Friday, March 30, 2012

ஆசை விதை




பற்கள் முளைக்கவில்லை
ஆனாலும்
கடிக்க ஆசை

கொம்பு முளைக்கவில்லை
ஆனாலும்
முட்ட ஆசை

கால்கள் எழும்பவில்லை
ஆனாலும்
நடக்க ஆசை

கைகள் உருப்பெறவில்லை
ஆனாலும்
எடுக்க ஆசை

பிஞ்சு என்றனர்
ஆனாலும்
பழுக்க ஆசை

இப்போதும்
என் ஆசை விதைகள்
முளைத்துக்கொண்டேதான்
இருக்கின்றன

ஆனால்...
எப்போதும்
விதைகளோடு மட்டுமே
முடிந்து விடுகிறது
என்
அறுவடைகள்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

15 comments:

  1. முன்னுரையோடு முடிந்து போவதுதான் நம்முடைய ஆசைகள்...


    அழகிய கவிதை

    ReplyDelete
  2. அருமையான சிந்தனை ஓட்டம் நண்பரே...

    ReplyDelete
  3. விதைக்காமலும் அறுவடையோ ?

    ReplyDelete
  4. நல்ல கருத்துடை வரிகள் . வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. @ மைனஸ் ஓட்டு போட்ட நண்பர்கள்

    - எனக்கு மைனஸ் ஓட்டு போட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  6. @ கவிதை வீதி சௌந்தர்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  7. @ வெங்கட் நாகராஜ்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  8. @ மகேந்திரன்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  9. @ Seeni

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  10. @ திண்டுக்கல் தனபாலன்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  11. வித்தியாசமான சிந்தனைகளை கொண்டுள்ளீர்கள்......வாழ்த்துக்கள் நண்பரே......

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.