வெடிக்காத எரிமலையெல்லாம்
சரித்திரங்கள் ஆவதில்லை
துடிக்காத வீரனெல்லாம்
சகாப்தங்கள் ஆவதில்லை
படுக்கைக்கு கீழே
உன் இலட்சியங்களை
புதைத்துவிட்டு
சீற மறந்த நாகமாய்
சிரித்துக்கொண்டிக்கிற
என் இளவலே எழுந்திரு!
பாயைச் சுருட்டிப் போடு
பயத்தையும்தான்
தாலாட்டு கேட்டுக் கேட்டு
தூங்கியதெல்லாம் போதும்
பூபாளம் பாடு
காதலிக்கு கடிதம்
எழுதி எழுதியே
களைத்துப் போனவனே
இங்கே
யுத்தங்கள் உனக்காக
காத்துக்கொண்டிருக்கின்றன
ஒருத்திக்காக
உன் வாழ்வை
தொலைத்துவிடாதே
ஒருகோடி பெண்கள்
உனக்காக
காத்துக்கொண்டிருக்கிறார்கள்
நீ வீட்டுக்குருவி அல்ல
தேசக்கழுகு
தங்கைகளும் தாய்களும்
தவித்துக்கொண்டிருக்கையில்
காம நாடகம்
உனக்கெதற்கு
உன்
அகக்கண் திற
ஆயிரம் காட்சிகள் தரிசிப்பாய்
சாப்பிட்டுவிட்டு
செரிக்கப் போராடும்
ஒரு கூட்டம்
சாப்பிட சோறுகேட்டு
போராடும்
மறுகூட்டம்
வேலை கேட்கும்
ஒரு கூட்டம்
மானம் கேட்கும்
மறு கூட்டம்
உன்னை விட்டால் யாருண்டு
ஏழ்மைப் பசிதீர்க்க
உன்னைத்தான் தேடுகிறான்
உலக ஏழை
புதிய புரட்சிப் போராட்டம்
இங்க தவம் செய்துகொண்டிருக்கிறது
உனக்காக
சிறு கூண்டுக்குள்
ஒடுங்கியவனே
உன் சிறகுகளில் உள்ளது
சூரியக் குஞ்சுகள் என்பதை
நீ அறியமாட்டாய்
பறக்கவிடு
அனைத்தையும்
பிரபஞ்சம் அதிரட்டும்
கடைசியாக...
நீ அழைக்கப்படுகிறாய்
வரலாற்றில் இடம்பெற அல்ல
புது வரலாறு எழுத...!
.
Tweet | |||||
ம்ம்ம்ம் நல்ல இருக்கு தோழரே
ReplyDeleteசிறு கூண்டுக்குள்
ReplyDeleteஒடுங்கியவனே
உன் சிறகுகளில் உள்ளது
சூரியக் குஞ்சுகள் என்பதை
நீ அறியமாட்டாய்//
வரிக்கு வரி உணர்வுகளை தட்டி எழுப்புகிறது மிகவும் அருமை .
அருமையான படைப்பு
ReplyDeleteவார்த்தைகளின் வீரியம் வசீகரிக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
arumai!
ReplyDeletearumai!
அருமையான கவிதை.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
@ அனைவருக்கும்
ReplyDelete- வருகை தந்து வாக்கிட்டு கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. முகநூலில் பகிர்ந்த ரத்னவேல் நடராஜன் சாருக்கு ஸ்பெசல் நன்றி.