Friday, March 2, 2012

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத பழமொழிகள் இருபது

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த இயற்கையோடிணைந்த வாழ்வு நமக்கு ஒரு பாடம். அவர்கள் எழுதிவைத்த அற்புத பழமொழிகள் கீழே:-

1. ஒல்லியான உடம்பு உறுதியான உடம்பு.

2. கொழுப்பு மண்டி குண்டி பெருத்தால் குந்தி எழுந்தால் கூட கூப்பாடு போடணும்.

3. அன்றே கொல்வது காட்டுப்புளி. நின்று கொல்வது வீட்டுப் புளி.

4. அளவான உறக்கம் வளமான வாழ்வு

5. உழைக்காத உடம்பு உழுத்துப்போன உலக்கை.

6. மூன்று வேளை உள்ளே. மூன்று வேளை வெளியே.

7. சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்.

8. உண்ணா நோன்பு உயிர் வாழும் நோன்பு

9. உடற்பயிற்சி உடம்புக்கான கவசம்.

10. வெயிலை மறந்தால் வாழ்வெல்லாம் துயரே.

11. சனி நீராடு

12.வெள்ளைச் சீனி வெள்ளை நிற நஞ்சு

13. இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு.

14. பசியோடு அமர்ந்து பசியோடு எழு.

15. நீரை அருந்து. உணவைக் குடி.

16. உண்ணும் உணவே மருந்து.

17. முப்போதும் மோர் குடி.

18. ஆண் பெண் உறவு முறிந்தால் உறவும் திரிஞ்சு போகும்.

19. கலவி நுணுக்கம் வாழ்க்கையின் பேரின்பம்

20. உட்காரும் இடத்தில் உறங்கி எழு.



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

25 comments:

  1. unmaiththaan....naam thaan sariyaa follow pantrathillai.... nearamum illai...oadikkondea irukkirom.

    ReplyDelete
  2. அருமை அருமை ஒவ்வொருவரும் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டிய அனுபவமொழிகள்..
    நன்று

    ReplyDelete
  3. ஒவ்வொன்றும் வாழ்வியலுக்கு தேவையானவை அருமை .

    ReplyDelete
  4. இன்றைய வாழ்க்கை சூழலுக்கு தேவையான பழமொழிகள் ..அருமை

    ReplyDelete
  5. அனுபவ மொழிகள் அருமையோ அருமை. அவசியம அனைவருக்கும் பயன்படும் விஷயம்.

    ReplyDelete
  6. முன்னோர் உரைத்த மூதுரை இவையே
    பொன்னே போல போற்றுவோம் அவையே
    அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  7. நல்ல அறிவுரைகள்...

    பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  8. அருமையான பயனுள்ள மொழிகள்
    பகிர்வுக்கு மிக்க நன்றி
    (20 வது மட்டும் கொஞ்சம் புரியவில்லை
    காட்டுப் புலியென இருக்க வேண்டுமோ )

    ReplyDelete
  9. எல்லா பொன்மொழிகளும் சிறப்பு.

    ReplyDelete
  10. அனைவருக்கும் பயன்படும் அனுபவ மொழிகள் அருமை...

    ReplyDelete
  11. ஒவ்வொன்றும் வாழ்வியலுக்கு தேவையானவை அருமை .

    ReplyDelete
  12. எல்லாவற்றிலுமே உண்மை இருக்கு.குறிப்பாக வெள்ளைச்சீனி,புளி இரண்டுமே உடம்பிற்குக் கூடாது !

    ReplyDelete
  13. @ Anonymous

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  14. @ முனைவர் குணசீலன்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  15. @ சசிகலா

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  16. @ NKS ஹாஜாமைதீன்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  17. @ கணேஷ்

    - வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.

    ReplyDelete
  18. @ புலவர் இராமாநுசம்

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி புலவர் அய்யா.

    ReplyDelete
  19. @ வெங்கட் நாகராஜ்

    - வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.

    ReplyDelete
  20. @ திண்டுக்கல் தனபாலன்

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  21. - //அருமையான பயனுள்ள மொழிகள்
    பகிர்வுக்கு மிக்க நன்றி
    (20 வது மட்டும் கொஞ்சம் புரியவில்லை
    காட்டுப் புலியென இருக்க வேண்டுமோ ) //

    - உட்காரும் இடத்தில் உறங்கி எழு என்பதைத்தானே சொல்கிறீர்கள். அதன் அர்த்தம் என்னவென்றால் உட்காரும் இடம் எது தரைதானே. அதிலேயே படுத்து இளைப்பாறவேண்டும். கட்டிலிலும் மெத்தையிலும் அல்ல என்பதுதான் அதன் பொருளாகும். தங்களது ஆழ்ந்த வாசித்தலுக்கும் அருமையான கேள்விக்கும் நன்றி சார். நான் ஒவ்வொரு பழமொழிக்கும் சிறு விளக்கத்துடன் எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். அன்று பாருங்கள். நேரம் கிடைக்கவில்லை. அவசரடி அவியலாக படைக்க வேண்டியதாகிவிட்டது. தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  22. @ ரமணி சொன்னது

    - //அருமையான பயனுள்ள மொழிகள்
    பகிர்வுக்கு மிக்க நன்றி
    (20 வது மட்டும் கொஞ்சம் புரியவில்லை
    காட்டுப் புலியென இருக்க வேண்டுமோ ) //


    - உட்காரும் இடத்தில் உறங்கி எழு என்பதைத்தானே சொல்கிறீர்கள். அதன் அர்த்தம் என்னவென்றால் உட்காரும் இடம் எது தரைதானே. அதிலேயே படுத்து இளைப்பாறவேண்டும். கட்டிலிலும் மெத்தையிலும் அல்ல என்பதுதான் அதன் பொருளாகும். தங்களது ஆழ்ந்த வாசித்தலுக்கும் அருமையான கேள்விக்கும் நன்றி சார். நான் ஒவ்வொரு பழமொழிக்கும் சிறு விளக்கத்துடன் எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். அன்று பாருங்கள். நேரம் கிடைக்கவில்லை. அவசரடி அவியலாக படைக்க வேண்டியதாகிவிட்டது. தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  23. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.