Wednesday, March 7, 2012

ஊழித்தீ......!




பிணமென்று பேர்பெறவா
இந்த பிச்சைக்கார நாடகங்கள்?
ஊரறியாது உலகறியாது
செய்வதால் உலகநீதியென்று
நீடித்த பெயர்பெறப் போகிறதா?

மனிதர்களை அழித்துவிட்டு
மிருகங்களை உற்பத்தி செய்யும்
தொழிற்சாலைகளுக்கா நாங்கள்
இந்த
யுகவேள்விகள் செய்தோம்

அடிமைச் சங்கிலிகள்
உடைத்தெறிந்தது
இரும்புச் சிறைகளில்
அடைபடுவதற்கா?

அக்கினிக் கோட்டைகளை
தகர்த்தெறிந்தது
ஆழித்தீயில் வேகுவதற்கா?

குத்துவிளக்குகள் ஏற்றியது
கோபுரங்களை கொளுத்தவா?

போதும்
இனி பொறுப்பதில்லை
நாங்கள்
இன்னொரு வேள்விக்கு
தயாராகிவிட்டோம்

வேள்விக்கு முன்
தப்பி ஓடிவிடுங்கள்
ஏனெனில்
இது
ஊழித்தீ..........!

இதை அணைக்க
சமுத்திரங்களாலும் முடியாது!







.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

9 comments:

  1. /அக்கினிக் கோட்டைகளை
    தகர்த்தெறிந்தது
    ஆழித்தீயில் வேகுவதற்கா?

    குத்துவிளக்குகள் ஏற்றியது
    கோபுரங்களை கொளுத்தவா?
    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. வெப்பம் மனதைத் தாக்கிவிட்டது நண்பரே..

    ReplyDelete
  3. //அடிமைச் சங்கிலிகள்
    உடைத்தெறிந்தது
    இரும்புச் சிறைகளில்
    அடைபடுவதற்கா?

    அக்கினிக் கோட்டைகளை
    தகர்த்தெறிந்தது
    ஆழித்தீயில் வேகுவதற்கா?

    குத்துவிளக்குகள் ஏற்றியது
    கோபுரங்களை கொளுத்தவா?///

    உவமைகள் அருமை.........

    ReplyDelete
  4. ஊழித் தீயின் நாக்குகளின்
    வெப்பம் கொதிக்கிறது கவிதையில்.....

    ReplyDelete
  5. இதை அணைக்க
    சமுத்திரங்களாலும் முடியாது!
    அருமை.

    ReplyDelete
  6. இதை அணைக்க
    சமுத்திரங்களாலும் முடியாது!
    அருமை

    ReplyDelete
  7. ஈழத்தோடு இணைத்துப்பார்த்தேன் கவிதையை.ஊழித்தீயின் பிரவாகம் மனதில் !

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.