Sunday, March 25, 2012

என் சிவந்த கைக்காரா...!





இன்னும் எத்தனை காலம்
என் சிவந்த கைக்காரா

யார் குளிக்க
திசை திரும்புகின்றன
உன்
நதிகள்

சிதைந்து போயின
உன்
பரவசப் பொழுதுகள்

நேரத்தை உட்கொண்டு
நீ
உதிர்த்த பணப்பூக்களால்

இங்கே
தேவதைகள்
அர்ச்சிக்கப்படுகிறார்கள்

உன்
இரத்தத்தைப் பிழிந்து
பழரசம் அருந்துகின்றன
இந்த
கருப்பு ஓநாய்கள்

உன்
அறியாமைதான்
இவர்களுக்கு ஆடை

உன்
கையாலாகாத்தனம்தான்
இவர்களுக்கு செருப்பு

என்னிடம் வா!
யுத்தம் பழகு

துருப்பிடித்துப் போன
உன்
ஆயுதங்களை
பழுதுபார்த்து தருகிறேன்

மூங்கில் குணம் மாற்று
பாரதி மீசை பொருத்து
சிவாஜியின் வாளை எடு

புறப்படு இப்போது
உன் பார்வைக்கு
புயல்களும் அடங்கும்

எட்டு எடுத்து
நீ வைக்கும்
ஒவ்வோர் அடிக்கும்
பூமி அதிரும்

பிறகென்ன
ஓர் புரட்சி துவக்கிவிட்டு
புன்னகையோடு வா!

இதோ
நான்
பூமாலையுடன்
காத்திருக்கிறேன்...!



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

22 comments:

  1. அருமை. உழைக்கும் வர்க்கத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சரியா சார்?

    ReplyDelete
  2. @ விஜயகுமார்

    - வாங்க விஜயகுமார் சார். ஆம். நீங்கள் சொல்வது சரிதான். உழைக்கும் வர்க்கத்தை நோக்கியே சொல்லும் விதமாய் எழுதியிருக்கிறேன். புரிதலுக்கு நன்றி! முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  3. தொழிலாளர்களின் குரலாக வந்திருக்கும் கவிதை

    ReplyDelete
  4. போராட்டம் தானா! பேசித் தீர்க்க முடியாதா!
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  5. உழைப்பாளிகளுக்கு மாலைபோட்டு கௌரவப் படுத்தி சந்தோஷ ஊதியம் கொடுத்துவிட்டால் அதைவிட வேறென்ன வேண்டும் அவர்களுக்கு !

    ReplyDelete
  6. @ தனிமரம்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  7. @ Seeni

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  8. @ Kovaikkavi

    - வாங்க சகோதரம். போராடிப் பார்த்தும் உரிமைகள் கிடைக்காத உழைக்கும் வர்க்கத்தினரின் அவதாரம் இதுதான். ஆபத்து ஒன்றுமில்லை. தற்காத்துக் கொள்ளலே தவிர ஒன்றுமில்லை. பாரதி வம்சம்! வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோதரம்.

    ReplyDelete
  9. @ ஹேமா

    - ஆமா சகோ. உங்கள் கருத்து உண்மைதான். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  10. //மூங்கில் குணம் மாற்று//

    விறுவிறுப்பு சூடான வரிகள்

    வாழ்த்துக்கள் படைப்பாளிக்கு

    ReplyDelete
  11. என்னிடம் வா!
    யுத்தம் பழகு

    துருப்பிடித்துப் போன
    உன்
    ஆயுதங்களை
    பழுதுபார்த்து தருகிறேன்//
    வந்து விட்டோம் எப்போது சரி பார்க்கப்படும் .

    ReplyDelete
  12. "உன்
    அறியாமைதான்
    இவர்களுக்கு ஆடை"

    நல்ல வரிகள் சார் !

    ReplyDelete
  13. @ NKS ஹாஜா மைதீன்

    - தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  14. @ மனசாட்சி

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  15. @ சசிகலா சொன்னது

    //வந்து விட்டோம் எப்போது சரி பார்க்கப்படும்//

    - என் ருத்ரம் கொப்பளிக்கும் கவிதைகள் தொடர்கின்றன. வந்து கூர்தீட்டிக் கொள்ளுங்கள். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோதரம்.

    ReplyDelete
  16. @ திண்டுக்கல் தனபாலன்

    - தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  17. மேதினம் போற்றும் கவிதை!
    மேதினி போற்றும் கவிதை!
    காத்தினில் மோதும் கவிதை
    கருத்தில்நிலைத்திடும் கவிதை!

    நன்று!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. @ புலவர் சா இராநுசம்

    - கருத்துரையையும் கவிதையாகவே தந்துவிட்டீர்களா? அருமை அய்யா! தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!

    ReplyDelete
  19. நல்ல ஆக்கம்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.