Monday, December 5, 2011

சந்தைக்கு வந்த பூக்கள்

(என்னைப் பாதித்த ஒரு இளைஞனின் வாழ்க்கையினால் இக்கவிதைப்பூ மலர்ந்தது. அந்த இளைஞனின் மனோநிலையிலிருந்து எழுதினேன்.. மாற்றம் வந்தால் சரி.)




மாலினிக்கு நாலு வருஷம்
மாலாவுக்கு அஞ்சு வருஷம்
கோமதிக்கு கொஞ்சம் அதிகம்
ஏழு வருஷம்
கொடுத்து கொடுத்து
வேய்ந்த கூரையில்
பிய்ந்த ஓலைகளாய்
பாதி வாழ்க்கை முடிந்தாயிற்று
நான் பூத்த கருப்பையில்
என்னுடன் பூத்த
பெண் பூக்கள் மூன்று

முதிர்வடைந்து
பூச்சந்தைக்கு வந்தாச்சு
விற்பனைதான் நடக்கவில்லை

துணைப்பூக்களைத் தேடுகிறேன்
அவைகளுக்கல்ல
எனக்கு

அவைகளின் நிலைமை?

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்.
***

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

22 comments:

  1. நிறைய இளைஞர்கள் இந்த நிலைமையில் உள்ளனர்...

    ReplyDelete
  2. நான் பூத்த கருப்பையில்
    என்னுடன் பூத்த
    பெண் பூக்கள் மூன்று..

    manathai nekizhachc cheikirathu kavithai..

    ReplyDelete
  3. //நான் பூத்த கருப்பையில்
    என்னுடன் பூத்த
    பெண் பூக்கள் மூன்று

    முதிர்வடைந்து
    பூச்சந்தைக்கு வந்தாச்சு
    விற்பனைதான் நடக்கவில்லை//


    மனவலி தரும் கவிதை வரிகள்!
    மறக்க இலாத துயர வரிகள்!

    அருமை! அருமை!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. அவைகளின் நிலைமை?

    மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்.
    >>>
    ஓ ஓ ஓ. அப்படியா சகோ. அப்போ நீங்க மட்டும் ஏன் உங்களுக்கான துணை தேடுறீங்க.

    ReplyDelete
  5. அவலத்தை அருமையாய் கவிதையாக்கி இருக்கிறீர்கள்.நன்று.

    ReplyDelete
  6. வேதனை தான் நண்பரே

    தமிழ்மணம் 6

    ReplyDelete
  7. Sago. Raji. Antha ilaignan nan alla. Appadi vaalgira nanbarkal maara vendum. Atharku than eluthinen. Pls understand the poem. Varugaikkum pakirvukkum nanri Sago. Raji.

    ReplyDelete
  8. வேதனை தான் நண்பரே... வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. இப்படி எங்களுக்குள் நிறைந்த பூக்கள் பூத்தும் பூக்காமல்.கவிதை கனக்கிறது டானியல் !

    ReplyDelete
  10. Thangal varugaikkum pakirvukkum nanri Sago.Rathnavel.

    ReplyDelete
  11. Varugaikkum pakirvukkum nanri Sago.Nandu @ Norandu.

    ReplyDelete
  12. Varugaikkum pakirvukkum nanri Sago. Munaivar R.GUNASEELAN.

    ReplyDelete
  13. Varugaikkum pakirvukkum nanri Sago. Vedanthangal Karun.

    ReplyDelete
  14. Thangal varugaikkum arumaiyana karuthuraikkum mikka nanri ayya Pulavar Ramanujam avarkale!

    ReplyDelete
  15. வேதனையான யதார்த்தம்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.