Friday, December 2, 2011

வாழ்க்கை நடத்திய காம பாடம்

காமம் என்றால் என்ன
என்னிடம் கேட்டது வாழ்க்கை
புணர்ச்சி வேட்கையே காமம்
சொன்னது நான்

தவறு
காதலின் நீட்சியே காமம்
அன்புத் தென்றலின்
வேக முதிர்ச்சியே
அந்த
ஆரவாரப் புயல்

எங்கள் இளைஞர்களின் கருத்து
வேறுவிதமாய் உள்ளதே என்றேன் நான்
என்னவென வினவியது வாழ்க்கை

வாழ்வின் நோக்கமே காமம்
என்பதுதான்
இன்றைய இளைஞர்களின்
கோட்பாடும் கொள்கையும்

அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுத்தான்
பிழைக்கிறது
சினிமாவும் பத்திரிக்கையும் என்றேன்

உண்மைதான்
அது முறையற்ற காமம்
அவர்கள் மாயவலையில்
விழும் ஈனமான்கள்
ஆனால் மெய்நிலை வேறு என்றது


விளக்கு என்றேன் வியப்புடன்
அழகாய் விளக்கியது வாழ்க்கை

பெரிய உணவுத் திருவிழா
வகை வகையான உணவு வகைகள்
திகட்டத் திகட்ட அலுக்காத அறுசுவைகள்
புதுமை புதுமை என
பிரம்மாண்டமாய் விளம்பரங்கள்

ஊரிலுள்ளோர் எல்லோரும் கூடினார்களாம்
அந்த அரங்கத்தில்

பிரம்மாண்ட மேஜை
பெரிய பட்டு விரிப்பு
எல்லோர் கண்களும் அதன் மேலே

திரை நீக்கப்பட்டது
இருந்தது என்ன தெரியுமா
நாம் அன்றாடம் சாப்பிடும்

சாதமும் சாம்பாரும்
ரசமும் பொறியலும்
அப்பளமும் கூட்டும்

வீட்டில் சாப்பிடாத
வெறிநாய்கள்

தட்டோடு நக்கின
காணாததை கண்டது போல.

இதுதான் காமம் என்றது வாழ்க்கை

எவ்வளவு அழகாய் சொல்லிவிட்டது வாழ்க்கை
பெருமிதமாய் பார்த்தேன்

என் அறிவு தோற்றுவிட்ட
வாழ்க்கையை நோக்கி.




சந்திப்போம் அடுத்த பதிவில்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

27 comments:

  1. வீட்டில் சாப்பிடாத
    வெறிநாய்கள்

    தட்டோடு நக்கின
    காணாததை கண்டது போல.
    >>
    நிஜமாவே நம் காமத்தின் நிலையை இந்த வரிகளில் உணர்த்திவிட்டீர்கள் சகோ. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தவறு
    காதலின் நீட்சியே காமம்
    அன்புத் தென்றலின்
    வேக முதிர்ச்சியே
    அந்த
    ஆரவாரப் புயல்//
    இதுதான் நிஜம்..

    ReplyDelete
  3. அருமையாக சொல்லிப் போகிறீர்கள்
    கண்ணதாசன் மிக அருமையாகச் சொல்வார்
    "எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்-மது
    அத்தனைக்கும் சுவை ஒன்றாகும்
    சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை-உன்
    சிந்தையிலேதான் பேதமடா "என்பார்
    அதே நேர்த்த ிஉடன் அதே விஷயத்தை சொல்லிப் போகும்
    தங்கள் பதிவு அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  4. //நிஜமாவே நம் காமத்தின் நிலையை இந்த வரிகளில் உணர்த்திவிட்டீர்கள் சகோ. வாழ்த்துக்கள்//

    நன்றி சகோ. ராஜி. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. // இதுதான் நிஜம்..//

    நன்றி சகோ. வேடந்தாங்கல் கருன் . வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. // thanks for sharing....//

    நன்றி சகோ. சசிகுமார் . வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. //அருமையாக சொல்லிப் போகிறீர்கள்
    கண்ணதாசன் மிக அருமையாகச் சொல்வார்
    "எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்-மது
    அத்தனைக்கும் சுவை ஒன்றாகும்
    சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை-உன்
    சிந்தையிலேதான் பேதமடா "என்பார்
    அதே நேர்த்த ிஉடன் அதே விஷயத்தை சொல்லிப் போகும்
    தங்கள் பதிவு அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்//

    நன்றி ரமணி சார் . வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  8. சிறப்பாக சொல்லிவிட்டீர்கள்.இதைவிடவும் விளக்க என்ன இருக்கிறது? நன்று

    ReplyDelete
  9. இன்றைய வாழ்வில் காமம் பற்றிய பார்வையோடு கூடிய கவிதையை வாசித்தேன்.நன்று.கலக்குங்கள்.

    ReplyDelete
  10. கவிதை நடையில்லை ஆயினும் கருத்து சொல்லவந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று..

    ReplyDelete
  11. Thangal muthal varugaikkum vimarsanam matrum karuthuraikkum mikka nanri Sago.Priyamudan Vasanth.

    ReplyDelete
  12. வாழ்வின் நோக்கமே காமம்
    என்பதுதான்
    இன்றைய இளைஞர்களின்
    கோட்பாடும் கொள்கையும் .கூடவே டாஸ்மாக்கும்

    ReplyDelete
  13. Unmaithan Sago. Valipokkan. Varugaikkum pakirvukkum nanri.

    ReplyDelete
  14. Varugaikkum pakirvukkum nanri Sago. Nandu @ Norandu.

    ReplyDelete
  15. சொல்லக் கூசும் விஷயத்தை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் டானியல் !

    ReplyDelete
  16. தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ. தமிழன். தங்கள் தளத்தையும் பார்வையிட்டேன். நன்று.

    ReplyDelete
  17. ஹேமா said //சொல்லக் கூசும் விஷயத்தை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் டானியல் !//

    தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஹேமா.

    ReplyDelete
  18. சொல்ல வந்த கருத்தை மனதில் பதியும்படி வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மிகவும் நன்று.

    ReplyDelete
  19. சொல்ல வந்த கருத்தை நயமுடன் சொல்லும் பாங்கு நயம்

    ReplyDelete
  20. Thangal varugaikkum pakirvukkum mikka nanri Sago.Geetha!

    ReplyDelete
  21. Varugaikkum pakirvukkum mikka nanri Sago.CURESURE4U.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.