1. செருப்புகளை தேர்ந்தெடுக்கும் போது அழகு மற்றும் அளவு ஆகியவற்றை பொருத்தமாக இருக்கும்படி கவனித்து வாங்க வேண்டும்.
2. செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டு நான்கைந்து அடி நடந்து பார்த்து
சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால்தான் வாங்க வேண்டும்.
3. அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது.
4. விலை குறைந்த செருப்புகளை விட விலை கூடுதல் என்றாலும் தரமான,பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும்.
5. தோல் செருப்புகளை தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைந்தால் செருப்பின் ஆயுள் குறையும். பாதங்களுக்கும் பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டுவிடும்.
6. தரையில் வழுக்காமல் ‘க்ரிப்’ உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். மேலும் அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் செருப்பு இருக்க வேண்டும்.
7. மழைக் காலத்தில் ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால் அது நடக்கும் போது வழுக்கி விடுவதுடன் துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும்.
8. இறுக்கமான செருப்புகளையோ, ஷுக்களையோ அணியக் கூடாது. அப்படி அணிந்தால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
9. பிளாஸ்டிக் செருப்புகளை விட தோல் செருப்புகளும், ஷுக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும். மேலும் அதிக வியர்வையும் தோன்றும். எனவே பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நலம்.
10. செருப்பு, ஷுக்களுக்கு அடிக்கடி ‘பாலீஷ்’ செய்ய வேண்டும். இதனால் செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும்போது செருப்பில் இருக்கும் ஈரத்தன்மையும் நீங்கி விடும்.
11. உங்களுக்கு செருப்பு வாங்குவதற்காக அளவைக் கொடுத்து இன்னொருவரை அனுப்பாதீர்கள். நீங்களே சென்று தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.
12. அடுத்தவர்களின் செருப்புகளை அணியக் கூடாது. இதனால் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
13. ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.
14. புதிதாக செருப்பு வாங்கி உபயோகப்படுத்தும் போது செருப்பு கடித்தால் அந்த இடத்தில் பூண்டு (அ) வெங்காயத்தை அரைத்து தேய்த்தால் குணம் உண்டாகும்.
.
Tweet | |||||
செருப்புதானேன்னு அலட்சியமா சொல்லும் செருப்பு வாங்கும்போது இவ்வளாவு கவனிக்கனுமா?!
ReplyDeleteமிகவும் பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteபஸ்ல வம்பு பண்றவங்களை அடிக்கறதுக்கு என்ன மாதிரி செப்பல் வாங்கணும் பிரதர்..? ஹி... ஹி...
ReplyDeleteஎன் செருப்பு பிஞ்சுபோய் புதுசு வாங்கறதா இருக்கற இந்த வேளையில் எனக்கு மிகப் பயன்தரும் பதிவாக இது அமைந்திருக்கிறது, நன்றி துரை.
ReplyDelete//மழைக் காலத்தில் ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது//
ReplyDeleteஅப்ப என்ன மாதிரி செருப்பு போடணும்னு சொல்லலையே.???
நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
மிகவும் பயனுள்ள பகிர்வு நண்பரே..
ReplyDeleteநுகர்வோர்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டியவை.
நன்றிகள் பல..
arumaiyaana thakaval!
ReplyDeleteசெருப்புக்கென்று ஒரு பதிவே போட்டாச்சு.அவ்வளவு விஷயம் இருக்கு !
ReplyDeleteபயனுள்ள பதிவு!
ReplyDeleteபூண்டு வெங்காயம் வைத்தியம் புதுசுதான்.
ReplyDeleteகல்யாண வீட்டுல செருப்பு எடுக்கும் பொழுது இதலாம் பார்க்க முடியல ...
ReplyDeleteஇன்று
ReplyDeleteஉங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்
பயனுள்ள பதிவு.
ReplyDeleteநன்றி.
@ ராஜி
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.
@ இராஜராஜேஸ்வரி
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@ நிரஞ்சனா
ReplyDelete- பஸ்ல வம்பு பண்றவங்களை செருப்பால அடிச்சா மட்டும் போதுமா?
முதல் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி.
@ கணேஷ்
ReplyDelete- அப்படியா சார்? உங்களுக்கு டிப்ஸ் கொடுக்க முயன்றதுலே எனக்கும் சந்தோஷம். நன்றி.
@ மனசாட்சி
ReplyDelete- மழைக்காலத்துல ரப்பர் செருப்பு போடலாம். கவனமா நடந்தா சரிதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@ Koodal Bala
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
@ மகேந்திரன்
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@ Seeni
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@ ஹேமா
ReplyDelete- வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.
@ வெங்கட் நாகராஜ்
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
@ ராஜ நடராஜன்
ReplyDelete- வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்.
@ என் ராஜபாட்டை ராஜா
ReplyDelete- கல்யாண வீட்டு செருப்பு தனி ட்ராக் ஆச்சே. அதுல Rules லாம் பார்க்க முடியுமா? (ஹி...ஹி..)
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.
@ Rathnavel Natarajan
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.
நல்ல பதிவு !
ReplyDeleteஇவ்வளவு விசஷயங்களா, பயனுள்ள பதிவு - நன்றி - nijam
ReplyDeleteஇவ்வளவு மேட்டரு இருக்கா.., இது தெரியாம நானு விலையை மட்டுமே பாத்து வாங்கிகிட்டு இருக்கேன் இவ்வளவு நாளா ..????
ReplyDeleteதேயும் செருப்புக்குத் தேயாத பதிவு!நன்று!
ReplyDeleteசா இராமாநுசம்
பயனுள்ள நல்ல தகவல்கள்.
ReplyDelete@ அனைத்து உள்ளங்களுக்கும்
ReplyDelete- வருகை தந்து வாக்கிட்டு கருத்துரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
தெரிஞ்சிக்க வேண்டியதுதான்.... நன்றி.
ReplyDelete