Friday, March 9, 2012

நீ அழகிதான்... ஆனால்




நகரத்துக்குள்
குடியிருப்பதாய்
நீ
சொல்லிக்கொண்டாலும்
உன் இருப்பிடம்
கல்லறைதானென்று
எனக்குத் தெரியும்

பலிகடாக்களாய்
மாற்றத்தான்
கொண்டுசெல்லப்படுகிறோம்
என்பதை
அறியாத
என் இளம் தோழமைகளின்
ஏமாந்து போன
இதயமல்ல
என் இதயம்

உன் வழி
கல்லறைக்குப் போகும் வழியென்று
நானறிவேன்

திருமண வீடுகளை
அலங்கரிக்கும்
மலர்களை
சாவு ஊர்வலத்துக்கு
பயன்படுத்துபவள்
நீ

நீ
அழகிதான்
ஆனால்
ஆபத்தானவள்

நீ
சௌந்தர்யவதிதான்
ஆனால்
சாவுக்கேதுவானவள்

நீ
மெதுமெதுவாய்...
உயிரைக் கொல்லும்
அமுத விஷம்

அடியே பொய்ப்பிரசங்கி!
உன் மாய போதகத்தால்
மயங்கிவிட
நான் ஒன்றும்
புத்திகெட்ட
பேதையல்ல

ஏ மாயையே!
என்னை விட்டு
அகன்று போ!

அழித்துவிட
நான் ஒன்றும்
கோலமல்ல
பூகோளப்படம்

கொன்றுவிட
நான் ஒன்றும்
கோழியல்ல
வானப்பறவை

உன் வலைக்குள்
சிக்காத
பிரபஞ்சப் பறவை!




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

35 comments:

  1. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  2. கவிதை..அழகான கவிதை...

    ReplyDelete
  3. //
    நீ
    மெதுமெதுவாய்...
    உயிரைக் கொல்லும்
    அமுத விஷம்

    //

    அழகான வார்த்தை பிரயோகம்

    ReplyDelete
  4. கலக்குறீங்க தலைவரே...


    அழகிய கவிதை

    ReplyDelete
  5. நல்ல கவிதை நண்பரே.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. போட்டுத் தாங்குங்க அப்படி..

    "அழித்துவிட
    நான் ஒன்றும்
    கோலமல்ல
    பூகோளப்படம்"-சிறப்பு..
    வாசித்தேன் வாக்கிட்டேன்.

    ReplyDelete
  7. இதுதான் கொல்லும் அழகென்பதோ?அருமை

    ReplyDelete
  8. பிரபஞ்சப் பறவையை மயக்கும் அழகி அழகிதான் !

    ReplyDelete
  9. பிரபஞ்சப் பறவை ரசிக்க வைக்கும் கவிதை.

    ReplyDelete
  10. தத்துவம் பொதிந்த கவிதை!
    அழகு!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  11. அழகு கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. எனக்குப் புரியவில்லை....சகோதரா....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. பிஞ்சென்று நினைத்தாயோ - என
    நான் அக்கினிக் குஞ்சடி...'

    அழகுக் கவிதை..

    ReplyDelete
  14. ம்ம்ம் அருமை

    //நீ
    அழகிதான்
    ஆனால்
    ஆபத்தானவள்// ரொம்பவே!

    ReplyDelete
  15. அழகுக் கவிதை ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  16. @ சிட்டுக்குருவி
    @ காஜாமைதீன்
    @ ராஜபாட்டை ராஜா
    @ கவிதை வீதி சௌந்தர்
    @ சசிகுமார்
    @ வெங்கட் நாகராஜ்
    @ மதுமதி
    @ சென்னைப் பித்தன்
    @ ரமணி
    @ ஹேமா
    @ தனிமரம்
    @ புலவர் ராமானுஜம்
    @ ஹைதர் அலி
    @ கோவைக் கவி (உங்களுக்குப் பதில் தனியாக)
    @ மகேந்திரன்
    @ ரியாஸ்
    @ திண்டுக்கல் தனபாலன்

    - அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  17. @ Kovaikkavi சொன்னது -

    //எனக்குப் புரியவில்லை....சகோதரா....
    வேதா. இலங்காதிலகம். //

    - மேடம். இக்கவிதையை இரண்டு விதமாக அணுகலாம். நான் எழுதியது எந்தப் பெண்ணைப் பார்த்தும் அல்ல. மாயையைப் பார்த்து. மாயையை (அதாவது நிலையாமைக் கொள்கை) ஒரு பெண்ணாகப் பாவித்து இக்கவிதையை இயற்றினேன். இன்னொரு விதம் மோசமான நடத்தை உள்ள பெண்களைப் பார்த்து படிப்பதாகவும் கொள்ளலாம். மகாகவி பாரதியின் மாயையைப் பழித்தல் என்கிற பாடலை நேரமிருந்தால் படிக்கவும். எவ்வளவு அழகாய் இதைக் குறித்து சொல்லியிருக்கிறது அந்த அக்கினிக் குஞ்சு. இல்லையென்றால் சொல்லுங்கள். நான் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன். நன்றி!

    ReplyDelete
  18. @ புலவர் ராமாநுசம் said

    //தத்துவம் பொதிந்த கவிதை!
    அழகு!//

    - அய்யா கவிதையை நன்றாகப் புரிந்துகொண்டதற்காக மிகவும் மகிழ்கிறேன். நான் எந்த நோக்கத்தில் எழுதினேன் என்பதை மிகச் சரியாகப் புரிந்து கெர்ணடீர்கள். புலவரல்லவா? நனறி!.

    ReplyDelete
  19. பாரதியின் மாயையைப் பழித்தல் ---நான் வாசிக்கிறேன் சகோதரா. மிக்க நன்றி. மற்றவர்கள் உலகப் படம் என்றனர் அது தான் நான் குளம்பிவிட்டேன். நன்றி...நன்றி. (இப்போது மறுபடி வாசித்திட்டுச் செல்வேன்.)
    வேதா. இலங்காதிலகம்.
    o.k..உன் வலைக்குள்
    சிக்காத
    பிரபஞ்சப் பறவை!

    ReplyDelete
  20. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. என்னையும் கவிதை எழுத தூண்டிய கவிதை.

    ReplyDelete
  22. பலிகடாக்களாய்
    மாற்றத்தான்
    கொண்டுசெல்லப்படுகிறோம்
    என்பதை
    அறியாத
    என் இளம் தோழமைகளின்
    ஏமாந்து போன
    இதயமல்ல
    அருமையான வரிகள் .

    ReplyDelete
  23. நல்ல கவிதை நண்பரே...வாழ்த்துகள்...

    ReplyDelete
  24. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html

    ReplyDelete
  25. உன் வலைக்குள்
    சிக்காத
    பிரபஞ்சப் பறவை!
    >>>
    தன்னம்பிக்கை நிறைந்த வரிகள். இந்த நம்பிக்கையும், உறுதியும் இருந்தால் உலகையே வெல்லலாம். அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  26. இல்லை இல்லை அவள் கல்லறையின் வழிகாட்டியல்ல.அன்பின் வழிகாட்டி.

    அருமையான கவிதை

    ReplyDelete
  27. நெஞ்சின் வேதனைகள் கவிதை வடிவில் அரங்கேற்றப் பட்டிருப்பதைப்போல் ஒரு யதார்த்தம் .

    ReplyDelete
  28. நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி தோழரே

    ReplyDelete
  29. பிரபஞ்சப்பறவை கல்லறைகளை "ஜஸ்ட்லைக் தட்டாக" கடந்து விட வேண்டியதுதானே?அங்கேயெ ஏன் நிலை கொள்ள வேண்டும்?

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.