Friday, March 30, 2012

பதினாறு செல்வங்கள் எவை எவை?




பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:-

பதினாறு செல்வங்கள்:

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)


இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் அறுதியிட்டு கூறினர். உண்மைதானே? என்ன நான் சொல்றது?

வாழ்க நலமுடன்...!






.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

40 comments:

  1. ஏற்கனவே அறிந்திருந்தாலும் ஞாபகம் வைத்துக்கொள்ளமுடியவில்லை. விளக்கங்களுடன் கொடுத்தது அருமை.

    ReplyDelete
  2. அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அரிய நற்செய்தி இது.என்னைப் போன்ற தமிழில் பட்டங்கள் பெற்றவர்கள் சொல்ல மறந்ததைத் தாங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
    நன்றி.
    தங்களின் பின்னூட்டங்கள் மூலம் தாங்கள் மிகுந்த தமிழ்ப் பற்றுள்ளவர் என்பதை அண்மையில் அறிந்தேன்.
    மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. @ விச்சு

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  4. @ கவிதைவீதி சௌந்தர்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தலைவரே!

    ReplyDelete
  5. @ முனைவர் பரமசிவம்

    - அப்படியா? மகிழ்ச்சி. உண்மைதான் சார். தமிழ் மீது தீராக் காதல் கொண்டவன் நான். இலக்கியம் என்றால் உயிர். தங்களைப் போன்ற தமிழ்ப் பற்றாளர்களின் அருமையான நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் நான். தங்களது தொடரும் ஆதரவுக்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு நண்பரே... படித்திருந்தாலும் ஏனோ நினைவில் நிற்கவில்லை இதுவரை. நினைவில் இருக்க வேண்டிய விஷயம்.....

    ReplyDelete
  7. @ வெங்கட் நாகராஜ்

    - வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  8. சூப்பர் துரை... நல்லா இருக்கு இந்த மேட்டர். எனக்கு இதுனால ஒரு ஐடியாவும் கிடைச்சிடுச்சு அடுத்த மிக்ஸர்ல போடறதுக்கு... தாங்க்ஸ்!

    ReplyDelete
  9. உண்மையைச் சொன்னீங்க சார்....எனக்கு இன்னைக்குத்தான் இது முழுமையாகத்தெரியும் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. @ கணேஷ்

    - அப்படியா சார். ஓ.கே. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  11. @ சிட்டுக்குருவி

    - வருகைக்கும கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  12. இவைதானா அந்தப் பதினாறும் பெற்றுப் பெரும் பெருவாழ்வு.நன்றி அறிந்துகொண்டேன் !

    ReplyDelete
  13. Nice to see the extract. Please have a look at Abhirami andhaathi too.
    Regards.

    ReplyDelete
  14. பதினாறு பேறுகள் பற்றிய விளக்கம் அருமை நண்பரே.

    ReplyDelete
  15. Thanks for sharing. Is number 15, oru thunbam illatha vazhvu?
    கலையாத கல்வியும் குறையாத வயதும், ஓர்
    கபடு வாராத நட்பும்
    கன்றாத வளமையுங், குன்றாத இளமையும்
    கழுபிணியிலாத உடலும்
    சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்
    தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத கொடையும்
    தொலையாத நிதியமும், கோணாத கோலும் ஒரு
    துன்பமில்லாத வாழ்வும்
    துய்ய நின் பாதத்தில் அன்பும், உதவி பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
    ஆதிகட வூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!

    - அபிராமி பட்டர்

    ReplyDelete
  16. theriyaathu-
    therinthu kondathi makizhchi!

    ungAlukku mikka nantri!

    ReplyDelete
  17. அனைவரும் அவசியம் தெரிந்திருக்கவேண்டியதும்
    அடைய வேண்டியதுமான 16 செல்வங்களையும்
    மிக அழகான பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தாங்களும் தங்கள் குடும்பத்தினரும்
    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ
    மனதார வேண்டுகிறேன்

    ReplyDelete
  18. அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  19. அறிந்திருந்தேன். மனப்பாடமாக இல்லை. நன்றி நினைவூட்டுதலிற்கு. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. மீண்டும் ஒருமுறை தெளிவாக தெரிந்து கொண்டோம்

    ReplyDelete
  21. அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  22. @ ஹேமா

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  23. @ Anonymous

    - அப்படியா? அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிப் பாட்டா இது. நான் முன்பு ஒரு முறை ஒரு புத்தகத்தில் படித்தது. டைரியில் குறித்து வைத்திருந்தேன். நூலாசிரியர் யாரென்று குறித்து வைக்க வில்லை. பிளாக்லாம் எழுதுவேன்னு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா இன்னும் புள்ளிவிபரங்களோடு குறிச்சி வைச்சிருப்பேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  24. @ Seeni

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  25. @ Ramani

    - வருகைக்கும் அழகான விரிவான பின்னூட்டத்திற்கும் உற்சாகமான வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார். இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆசீர்வாதம் தந்தருள்வாராக.

    ReplyDelete
  26. @ ஹைதர் அலி

    - வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  27. @ Kovaikkavi

    - வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்

    ReplyDelete
  28. @ Koodal Bala

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  29. @ மனசாட்சி

    - அப்படியா? வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  30. @ சசிகலா

    - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  31. Overwhelmed by your response and by your quick reference.Started to blog as Nesachaaral, but cdnt continue. Happy to enjoy the lullaby of Tamizh annai through persons like you. Hope to resume my blog at the earliest.
    Regards, (Anonymous)

    ReplyDelete
  32. விளக்கமான பதிவு சார் ! நன்றி !

    ReplyDelete
  33. ஏற்கனவே சொற்களில் (பசு, கல்வி, மனை...ன)தெரியும். விளக்கமாக இன்றுதான் தெரியும். பகிர்வுக்கு நன்றி அண்ணா. மின்சாரதடை காரணமாக அடிக்கடி வர முடியலை. மன்னிச்சு அண்ணா.

    ReplyDelete
  34. புலவர் கல்லூரியில் படித்தது!
    உங்களால் தினைவுக்கு வந்தது!
    நன்றி துரை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  35. மிக அருமையான 16 செல்வங்கள்

    ReplyDelete
  36. http://edakumadaku.blogspot.com/2009/08/blog-post_27.html
    இரண்டு வருடம் முன் கோபி பதிவில் பார்த்தது.

    பகிர்வு அருமை

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.