Wednesday, April 11, 2012

வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்...




1.கீரைகள், ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும் தன்மை கொண்டதால் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கப்படும்.

2.உடலில் அதிக வியர்வையுள்ள பகுதிகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி பவுடர் பூசிக் கொள்ள வேண்டும்.

3.நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

4.பாக்டீரியாக்களின் செயல்பாட்டை குறைக்க தினமும் இரவும் பகலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

5.உடலை மட்டும் சுத்தமாக வைத்தால் போதாது. உடையிலும் சுத்தம் தேவை. முக்கியமாக உள்ளாடைகள் அதிக சுத்தமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற சரும நோய்கள் ஏற்பட்டு அவ்விடங்களில் சிவந்தும் தடிப்பு ஏற்பட்டும் எரிச்சலை ஏற்படுத்தும்.

6.காட்டன், துணிவகைகள் வியர்வையை உறிஞ்சி எடுக்க ஏற்றவை. ஆதலால் பெரும்பாலும் காட்டன் துணிகளையே உடுத்துதல் நலம்.

7.மனதை எப்போதும் அமைதியாக வைத்திருங்கள். உணர்ச்சிகளை எப்பொழுதும் எல்லை மீற விடக் கூடாது.

8.பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பையே உபயோகிக்க வேண்டும்.

9.உள்ளங்கால் பகுதி சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவ்வாறானவர்கள் காற்று படும்படியான செருப்புகளையே அணிய வேண்டும். இறுக்கமான ஷுக்களை அணியக்கூடாது. ஷு அணியும் போது சாக்ஸ்களைத் தினமும் துவைத்து அணிய வேண்டும். பிளாஸ்டிக், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது.

10.கை, கால்களை சுத்தமான நீரால் சோப் உபயோகித்துக் கழுவி, சுத்தமான துண்டால் துடைத்து விரல்களுக்கிடையில் பவுடர் பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடல் நாற்றத்திலிருந்து விடுதலை பெறலாம்.




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

15 comments:

  1. அனைத்தும் பயனுள்ள குறிப்புகள் சார் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. அவசியம் சொல்லப்பட வேண்டிய ஆரோக்கியக் குறிப்புகள். நன்று. அதுசரி... பாக்டீரியாவை ஒழிக்கக் கூடிய சோப்பை உபயோகிக்கணுமா? அது எந்த சோப்புன்னு எப்படி துரை கண்டுபிடிக்கிறது?

    ReplyDelete
  3. வெயில்காலத்துக்கு ஏற்றத் தேவையானக் குறிப்புகள். பகிர்வுக்கு மிகவும் நன்றி துரைடேனியல்.

    ReplyDelete
  4. பாசத்துடன் வழங்கிய சீசன் குறிப்புகள் நன்று.

    ReplyDelete
  5. அவசியம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய
    தகவல்கள் அடங்கிய பதிவினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. பயனுள்ள குறிப்புகள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. அவசியம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய
    தகவல்கள் அடங்கிய பதிவினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. //அவசியம் சொல்லப்பட வேண்டிய ஆரோக்கியக் குறிப்புகள் நன்று. அதுசரி... பாக்டீரியாவை ஒழிக்கக் கூடிய சோப்பை உபயோகிக்கணுமா? அது எந்த சோப்புன்னு எப்படி துரை கண்டுபிடிக்கிறது? //

    சொல்வேன்!ஆனால் உங்கள் நகைச்சுவைக்குள் திணிக்க கூடாது சரியா:)

    1. ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைபாய்...

    2. முன்பெல்லாம் டெட்டாலை பாக்டீரியா ஒழிக்கத்தான் உபயோகப்படுத்துவாங்க.இப்ப டெட்டால் சோப்பே கிடைக்குது.

    என்னைக்கேட்டா தண்ணீர் பஞ்சத்துக்கு தமிழ்நாட்டுல குளிக்கவே கூடாது:)

    ReplyDelete
  9. @ Wesmob
    @ மோகன்குமார்
    @ கணேஷ்
    @ கீதமஞ்சரி
    @ கே.பி.ஜனா
    @ ரமணி
    @ சசிகலா
    @ ராஜநடராஜன்

    - வருகை தந்து வாக்கிட்டு கருத்துரையிட்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  10. @ கணேஷ்

    - சார் உங்க கேள்விக்கு ராஜநடராஜன் சாரோட கருத்துரையில் பதில் இருக்குது. என் வேலை மிச்சம். தாமத பதிலுக்கு ஸாரி...!

    ReplyDelete
  11. உபயோகமான பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  12. வெயில் காலத்திற்க்கேற்ற விபரமான பதிவு.நன்றி சார்.

    ReplyDelete
  13. வெயில் காலத்திற்க்கேற்ற விபரமான பதிவு.நன்றி சார்.

    ReplyDelete
  14. பயனுள்ள தகவல் பலருக்கும் பயன்படும் நன்றி நண்பரே

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.