteMerkondu nirka muudiayathvargalukku arokiyamaga mara yosanigalaiyum Valangalam!
ReplyDeleteippothu kurpitulla yosanigal tavira
ReplyDelete