Thursday, December 22, 2011

ஒரு நதியின் அழுகை




என் பிறந்த ஊரின் வழியாய்ப்
பிரயாணப்பட்டபோது

என் ஞாபகச் சில்லறைகள்
தெறித்துச் சிதறின


*****

ஏரல்
இதுதான் நான் பிறந்த ஊர்
தென்தமிழகத்தின் கடையோரமாய்
வயல்களோடும் வயல்வெளி நிலங்களோடும்
நீண்டு கிடக்கிறது
அந்த
பசுமை பூமி

*****

அந்த நாட்களில்
என் வசந்த ருதுக்களில்
என் தோழமையாய் இருந்ததெல்லாம்
அந்த நதி
தாமிரபரணி.

*****

அந்த நதித்தோழியோடுதான்
செலவழிந்தன
என் நேரச் சில்லறைகள்

*****


நீண்ட அந்த
வெண்மணற்பரப்புதான்
அவளின்
கூந்தல்

அந்தக் கூந்தலில்தான்
என் கூடுகள் இருந்தன.

*****

எனக்கான
அவளின் கதைகளும்
அவளுக்கான
என் கதைகளும்
அங்குதான் பறிமாறிக்கொள்ளப்பட்டன

*****

அதிகாலைகளில்
அவளை
நான்
முத்தமிடும்போதெல்லாம்
சிலிர்ப்படைந்து
தெளிப்பாளே
அந்த
நீர்த்திவலைகளில்தான்
என் பரவச நிமிடங்கள்
கரைந்து கிடக்கின்றன.

*****

அவளுக்குள் நான்
மூழ்கி எழும்போதெல்லாம்
பாய்ந்து பரவுமே
அமுத விஷம்

அதுவே
என் கவலைக் கிருமிகளை
அழித்தொழிக்கும்
மாமருந்து

*****

என் சொர்க்கநாட்களை
சேகரிக்க கற்றுத்தந்ததும்
அவள்தான்

என் நரக நாட்களை
அழித்துப்போடக் கற்றுத் தந்ததும்
அவள்தான்

*****

அவள் காதோரங்களில்
முளைத்திருக்கும்
அந்த நாணல் சீப்புகளில்தான்

என் பிரச்சினை முடிகளை
சீவியிருக்கிறேன்

*****

இன்று……

பேருந்தைவிட்டு இறங்கி
ஊர் எல்லையைக் கடந்து
நடக்கிறேன்

என் தோழியைக் காண…..


*****


அங்கு நான் கண்ட காட்சி.....

ஆள் மெலிந்திருந்தாள்
அய்யோ பாவம் என்றிருந்தாள்

அவளின் வனப்பை
காலம் திருடியிருந்தது

அவளின் கூந்தல்
வெட்டப்பட்டிருந்தது

அவளின் மரப்பூக்கள்
பறித்தெறியப் பட்டிருந்தன


*****


அவளுக்கான
என் கதைகள்
அப்படியேதான் இருக்கின்றன

எனக்கான
அவள் கதைகளில்தான்
கருச்சிதைவு ஏற்பட்டிருந்தது


*****

தன் நீர்க்கரங்களால்
என்னை அணைத்துக்கொண்டு
கதறினாள் என் தோழி

*****



போரினால் பாதிக்கப்பட்ட
நாடு போல் இருக்கிறது
என் இதயம்


சிந்தித்துக் கொண்டே
இருக்கிறேன்
அங்கு போகாமலே
இருந்திருக்கலாமோ என்று……….

********








.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

39 comments:

  1. வேதனை தான்.
    இயற்கை வளம் சிதைக்கப் படுகிறது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இந்த அனுபவத்தை நானும் அனுபவித்ததுண்டு. வன்மையான வார்த்தைகளால் அழகாகச் சொல்லியுள்ளீர்கள் துரை. இந்த வேதனையை மாற்ற மனிதர்கள் மனம் மாற வேண்டும்.

    ReplyDelete
  3. @ Rathnavel

    தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  4. கணேஷ் கூறியது // -இந்த அனுபவத்தை நானும் அனுபவித்ததுண்டு. வன்மையான வார்த்தைகளால் அழகாகச் சொல்லியுள்ளீர்கள் துரை. இந்த வேதனையை மாற்ற மனிதர்கள் மனம் மாற வேண்டும்.//

    - ஆம் சகோ. கணேஷ். தங்களது ஆதங்கம்தான் என்னுடையதும்கூட. தங்களது வருகைக்கும் அருமையான விரிவான பின்னுட்டத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. @ Online Works for All

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. எனக்கான
    அவளின் கதைகளும்
    அவளுக்கான
    என் கதைகளும்
    அங்குதான் பறிமாறிக்கொள்ளப்பட்டன// உவமைகளும், பயன்படுத்திய வார்த்தைகளும் அசத்தல்..

    ReplyDelete
  7. நினைவுகளை நினைவோடு மீட்டி விட்டீர்கள் நன்றி சகோ...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

    ReplyDelete
  8. //தன் நீர்க்கரங்களால்
    என்னை அணைத்துக்கொண்டு
    கதறினாள் என் தோழி//

    பலருக்கு இப்படி உண்டு.தங்களால் சரியான வார்த்தைகளால் சொல்ல முடிகிறது.கால ஓட்டத்தில் இழந்தவை நிறைய! கவிதை நன்று

    ReplyDelete
  9. இயற்கைச் சீரழிவின் ஆதங்கத்தை
    மிக மிக அழகாகச் சொல்லிப் போகிறது தங்கள் படைப்பு
    மனம் தொட்டுப் போகும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  10. brilliant!
    உங்கள் எழுத்துக்களில் உங்கள் மண்ணின் மணம் கமழ்கிறது.

    ReplyDelete
  11. பிரமாதம்

    அழகான கவிதை

    ReplyDelete
  12. மனதைத் தொடும் ஆதங்கம் நண்பரே

    த.ம 10

    ReplyDelete
  13. @ Vedanthangal Karun
    @ Mathisudha

    @ Ramani
    @ Shanmugavel
    @ Nandu
    @ Nivas
    @ Chennaipithan
    @ M.R.

    Anaivarukkum Manamaarntha Nanrigal pala.

    ReplyDelete
  14. நல்ல சிந்தனை.. உவமானம்.. உவமேயம் அருமையாக உள்ளது..

    "என் கண்ணீர் அவளுடன்
    கரைந்து போனதை அவள்
    அறிந்து கொண்டாள்"

    சரிதானே..?
    T.M.11

    ReplyDelete
  15. மனத்தை நெகிழ்த்தும் வரிகளில் வெளிப்படும் வேதனையும், இயற்கையை அலட்சியப் படுத்தி அலங்கோலமாக்கும் நம் மக்களின் மனோபாவம் பற்றிய ஆதங்கமும் கண்டு வருந்தினேன். என் ஊருக்குப் போகுமுன் என் மனத்தைத் திடப்படுத்திக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  16. அழகு அழகு
    ஒவ்வொன்றும் கண்ணில் ஒத்திக்கொள்ளக்கூடிய
    அளவுக்கு பக்குவமாக சமைக்கப் பட்டது..

    ReplyDelete
  17. // அவளுக்கான
    என் கதைகள்
    அப்படியேதான் இருக்கின்றன

    எனக்கான
    அவள் கதைகளில்தான்
    கருச்சிதைவு ஏற்பட்டிருந்தது//

    என் மனதைத் தொட்ட வரிகள்!
    கவிதை மிகவும் நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. அருமையான கவிதை சார்....ஒரு நதியின் மரணம் என்பது மண்ணின் மரணம். மனிதனின் மரணம்

    ReplyDelete
  19. அருமையான கவிதை

    ReplyDelete
  20. நல்ல பதிவு ! இனிய புத்தாண்டு,கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. அருமையான வரிகள் Sir!
    பகிர்விற்கு நன்றி!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  22. பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  23. Advocate P.R. Jeyarajan said //நல்ல சிந்தனை.. உவமானம்.. உவமேயம் அருமையாக உள்ளது..

    "என் கண்ணீர் அவளுடன்
    கரைந்து போனதை அவள்
    அறிந்து கொண்டாள்"

    சரிதானே..?//

    - Sarithan Sir. Ungal Kavithaiyum Nanraaga Ullathu.Varukaikkum pakirvukkum Nanri.

    ReplyDelete
  24. @ Mahendran

    Thangal varukaikkum virivaana pinnuttathirkum mikka nanri Sago.

    ReplyDelete
  25. @ Pulavar Ramanujam
    @ Rahim Kazhali
    @ Sasikala
    @ Hosur Rajan
    @ Dindigul Dhanabalan
    @ Sasikumar

    Nanri. Thangal Anaivarin varugaikkum pakirvukkum.

    ReplyDelete
  26. நதியின் குரல் நமக்கு கேட்குது. கேட்க வேண்டியவங்களுக்கு கேட்டால்தானே விடிவுகாலம் பொறக்கும்.

    ReplyDelete
  27. ''...அதுவே
    என் கவலைக் கிருமிகளை
    அழித்தொழிக்கும்
    மாமருந்து ..''
    அருமையாக கவிதை எழுதப்பட்டுள்ளது. நல்ல கற்பனைத் தொகுப்பு. வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  28. @ Kovaikkavi

    Thangal thodarntha varugaikkum arumaiyana pinnoottathukkum mikka Nanri Sago. Vetha Elankathilagam.

    ReplyDelete
  29. @ Hosur Rajan

    Thangal muthal varugaikkum Puthandu Christmas Vaalthukkum mikka Nanri. Same to you Sago.

    ReplyDelete
  30. @ Sasikala

    Thangal thodarntha varugaikkum pakirvukkum nanri Sago.

    ReplyDelete
  31. @ Mahendran

    Thangal thodarntha varugaikkum virivaana azhagaana pinnoottathukkum mikka Nanri Sago.

    ReplyDelete
  32. @ Geetha

    Thangal thodarntha varugaikkum azhagana karuthuraikkum Nanri Sago.

    ReplyDelete
  33. தோழி,காதலி,மரம்,நீர் என்று ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு கதை தெரிகிறது !

    ReplyDelete
  34. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
  35. பிறந்த ஊரின் நினைவுகள் சூழ இருப்பதும் சுமகமே/

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.