Monday, December 19, 2011

பதிவர் சங்கம் தேவையா?

பதிவர் சங்கம் தேவையா
கேட்கிறது ஒரு கூட்டம்

தங்கத்தையும்
சங்கத்தையும்
நிறுக்கும் தராசின் முள்

சங்கம் பக்கமே சாயும்
என்பதை உலகறியும்

போரில்லா காலங்களில்
போராயுதங்களுக்கு அவசியமில்லைதான்

ஆனால்
போர் வந்துவிட்டால்.....
என்பதுதான் எங்கள் கேள்வி

ஊறுகாய் கெட்டுவிடவா போகிறது
என்கிறீர்கள் நீங்கள்

சாப்பாடே கெட்டுவிட்டால்.....
என்பதுதான் எங்கள் கேள்வி

பல்லக்கை
முன்னெடுத்து செல்கிறார்
புலவர் ஒருவர்

பாதையெங்கும் முள்ளெடுத்து
தூவுகிறீர்கள் நீங்கள்

விதைகளையெல்லாம்
அழிக்கிற கூட்டம் ஒன்று
காலம்தோறும்
இருக்கிறதால்தான்

பல சரித்திரங்களும்
சமாதிகளாயின

கருவிலிருக்கும்போதே
கழுத்தை நெறிக்காதீர்கள்

வளரட்டும் அவன்
அப்போது
மோதிப்பாருங்கள் !.....
.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

23 comments:

  1. சங்கம் பற்றிய தேவையை உணர்த்தும் கவிதை...அருமை

    ReplyDelete
  2. காட்டமான கேள்வி...

    வெற்றி நடைபோடுவோம்

    ReplyDelete
  3. சொல்ல வேண்டிய அனைத்தையும் உங்கள் கவிதையே சொல்லிவிட்டது துரை. வழிமொழிகிறேன்...

    ReplyDelete
  4. தமிழ்வாசி பிரகாஷ் said //சங்கம் பற்றிய தேவையை உணர்த்தும் கவிதை...அருமை //

    - நன்றி சகோ. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  5. கவிதைவீதி சௌந்தர் said //காட்டமான கேள்வி...

    வெற்றி நடைபோடுவோம் //

    - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  6. ஊறுகாய் கெட்டுவிடவா போகிறது
    என்கிறீர்கள் நீங்கள்

    சாப்பாடே கெட்டுவிட்டால்.....
    என்பதுதான் எங்கள் கேள்வி//

    அசத்தலான உவமைகள்..

    ReplyDelete
  7. அழகான கவிதை
    சிலரின் குழப்பங்களுக்கு பதில் சொல்லிப் போகும்
    அருமையான கவிதையும் கூட
    வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  8. கணேஷ் said //சொல்ல வேண்டிய அனைத்தையும் உங்கள் கவிதையே சொல்லிவிட்டது துரை. வழிமொழிகிறேன்... //

    - தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  9. Ramani said //அழகான கவிதை
    சிலரின் குழப்பங்களுக்கு பதில் சொல்லிப் போகும்
    அருமையான கவிதையும் கூட
    வாழ்த்துக்கள்.//

    - தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  10. ஆரம்பத்திலேயே உற்சாகமாய் இருப்பது நல்லது.நல்லதொரு கவிதை டானியல் !

    ReplyDelete
  11. சரியான வார்த்தைகளில் சங்கத்தின் அவசியத்தை உணர்த்திவிட்டீர்கள்.நன்று

    ReplyDelete
  12. வயதான எனக்கு ஊன்றுகோல் ஆனீர்
    நன்றி! துரை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. @ Pulavar Ramanujam

    Ayya! Enrum ungal thunai nirpom. Munainthu Seyalpadungal ayya.

    Varugaikkum pakirvukkum Nanri Ayya.

    ReplyDelete
  14. @ சென்னைப் பித்தன்

    நன்றி சார்.தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்.

    ReplyDelete
  15. @ Rathnavel

    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  16. @ Ravikumar Tirupur

    தங்களது முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  17. வேடந்தாங்கல் கருன் said

    //ஊறுகாய் கெட்டுவிடவா போகிறது
    என்கிறீர்கள் நீங்கள்

    சாப்பாடே கெட்டுவிட்டால்.....
    என்பதுதான் எங்கள் கேள்வி//

    அசத்தலான உவமைகள்.. //


    - நன்றி சகோ.தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.