Monday, April 16, 2012

நக்கல் பிடித்த நாரைகள்

நீண்டு கிடந்தது
அந்தக் குளம்
தார்ச்சாலைபோல்

ஆரம்பித்தது அந்த
கொக்குகளின் மாநாடு

நீரருந்த அனுமதிக்கக் கூடாது
நாரைகளை
சொன்னது தலைவர் கொக்கு

குடிக்க என்ன
குளிக்கவே விடக்கூடாது
குமுறியது
ஒரு
வாலிபக் கொக்கு

ஏன் இப்படி எதனால்
வினவியது
புதிதாய் குடியேறிய
கொக்கு ஒன்று

மீன்களின் எண்ணிக்கை
குறைந்துகொண்டே போகிறது
இந்த
நாரைகளின் வரவுக்குப் பின்

அதுபோக
இந்த
மீனவர்களின் தொல்லைவேறு
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
தினந்தோறும்

ஆகவேதான்
இந்த
கட்டுப்பாடு
வேறு வழியில்லை
அந்நியர்களை
இனியும் அனுமதிக்க மாட்டோம்
சொன்னது நாட்டாமை

இன்னும் சிலபல
தீர்மான நிறைவேற்றலுக்குப் பின்
ஓய்ந்தது மாநாடு

சில நாட்களில்....
ஊர்ச்சண்டையில்
ஒரு விஷமக்கும்பலின்
கைவேலையால்
விஷமானது
ஊர்க்குளம்

சிதறிய தேங்காய்ச்சில்களாய்
மிதந்தன மீன்களெல்லாம்...
முதலுக்கே மோசம் வந்ததால்
குடியிருப்பை நகர்த்தின
கொக்குகளெல்லாம்

விழுந்து விழுந்து
சிரித்தன
நக்கல் பிடித்த
நாரைகள்.


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

27 comments:

 1. தலைப்பின் சூடு.......ம்.

  அரசியல் நெடியும் கலந்த கவி.... செம செம

  படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ம்ம்ம் நல்லா இருக்கு சார்

  ReplyDelete
 3. மறைபொருளாய் எதையோ உணர்த்தும் குறியீட்டுக் கவிதை. நன்று துரை.

  ReplyDelete
 4. Hayoo! கவிதைல ஏதொ இருக்குன்னு மட்டும் தெரியுது. என் சிறுமூளைக்கு வேற ஒண்ணும் புரியலை Brother... What to do?

  ReplyDelete
 5. நாட்டு நடப்பை நாரைகளின் வாழ்க்கையாக சித்தரித்து எழுதிய கவிதை அருமை!

  ReplyDelete
 6. எதுவுமே யாருக்குமே சொந்தமில்லை என்பதை
  நன்றாக உணர்த்தியது உங்கள் கவிதை.

  ReplyDelete
 7. யதார்த்தை முகத்திலடித்தாற் போல் சொல்லும் சொல்லும் கவிதை அருமை

  ReplyDelete
 8. இண்ட்லி, தமிழ்10ல இணைத்துவிட்டேன் அண்ணா.

  ReplyDelete
 9. @ மௌனகுரு

  - கவிதை மாதிரி இல்லையோ? கதையை கவிதையாக சொல்லும் முயற்சிதான் சகோ இது. இன்றைய அரசியலை வைத்து எழுதினேன்.

  ReplyDelete
 10. @ மனசாட்சி

  - தொடரும் ஆதரவிற்கு நன்றி.

  ReplyDelete
 11. @ செய்தாலி

  - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 12. @ கணேஷ்

  - உண்மைதான். நேரடியாக இக்கவிதையை அணுகாமல் குறியீடாக நோக்கினால் படிமம் விளங்கும்.

  ReplyDelete
 13. @ நிரஞ்சனா

  - இன்றைய அரசியலை வைத்து எழுதியுள்ளேன். நிறைய பிரச்சினை மேட்ச் பண்ணலாம் இதில். உதாரணத்துக்கு காவிரி பிரச்சினை. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 14. @ Koodal Bala

  - வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 15. @ Arouna Selvame

  - உண்மைதான். நிலையில்லாத உலகம். நிலையில்லாத வாழ்க்கை. வாழும்வரை நிம்மதியோடு வாழ வேண்டும். உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரவமாவது செய்யாமல் இருக்கவேண்டும். வருகைக்கும கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 16. @ ராஜி

  வருகைக்கும் கருத்துரைகக்கும் திரட்டிகளில் இணைத்ததற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 17. @ வெங்கட் நாகராஜ்

  - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 18. நான் நினைக்கிறேன் அரசியல் சாடல் கொக்குகள் வடிவத்தில் !

  ReplyDelete
 19. உள்குத்தா தலைவரே! ஹிஹி! சும்மா கேட்டேன்.....

  ReplyDelete
 20. கவிதை நல்லாயிருக்கங்கோ!

  ReplyDelete
 21. சிதறிய தேங்காய்ச்சில்களாய்
  மிதந்தன மீன்களெல்லாம்...
  முதலுக்கே மோசம் வந்ததால்
  குடியிருப்பை நகர்த்தின
  கொக்குகளெல்லாம்

  வார்த்தை ஜாலம் மிகவும் அருமைங்க .tha.ma.8.

  ReplyDelete
 22. @ ஹேமா

  - ஆம் சகோ. உங்க யூகம் சரிதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 23. @ சசிகலா

  - பாராட்டுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 24. @ Rathnavel Natarajan

  - நன்றி சார்.

  ReplyDelete
 25. படம் பார்த்துக் கவிதை தந்த உங்களுக்கு உப்புமடச்சந்தியில் விருது ஒன்று காத்திருக்கிறது.எடுத்துக்கொள்ளுங்கள் !

  http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post_17.html

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.