Friday, January 27, 2012

தினமும் ஒரு வாழைப்பழம் போதும் - ஆரோக்கியமாக வாழ.
‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழலாம்’ என்ற பொன்மொழியை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் ‘தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்’ என்பதுதான் இன்றைய நவீன பொன்மொழியாகும். வாழைப்பழம் அநேக வியாதிகளுக்கு தீர்வு தரும் ஒரு இயற்கை பொக்கிஷமாகும். உணவுச் சத்துக்கள் நிரம்பிய உணவுகளில் வாழைப்பழம் தலைமை வகிக்க தகுதியான அளவுக்கு போஷாக்கு சத்துக்கள் நிரம்பியதாக (Nutrional Value) உள்ளது. ஆப்பிளோடு ஒப்பிட்டால் வாழைப்பழம் நான்கு மடங்கு புரோட்டினும், இரண்டு மடங்கு கார்போஹைட்ரேட்டும், மூன்று மடங்கு பாஸ்பரஸ் சத்தும், ஐந்து மடங்கு விட்டமின் ஏ (Vitamin A) உயிர்ச்சத்தும், ஐந்து மடங்கு இரும்புச் சத்தும், மேலும் பல உயிர்ச்சத்துக்களும் (Minerals and Vitamins) அதிகம் கொண்டதாக அமைந்துள்ளது.

இப்போது சொல்லுங்கள். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டுமா? அல்லது வாழைப்பழம் சாப்பிட வேண்டுமா?

இயற்கையான சர்க்கரைகளான Sucrose, Fructose மற்றும் Glucose ஆகியவை வாழைப்பழத்தில் நிறைந்துள்ளன. சர்க்கரையைத் தவிர்த்து வாழைப்பழம் சாப்பிடலாமே. வாழைப்பழம் வெறும் சக்தியூட்டும் பழம் மட்டுமல்ல. அது ஏராளமான வியாதிகளிலிருந்தும் நம்மைக் காக்கிற ஒன்றாய் இருக்கிறது. அது நிச்சயம் நமது அன்றாட உணவில் இடம்பெற வேண்டும்.

ஒரு உலகளாவிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ஐம்பது சதவீதம் மாரடைப்பு வரும் அபாயம் குறைவு என்று. ஆஹா.... என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி. இல்லையா? மாரடைப்பு அபாயம் உள்ளவர்களும் இப்போதே வாழைப்பழம் சாப்பிட ஆரம்பித்து விடுங்கள்!. வாழைப்பழத்தில் மற்ற பழங்களைவிட அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. ஆகவே இரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது. அப்பாடா பிரஷர் உள்ளவர்களுக்கு இனி நிம்மதிதான். இயற்கை வழியில் ஒரு அருமை மருந்து. இல்லையா?.

மேலும் பொட்டாசியமானது நம்முடைய மூளையை பராமரிக்கவும் உதவுகிறது. சிதைந்து போன மூளை செல்களையும் பழுதுபார்க்கிறது. ஒரு ஆராய்ச்சி இவ்வாறு தெரிவிக்கிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கிறது என்று. (குட்டீஸ்க்கு இப்பவே நல்லா வாழைப்பழம் கொடுக் ஆரம்பித்துவிடுங்கள்).


நம்முடைய இரத்த அணுக்கள் (வெள்ளை மற்றும் சிவப்பு) நிறைந்த இரத்த தட்டுகள், குடல், நரம்பு மண்டல ஆகியவற்றில் உள்ள திசுக்களில் காணப்படும் செராடோனின் (Serotonin) என்கிற கூட்டுப்பொருள்தான் டென்ஷனான நேரங்களில் நம்முடைய மூளையை அமைதியாக வைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செராடோனின் உற்பத்தியாவதற்கு காரணமாக ட்ரைப்டோபான் (Tryptophan) என்கிற அமினோ அமிலம் (Amino Acid) உள்ளது. இந்த ட்ரைப்டோபான் வாழைப்பழத்தில் ஏராளம் உள்ளது. ஆகவே டென்ஷன் வரும் நேரத்தில் நீங்கள் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் டென்ஷன் குறைகிறது. அதற்காக நீங்கள் நாள் முழுவதும் கோபம் கொள்கிற டென்ஷன் பார்ட்டியாக இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாது. அப்புறம் குண்டுகல்யாணம் சைஸ்க்கு மாறிப்போய்விடுவீர்கள். பார்த்துங்க பார்த்து!.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நமக்கு மனநோயோ என்று பயப்படுபவர்கள் (ஹி...ஹி) தாராளமாக வாழைப்பழம் பயன்படுத்தி குணம் பெறுங்கள்.
வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன மாதிரியான வியாதிகளை சரிப்படுத்தலாம் என்று கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்:-


1. வயிற்றுக்கோளாறு:

ஆம். தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உங்கள் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். வாழைப்பழமும் சுத்தமான தேனும் கலந்து சாப்பிட்டால் வயிறு அமைதியாக வாழும்.

2. மாதவிலக்கு கோளாறுகள்:

பெண்களுக்கு: மாதவிலக்கு தள்ளிப்போதல் மற்றும் அது சம்பந்தமான மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் (especially :- Premenstrual Syndrome) தாராளமாக வாழைப்பழம் சாப்பிடுங்கள். எப்படியெனில் வாழைப்பழத்தில் பி6 விட்டமின் (Vitamin B6) நிறைய உள்ளது. அது இரத்தத்தில் சர்க்கரை அளவையும் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் (Sugar Patients) கவனிச்சுக்கோங்க.

3. மனஅழுத்தம்:

மன அழுத்தத்தின் போது பொட்டாசியம் சத்துக் குறைபாடுதான் பெரும் பங்கு வகிக்கிறது. அதுதான் நம்முடைய இதயத்துடிப்பையும், மூளையையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உடம்பிலுள்ள நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிரம்ப உள்ளது. ஆகவே மனஅழுத்தத்துக்குள்ளாகுபவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.

4. இரத்த சிவப்பணுக்கள் குறைபாடு:

வாழைப்பழத்தில் இரும்புச் சத்து ஏராளம் இருப்பதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் (hemoglobin) உற்பத்திக்கு காரணமாகிறது. ஆகவே இரத்த சிவப்பணுக் குறைபாடுகளை சரி செய்கிறது.

5. சிகரட் பழக்கம் நிறுத்துதல்:

நீங்கள் சிகரெட் பிடிப்பவர்களாக இருந்தால் இந்த நிமிடத்திலேயே சிகரெட்டை தூக்கி எறிந்துவிட்டு சிகரெட் பிடிக்க விருப்பம் வரும்போதெல்லாம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள் (நிறுத்தும் வரை மட்டுமே மக்காஸ்... அப்புறம் தினமும் இரண்டு போதும்!) ஏனெனில் இந்த வாழைப்பழ பத்தியம் உங்களுக்கு சிகரெட் பிடிக்கும் எண்ணத்தை அறவே நிறுத்திவிடுகிறது. மேலும் வாழைப்பழத்திலுள்ள விட்டமின் பி6 மற்றும் பி12, பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய சத்துக்ககள் நிகோட்டினின் சக்தியை உள்வாங்கி அதனுடைய தீய தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கும் பணியைச் செய்யும். பழைய உடல் நலத்தை மீட்டுத் தரவும் உதவும்.

6. அல்சர்:

நிறைய மருத்துவமனைகளில் அல்சர் நோயாளிகளுக்கு வாழைப்பழம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. வயிற்றில் சுரக்கும் அமிலங்களை சமநிலைப் படுத்துவதால் இது பரிந்துரைக்கப்படுகிறது. குடல் கோளாறுகளுக்கு இது அருமையான மருந்து.

7. வெப்பநிலை கட்டுப்பாடு:

உலகில் வெப்பமான நாடுகளில் மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்களை தாராளமாக வாழைப்பழம் சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். காரணம் வாழைப்பழம் நம்முடைய உடல் வெப்பநிலையை சமநிலைப் படுத்தும் பணியை பிரமாதமாகச் செய்கிறது. ஆகவே குழந்தை பிறக்கும் போது அது கூலா பிறக்கும். அட.....அட....என்னன்னு சொல்ல....போங்க!.

8. பூச்சிக்கடிகள்:

மேலும் பூச்சிகள் கடிக்கும் போது வாழைப்பழத் தோலை உரித்து கடிபட்ட இடங்களில் தேய்த்தால் வீக்கத்தையும் காயத்தையும் குறைக்கும் என ஒரு மருத்துவ குறிப்பு தெரிவிக்கிறது. வாழைப்பழத்தின் மகிமையைப் பார்த்திங்களா?!....ஓ.கே.

இவ்வளவு நேரம் கட்டுரையை வாசிச்சி முடிச்சாச்சா? சரி. இனியாவது தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. நோய்களை ஓட ஓட விரட்டுங்க. ஆரோக்கியமாக வாழுங்க!.

வாழ்க நலமுடன்!

.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

13 comments:

 1. நல்ல பகிர்வு பாஸ்

  ReplyDelete
 2. வாழைப் மலச்சிக்கலை நீக்கும் என்றும்
  சொல்வார்கள்

  சா இராமாநுசம்

  ReplyDelete
 3. 3. மனஅழுத்தம்:

  மன அழுத்தத்தின் போது பொட்டாசியம் சத்துக் குறைபாடுதான் பெரும் பங்கு வகிக்கிறது. அதுதான் நம்முடைய இதயத்துடிப்பையும், மூளையையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உடம்பிலுள்ள நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிரம்ப உள்ளது. ஆகவே மனஅழுத்தத்துக்குள்ளாகுபவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.

  இதுதான் இன்று எல்லோருக்கும் கண்டிப்பாக தேவையான ஒன்று......... நல்ல பயனுள்ள பகிர்வு .நன்றி.

  ta.ma3

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு... பெரும்பாலும் வடக்கில் தினமும் வாழைப்பழம் உண்பதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறார்கள்... ஆனால் இங்கே ஒரே ஒரு வகை பழம் மட்டுமே கிடைக்கும்....

  ReplyDelete
 5. ம்...நல்லதொரு மருத்துவப் பதிவு.வாழப்பழத்தை மூலிகை மருத்துவகுணம் கொண்டது என்றே ஆங்கில மருத்துவர்கள்கூடச் சொல்கிறார்கள் !

  ReplyDelete
 6. வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. ஆனால் வாழைப் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததல்ல. மற்ற அனைவரும் சாப்பிடுவது மிக நல்லதுதான். நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 7. நல்ல பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 8. @ இடிமுழக்கம்
  @ வெங்கட் நாகராஜ்
  @ ஹேமா
  @ கணேஷ்
  @ ஹாஜாமைதீன்
  @ வஞ்சூர்
  @ ரத்னவேல்

  வருகை தந்து வாக்களித்து பின்னூட்டமிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

  ReplyDelete
 9. உங்கள் பதிவுகளை எல்லாம் பார்க்கும் போது
  என் மனதில் தோன்றியதை ... அப்படியே சொல்கிறேன் ..
  பள்ளியில் ஆசிரியர் நம் நோட் இல் இடுவார்களே .....
  அது போல் ... நீட் & குட் !
  படங்கள் எல்லாம் எங்கிருந்து இப்படி க்ளோஸ்-up இல்
  கிடைக்கிறதோ ? கலர்புல்லா அழகா இருக்கு.
  பதிவில் இட்ட தகவல்களும் மிக மிக அருமை.
  ஒன்றும் வேண்டாம் சார் .... நம் இந்திய பழங்கள் & மூலிகைகளை
  மதித்து வாழ்ந்தாலே போதும் .
  பயனுள்ள பகிர்விற்கு மிக்க நன்றி.

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.