Wednesday, December 28, 2011

அன்பினால் எல்லாம் நடக்கும்

செல்வந்தர் ஒருவர் விலை உயர்ந்த குதிரை ஒன்றை வாங்கினார். அழகாக இருந்த அதன் மீது சவாரி செய்ய விரும்பினார். ஒவ்வொரு முறை அவர் அந்தக் குதிரையில் அமரும்போதும் அது மேலும் கீழும் துள்ளிப் பாய்ந்து அவரைக் கீழே தள்ளியது. இப்படியே பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. அவரும் பலவித முயற்சிகள் செய்து பார்த்தார். ஏதும் பயன் விளையவில்லை.

ஏராளமான பொருள் கொட்டி வாங்கிய அழகிய குதிரையில் சவாரி செய்ய முடியவில்லையே என்று வருந்தினார் அவர். அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவரைச் சந்தித்த செல்வர் தன் சிக்கலை எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அவர் “ நீர் குதிரையுடன் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்? அதற்குத் தீனி வைக்கிறீரா? தண்ணீர் காட்டுகிறீரா? இல்லை அதன் உடலைத் தேய்த்து குளிப்பாட்டுகிறீரா? ” என்று கேட்டார்.

“ அதற்குத் தீனி வைப்பதும் குளிப்பாட்டுவதும் என் வேலையாட்களின் வேலை. சவாரி செய்ய மட்டும் நான் அதை வெளியே அழைத்து வருகிறேன். எதற்காகக் இதையெல்லாம் கேட்கிறீர்கள்? ” என்று கேட்டார் அந்த செல்வந்தர்.

“ நாளை முதல் அந்தக் குதிரையுடன் நீர் அதிக நேரத்தைச் செலவிடும். உம் கைகளாலேயே அதற்கு உணவு வையும். தண்ணீர் காட்டும். அதன் உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டும். உம் அன்பை அதனிடம் காட்டும். அதன் பிறகு பாரும். அன்பினால் எல்லாம் நடக்கும் “ என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் அந்த ஞானி.

அவர் சொன்னபடியே செய்தார் செல்வந்தர். அவர் அன்பில் திளைத்தது குதிரை. அதன் பிறகுதான் அந்த மாயம் நடந்தது.

அதன் பிறகு அந்தக் குதிரை அவர் சவாரி செய்யும்போது எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவரை மகிழ்ச்சியுடன் சுமந்து சென்றது குதிரை.





டிஸ்கி:

அரசாங்கப் பணி என்றாலே உங்களுக்குத் தெரியும். அதை விட நான் வேலை பார்க்கும் காவல்துறையைப் பற்றி கேட்கவே வேண்டாம். டிசம்பர் மாதம் வந்தாலே எனக்கு அலுவலகப் பணிகள் கழுத்தைப் பிடித்து விடும். பிசியான வேளைகளிலும் ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இட்டு வருகிறேன். ஜனவரியிலிருந்து மறுபடியும் எல்லா பதிவுகளுக்கும் வழக்கம் போல வந்து பின்னூட்டம் மற்றும் வாக்குகள் இடுவேன். ஆகவே அன்பர்கள் என்னுடைய வருகையின்மையையும் பின்னூட்டம் இடாமையையும் பொறுத்தருள வேண்டும்.




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

41 comments:

  1. அன்பினால் எல்லாம் நடக்கும்
    அருமையான உண்மையான கருத்து நன்றி .

    ReplyDelete
  2. நல்ல சிந்தனையை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்..

    உண்மை..

    ReplyDelete
  3. அன்பால் வளைந்த இதயம்!

    ReplyDelete
  4. நிச்சயமாகப் பொருத்திருக்கிறோம்
    அன்பினால் எல்லாம் நடக்கும்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  5. உண்மை.அன்பு மட்டுமே அனைத்து உயிரினங்களையும் வசப்படுத்தும் விஷயம்.

    ReplyDelete
  6. அன்பினால் எல்லாம் நடக்கும்..குதிரையை மையப்படுத்தி சொன்னவிதம் கதை அருமை..

    த.ம 4

    அன்போடு அழைக்கிறேன்..

    வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  7. அன்பிக்கும் உண்டோ அடைக்குந்தாள்...........

    புத்தாண்டு வாழ்த்துக்கள் ........
    இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

    ReplyDelete
  8. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என
    சும்மாவா சொன்னார்கள்.
    அன்பினால் அனைத்தும் பெறலாம்.
    அருமையான கருத்துரை நண்பரே.

    ReplyDelete
  9. @ Guna thamhzh

    Varugaikkum pakirvukkum Nanri Munaivare!

    ReplyDelete
  10. டானியல் உங்கள் அன்புக்கு நன்றி.பிறக்கும் புதுவருடம் இனித்தபடி பிறக்கட்டும்.வாருங்கள் அமைதியாக காத்திருப்போம் !

    ReplyDelete
  11. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. பல பணக்கார வீடுகளில் குழந்தைகள் பெற்றோரைவிடவும் ஆயாக்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள். ஐந்தறிவுள்ள குதிரையே இப்படி என்றால் குழந்தைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? அன்பின் மகத்துவம் புரிய வைக்கும் கதை அற்புதம்.

    பணிச்சுமை குறைந்தபின்னரான வருகையை மகிழ்வோடு வரவேற்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அருமையான சிந்தனை நண்பரே

    த.ம 9

    ReplyDelete
  14. இன்று நமது தளத்தில்

    ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  15. அன்பினால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. அடை உணரவைத்த உங்கள் பதிவு சூப்பர். முகமறியாவிட்டலும் இனம்புரியா அன்பால் இணைந்தவர்கள் நாம்(பதிவுலகத்தார்). இதுல் ஓட்டுக்கும், கருத்துரைக்கும் அவசியமில்லை. பணிச்சுமை குறைந்தப்பின்னே வாருங்கள் சகோதரரே

    ReplyDelete
  16. @ Ramani

    Varugaikkum pakirvukkum Puththandu vaalthukkum mikka Nanri Sir!

    ReplyDelete
  17. @ Enakku pidithavai

    Thangal muthal varugaikkum pakirvukkum mikka Nanri. Thangal thalathukku vanthachu.

    ReplyDelete
  18. @ Rathnavel

    Thodar varugaikkum pakirvukkum aatharavukkum mikka Nanri Sir.

    ReplyDelete
  19. @ Geetha

    Thangalin thodar varugaikkum aatharavukkum mikka Nanri Sago.

    ReplyDelete
  20. @ Nandu @ Norandu

    Thangalin thodar varugaikkum aatharavukkum en ithayam kanintha Nanri Sir!

    ReplyDelete
  21. @ Raji

    Varugaikkum arumaiyana pakirvukkum mikka Nanri Sago.

    ReplyDelete
  22. அன்பினால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை துரை. அழகான கதையின் மூலம் சொல்லியிருந்திர்கள். (காவல்துறை நண்பர் நீங்கன்ற செய்தி எனக்குப் புதுசு) தங்கச்சி ராஜி சொன்ன மாதிரி அன்பால இணைஞ்ச நாங்க பொறுத்திருப்போம் உங்களுக்காக. பிறக்கப்போற புதுவருஷம் உங்களுக்கு நல்லதையே வழங்கட்டும்னு வாழ்த்தறேன்.

    ReplyDelete
  23. @ Vedanthangal Karun

    Varugaikkum Pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  24. அழகிய கதை ... அன்பின் அடர்த்தியை உணர்த்துகிறது ...
    வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  25. நல்ல கதை. மிகவும் விரும்பிப் படித்தேன். தொழில் தான் சார் முக்கியம்! கவனியுங்கள். தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி சார்!
    என் வலையில் :
    "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

    ReplyDelete
  26. நீங்க பொறுமையா வாங்க தல.........

    ReplyDelete
  27. @ Arasan

    Thangal muthal varugaikkum pakirvukkum mikka Nanri Sago.

    ReplyDelete
  28. @ Dindgul Dhanabalan

    Thangal varugaikkum pakirvukkum Nanri Sir. Thangal thalathukkum thodarnthu varukiren.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.