ஆழக்கடலின் அடிவாரத்தில்
அந்த
நிசப்த கருவறையின்
மெல்லிய இதழ்விரிப்பில்
உட்புகுந்து....
நீந்தத் தொடங்கினேன்
அங்கோர் அழகான உலகம்
அழகானதோர் அரண்மனை
எத்தனையோ நந்தவனங்கள்
அழகழாய்ப் பூக்கள்
விநோத விலங்குகள்
வேடிக்கை பிராணிகள்
விசித்திர தாவரங்கள்
அது ஒரு அற்புத உலகம்
கடவுள் கவிஞர்களுக்கென்றே கட்டிய
அன்பு மாளிகை அது
அங்கிருந்தது ஓர்
மாயக்கண்ணாடி
அதனருகே அழைத்துப்போனான்
அந்நாட்டு அரசன்
பழைய வாழ்க்கையை
படம்பிடித்துக் காட்டுமாம்
அதன் பெருமை பேசினான்
உங்கள் வயதைச் சொல்லுங்கள்
நிகழ்வுகளைக் காட்டி
பரவசப்படுத்தும் என்று
புகழ்மாலை பாடினான்
நேரே நின்று சொன்னேன்
பனிரெண்டு வயது
அவ்வளவுதான்
என் பால்யவயது நாடகங்கள்
மேடையறின அக்கணமே
அம்மாவின் கரம்பற்றி
கடைவீதியில் சுற்றியது
அப்பாவின் பழைய சைக்கிளேறி
ஆட்டம் போட்டது என்று
அமர்க்களப்படுத்தியது
மாயக் கண்ணாடி
இருபது வயது என்று
கூறிய அடுத்தநொடி
பரவசப்படுத்தின அந்த
இளமை நாட்கள்
கைநிறைய ரோஜாக்களோடும்
பைநிறைய கடிதங்களோடும்
நகர்ந்த
அந்த
நந்தவன நாட்களை
மீண்டும் சுவாசித்தேன்
என் எதிர்காலத்தை காட்டுவாயா
கேட்டதும்தான் தாமதம்
வயது மட்டும் கேட்டது
சொல்லச் சொல்ல......ஆஹா...
பார்க்க பார்க்க பரவசம்
கடைசியாக....
என் இதய சட்டசபையில்
ஓர் தீர்மானம் நிறைவேற்றி
கேட்டேவிட்டேன்
மனிதர்களுக்கு மட்டும்தான் காட்டுவாயா
தேசங்களுக்குமா என்று
தேசத்தின் பெயர் மட்டும் சொல்
கண்ணாடியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தேன்
அமெரிக்காவென்றேன்
ஆப்பிரிக்காவென்றேன்
நியூசிலாந்தென்றேன்
இங்கிலாந்தென்றேன்
வண்ண வண்ண திரைப்படங்கள்
திரையில் நிழலாடின
ஒவ்வொன்றின் எதிர்காலம் கண்டு
காதுவரை நீந்தின
என் கண்மீண்கள்
கடைசியாக.....
இந்தியா என்றபோது
ஒரே நிசப்தம்....
சற்றுநேரம் கழித்து
திரை விரிந்தது
திரைகண்டு
ஒரு நிமிடம்
சட்டென்று நின்றுபோய்
மீண்டும்
துடித்தது என் இதயம்
காரணம்
இந்தியாவின் நிறம்
கருப்பு......!
.
Tweet | |||||
நிறத்தால்
ReplyDeleteநாட்டின் நிறம் காட்டிய விதம்
அருமை அருமை..
அருமையான சொல்லாடல் கவிதை வாழ்த்துகள்
ReplyDeleteஅருமையான கற்பனை .
ReplyDeleteகடைசியில் கறுப்பு என்று
இருட்டடிப்பு செய்திருக்க வேண்டாமே ...
காலம் மாறும் சகோ ...
உண்மைதான் கருப்பு பலகையில்தான் எழுத முடியும்!அனைவரும் சமத்துவமாக!
ReplyDeleteஅருமை..
ReplyDelete