அவரவர் கடைப்பிடித்து வரும் ஒழுக்கம், பழக்கம், உணவு, உடை, வாழ்க்கையின் சூழ்நிலை இவைதான் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதற்கும், நோயின்றி வாழ்வதற்கும் முக்கிய காரணங்களாக அமைகின்றன.
தம் வருவாய்க்கு தக்கவாறு எளிய உணவை உண்டு ஆடம்பரமில்லாத வாழ்வைக் கடைப்பிடித்து மன அமைதியோடு வாழ வழி தெரிந்தால் எவ்வித நோயுமில்லாது என்றும் இளமையோடு வாழலாம். அதைத் தெரிந்து கடைப்பிடிக்க உள்ளுக்குள் அடங்காத ஆவல் ஏற்பட வேண்டும்.
மலச்சிக்கல், மனச்சிக்கல் இவை இரண்டும் மிக நெருங்கிய நண்பர்கள். ஏன் உடன்பிறந்த சகோதரர்கள் என்று கூடச் சொல்லிவிடலாம். மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனே மனவேதனையுமம் உண்டாகி விடும். நோய்கள் பலவற்றிற்கும் அடிப்படைக் காரணம் மலச்சிக்கலேயாகும். அதனால் மலச்சிக்கலை ஒழித்துவிட்டால் மனவேதனை ஏற்படாதல்லவா?!
மலம் கழிக்க வேண்டிய உணர்ச்சி ஏற்பட்ட உடன் தாமதம் செய்யாமல் அதனைச் செய்ய வேண்டும். தள்ளிப் போடுதல் கூடவே கூடாது. அப்படித் தள்ளிப்போடுவதுதான் மலச்சிக்கல் உண்டாக முக்கிய காரணம். அதே போல அவசரப்படாமல் நிதானமாகவே மலம் கழிக்க வேண்டும்.
மலச்சிக்கலைத் தவிர்க்க இரவு படுக்கப் போகுமுன் இரண்டொரு வாழைப்பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டால்தான் மலம் போகும் என்கிற அளவுக்கு பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. படுக்கைக்குப் போகும் போது ஒரு டம்ளர் வெந்நீர் சாப்பிடுவது நலம். காய்ச்சி ஆறிய நீராகவோ அல்லது சுத்தமான பில்டர் வாட்டராகவோ இருந்தால் மிகவும் நல்லது.
பொதுவாக நாள்தோறும் தண்ணீர் நன்றாக பருகி வந்தாலே மலச்சிக்கல் வராது. அவ்வண்ணமே நிரம்ப நீர் குடிப்பதால் சிறுநீரும் மலமும் தாராளமாகக் கழிக்க முடியும். அதனால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அடுத்து, நாள்தோறும் நாம் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு கீரையைப் பயன்படுத்தி வரவேண்டும். தினம் என்றில்லாவிட்டாலும் ஒருநாள் விட்டு ஒரு நாள் கீரை சாப்பிட்டு வந்தால் கூடப் போதும்.
சமையலில் மிளகையும், எலுமிச்சம் பழ ரசத்தையும் தாராளமாக பயன்படுத்திக் கொண்டு, புளியையும் மிளகாயையும் தவிர்த்து விடலாம். அப்படி சாத்தியமில்லாவிட்டால் கூடுமானவரை மிளகாயையும் புளியையும் குறைத்து விடுதல் நல்லது. அடிக்கடி இல்லாமல் அவ்வப்போது மிளகையும் எலுமிச்சைச் சாறையும் பயன்படுத்தி வருதல் வேண்டும்.
தக்காளிப்பழம், வெங்காயம் இவைகளை உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உள்ளிப் பூண்டையும் சேர்த்துக் கொள்வது நல்லதுதான். ஆனால் அதன் வாசனை அநேகருக்குப் பிடிப்பதில்லை. இருந்தும் எந்த வகையிலேனும் அது உள்ளுக்குப் போனால்தான் உடம்புக்கு நல்லது.
மன நிம்மதியுடன் உணவை நன்றாகச் சவைத்து சுவைத்து சாப்பிட வேண்டும். வாயில் போட்டுக்கொண்டு லபக்கென்று விழுங்கி விடுதல் கூடாது. மென்று அவசரப்படாமல் விழுங்க வேண்டும்.
உணவுக்கிடையே அவ்வப்போது தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. பாதியளவிற்கு மேல் உணவு உண்டபின் தண்ணீர் குடிக்கலாம். அதையும் தவிர்ப்பது நல்லது. உணவு உண்டு முடித்தபின் நீர் பருகினால் நல்லது. நீரும் போக காற்றுக்கும் வயிற்றில் இடம் எஞ்சியிருந்தால் நல்லது.
ஒவ்வொருவதும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதுவும் வெந்நீராகவோ அல்லது காய்ச்சி வடிகட்டிய நீராகவோ இருப்பது மிகவும் நல்லது.
அடிக்கடி காபி, டீ குடிப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் பருகுதலே சிறந்தது. அதனால் உடலில் இருக்கும் நோயும் போகும். இனி நோய் வராமலும் இருக்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை, செரியாமை இவற்றிற்கெல்லாம் தண்ணீர் பற்றாக்குறையே முக்கிய காரணமாகும் என்பதைப் புரிந்துகொண்டால் அனைவருக்கும் நல்லது.
தூங்குவதற்கு முன்பும் தூங்கி எழுந்த பின்னும் தண்ணீர் குடிக்கவேண்டும். காலையில் எழுந்ததுமே வாய் கொப்பளித்து முகம் கழுவிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நாள் முழுவதும் மலச்சிக்கலும் அதன் காரணமாக ஏற்படும் கை கால் அசதி, முழங்கால மூட்டுகளில் வலி முதலியவையும் அணுகவே அணுகாது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றுக்கும் கவலைப்படாமல் அமைதியுடன் வாழப் பழகுங்கள். மேன்மை உண்டாகும்.
நலமுடன் வாழ்க!
.
Tweet | |||||
நல்ல தகவல், பகிர்விற்கு நன்றி துரை.
ReplyDeleteகடைபிடிக்க நல்ல பழக்கவழக்கங்களை பதிவிட்டமைக்கு நன்றி..கடைபிடிக்கிறேன்.
ReplyDeleteஅவசரம் அவசரம் என அலையும் மக்களுக்கு மிகவும் தேவையான குறிப்பு பகிர்ந்தமைக்கு நன்றி .
ReplyDeleteஎல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றுக்கும் கவலைப்படாமல் அமைதியுடன் வாழப் பழகுங்கள். மேன்மை உண்டாகும்.
ReplyDeleteநலமுடன் வாழ்க!
இனிமையாய் நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
நன்றாக உணவைச் சவைத்து உண்ணுதல், நிறையத் தண்ணீர் குடித்தல் ஆகியவற்றை நான் தவறாமல் செய்து வருகிறேன். மற்ற விஷயங்களும் நன்று! நல்லதொரு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் துரை!
ReplyDeleteநல்ல பழக்க வழக்கங்களை
ReplyDeleteஅருமையா சொல்லியிருகீங்க நண்பரே...
எல்லோருக்கும் அவசியமான பகிர்வு...
ReplyDeleteஅவசரக்தியில் ஓடிக்கொண்டிருக்கும் அனைவரும்
ReplyDeleteஅறிந்து கொள்ளாவேண்டிய அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொட்ர வாழ்த்துக்கள்
Tha.ma 7
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
தமிழ்மண முதல்வருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்....
ReplyDeleteதமிழ் மணத்தில் இவ்வாரம் முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்
ReplyDeleteதமிழர் உணவில் புளியையும் காரத்தையும் குறைக்கச் சொன்னல் எப்பிடி?உண்மையில் அருமையான பதிவு !
ReplyDeleteவிளக்கமான பதிவு சார் ! வாழ்த்துக்கள் !
ReplyDelete@ கும்மாச்சி
ReplyDelete@ மதுமதி
@ சசிகலா
- நன்றிகள் பல.
@ இராஜராஜேஸ்வரி
ReplyDelete- வாங்க சகோ. தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
@ கணேஷ்
ReplyDelete@ தமிழ்வாசி பிரகாஷ்
@ மகேந்திரன்
@ ரமணி
@ ரத்னவேல் நடராஜன்
- நன்றி தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைகளுக்கும்.
@ சென்னைப்பித்தன்
ReplyDelete- நன்றி சார். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. எல்லாம் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களின் ஆசிர்வாதங்கள்தான்.
@ Jaleel Kamal
ReplyDelete- தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி.
@ NkS ஹாஜாமைதீன்
ReplyDelete- தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி.
@ மோகன்குமார்
ReplyDelete- தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார். எல்லாம் உங்ககளைப் போல அன்பு மனிதர்களின் ஆதரவினால்தான சார்.
@ ஹேமா
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
- நன்றி சகோதரங்களுக்கு.
நன்றி.
ReplyDelete