Tuesday, December 6, 2011

வியாதியின்றி வாழ சில ஆலோசனைகள்

நம்முடைய நவீன மருத்துவ விஞ்ஞானம் தலைசிறந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் பெருகி வரும் புதுப்புது வியாதிகளை நம்முடைய மருத்துவ விஞ்ஞானத்தால் குணப்படுத்த முடியவில்லை. ஏன் அவை தொடர்ந்து பெருகுகின்றன? வியாதியில்லாமல் வாழ முடியாதா? என்ற பல கேள்விகளுக்கு பதிலாக இந்த சின்ன அலசல்.

உதாரணமாக இந்த அலர்ஜியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த அலர்ஜியில்தான் எத்தனை வகை? உணவு அலர்ஜி, உலோக அலர்ஜி, ஆஸ்துமா, தாவரங்களினால் உண்டாகும் அலர்ஜி, விலங்குகளினால் உண்டாகும் அலர்ஜி என்று எத்தனை விதவிதமான அலர்ஜிகள் இருக்கின்றன பாருங்கள். இவ்வகை அனைத்து அலர்ஜிக்களையும் நம்முடைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் முற்றிலும் குணமாக்க இயலுகிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது.

நவீன நுண்ணோக்கி (Microscope) மூலம் கண்ணோக்கினால் மில்லியன் கணக்கான வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றிலும் தண்ணீரிலும் நம்மைச் சுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கிறதை நாம் காணலாம். இவற்றில் பாதியையேனும் நம்முடைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் கண்டுபிடிப்பதே சிரமமாயிருக்கிறது. பிறகு எப்படி இவற்றிற்கு சிகிச்சை அளிப்பது? இவற்றிற்கு என்னதான் தீர்வு?

பல வருடங்களுக்கு முன்னே பார்த்த அதே பாக்டீரியாக்களும் வைரஸ்களும் இப்போது தங்கள் கட்டமைப்பில் மாறியிருக்கின்றன. இதைக் கண்டு விஞ்ஞான உலகம் வாயடைத்துப் போய் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க விதவிதமாய் ஆராய்ச்சிகள் பரபரப்பாய் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊதாரணமாக இந்த பன்றி காய்ச்சல் வைரஸை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் இவற்றை முற்றிலும் குணமாக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கட்டுப்படுத்த வேண்டுமானால் செய்யலாம். எய்ட்சும் அப்படித்தான்.

இந்த பூமிக்கு என்னதான் நேர்ந்துவிட்டது?
அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கின்றனர். இவ்வளவு மருத்துவ வசதிகள் இல்லாத அக்காலத்தில் எப்படி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்? தொடர்ந்து வாசியுங்கள்.

இந்த காலத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதற்கான சிறிய பட்டியல் கீழே.

1.எவ்வித மருந்துகளுக்கும் கட்டுப்படாத கிருமிகள்
2.கிருமிகளில் உட்கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்
3.காய்கறிகளும், பழங்களும் தங்கள் சத்துக்களில் ஏற்பட்டுள்ள
குறைபாடுகள்
4.சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு.

நல்ல ஆரோக்கியமாக வாழ வழியில்லாமல் இந்த பூமி கேடடைந்து வருகிறது. ஆனால் இவற்றிலிருந்து தப்பித்து நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ வழியில்லையா என்ற ஆதங்கத்திற்கு பதில் உண்டு. என்ன வழி என்று கேட்கிறீர்களா?

நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதுதான் அந்த வழி. என்ன அந்த பழைய கால வாழ்க்கை முறை நமக்கு சரிப்பட்டு வருமா என்று சந்தேகப்படுபவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.

நம்முடைய வாழ்க்கை முறைக்கும் நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?
முதலில் நம்முடைய மனஆரோக்கியத்துக்கும் அவர்களின் மனஆரோக்கியத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம்.

நாம் அடிக்கடி கவலைப்படுகிறோம். நம்முடைய வீட்டைக்குறித்து, மனைவி பிள்ளைகளைக் குறித்து, வேலையைக்குறித்து, சுற்றுப்புறச் சூழலைக் குறித்து, நம்முடைய உணவு முறைகளைக் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். இவைகளினால் உண்டாகிற மனஅழுத்தம்தான் நமக்கு பல வியாதிகளை உண்டுபண்ணுகிறது. நம்முடைய மூதாதையர்களுக்கு சில பிரச்சினைகளே இருந்தன. அதனால் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள். ஆனால் நமக்கு நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் பலப்பல பிரச்சினைகளையும், வியாதிகளையும் உண்டுபண்ணுகின்றன.

அடுத்து உணவு முறைகளைப் பற்றிப் பார்ப்போம். உணவுமுறைகளில் நாம் எவ்விதங்களில் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என்று பார்ப்போம். கீழே உள்ள பட்டியலைக் காணுங்கள்.

1.பேக்கேஜிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களையோ பானங்களையோ
வாங்கி பயன்படுத்த கூடாது.

2.பாலீதீன் பைகளையோ, பிளாஸ்டிக் பொருட்களையோ
பயன்படுத்துவதை தவிருங்கள்.

3.சமையலில் மிச்சமான பொருட்களினால் மறுசுழற்சி முறையில் உணவுப்
பொருட்களை உண்டாக்குவதை தவிருங்கள். நேற்று உள்ள மீதி
உணவானாலும் சரி. பயன்படுத்தாதீர்கள்.

4. உங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்களை நீங்களே வீட்டுத்தோட்டம் அமைத்து பயிரிட்டு அதை சாப்பிடப் பழகுங்கள். அல்லது அவ்வித காய்கறிகள், பழங்கள் விற்கும் தரமான கடைகளை விசாரித்து வாங்கி பயன்படுத்த ஆரம்பியுங்கள். வீட்டுத்தோட்ட பராமரிப்பு நம்முடைய மனதிற்கும் ஒரு இனிமையான அனுபவம் தந்து மனஅழுத்தத்தைக் குறைக்கிறது.

நம்முடைய முன்னோர்களின் ஆயட்காலத்தை ஒப்பிடும்போது நம்முடைய ஆயட்காலம் அதிகம்தான். நவீன மருத்துவம் இதைச் சாதித்தது உண்மைதான். ஆனால் அவர்கள் கொஞ்சகாலம் வாழ்ந்தாலும் நிம்மதியோடும் வியாதிகள் இல்லாமலும் வாழ்ந்தார்கள். நாம் அப்படியா வாழ்கிறோம்? !...

காரணம் மன அழுத்தம்தான். மன அழுத்தமானது நம்முடைய இரத்தத்தில் ஒருவித அமிலத்தை (Acid causing stress) உற்பத்தி செய்கிறது. அது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து நம்மை பலவீனர்களாக்கி விடுகிறது.

சரி. அப்படியானால் இந்த மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
வேறென்ன? நம்முடைய புன்னகையும் சிரிப்பும்தான். ஆம் மனதை எப்போதும் நகைச்சுவை உணர்வுடனும் புத்துணர்வுடனும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை வாசியுங்கள். எப்போதும் புன்னகையுடன் வாழ்கிறவர்கள் மற்றவர்களைவிட நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அவர்களுக்கு மனஅழுத்தத்தால் இரத்தத்தில் உண்டாகிற அமிலம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவதால் வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளும் குறைந்துபோகிறது.

முடிவாக,

நம்முடைய மனதைப் பேணுவோம். வியாயாதிகளின்றி வாழுவோம்.
நன்றி வணக்கம்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

30 comments:

  1. அருமையான தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அசத்தலான உணவு முறைகள்..
    பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  3. பயனுள்ள குறிப்புகள் நண்பரே...

    ReplyDelete
  4. அத்தனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்.பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  5. அருமையான தகவல்.....

    ReplyDelete
  6. Varugaikkum pakirvukkum Nanri Sago. Nandu @ Norandu.

    ReplyDelete
  7. Varugaikkum pakirvukkum Nanri Sago. Vedanthangal Karun.

    ReplyDelete
  8. Varugaikkum pakirvukkum Nanri Sago.Venkat Nagaraj.

    ReplyDelete
  9. நல்ல வியசங்களை சொல்லியிருக்கீங்க.
    நன்றி.

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி... விசித்திரமான சில போபியாக்களை பற்றி பதிவிடுங்களேன்... இது வாசகர் விருப்பம்...

    ReplyDelete
  11. Varugaikkum pakirvukkum nanri Sago. Philosophy Prabakaran. Thangal viruppaththai udanadiyaga aavan seikiren Nanbare.

    ReplyDelete
  12. த.ம.10.
    மிகத் தேவையான, பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. பதிவிற்கு நன்றி... TM 12

    ReplyDelete
  15. இன்றைய நிலையில் அனைவருக்கும் தேவையான விஷயத்தை
    மிக அருமையான பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 12

    ReplyDelete
  16. நல்ல தகவல்கள்...

    ReplyDelete
  17. சிறப்பான கருத்துக்கள். நடைமுறை படுத்தலில் தான் சற்று பின் தங்கியிருக்கிறோம்.

    ReplyDelete
  18. Thangal varugaikkum karuthuraikkum facebook pakirvukkum mikka nanri Sago.Rathnavel.

    ReplyDelete
  19. ////இந்த காலத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதற்கான சிறிய பட்டியல்///

    இந்தப் பட்டியலிலேயே எமது சவால்களின் தெறிப்புத் தெரிகிறது

    நன்றி சகோ...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

    நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

    சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

    ReplyDelete
  20. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.