Tuesday, April 3, 2012

நான் அவனை எடுத்துக் கொள்ளட்டுமா?


டேவிட் ரோபர் என்ற அறிஞர் கல்லூரியில் படிக்கும்போது அவரோடு ஒரு இளைஞன் படித்தான். அவன் திருமணமானவன். அந்த ஆண்டு இரண்டு சோகங்கள் அவனைத் தாக்கியது. ஒன்று அவனது மகன் இறந்தான். ஒரு சில மாதங்களில் அவனது மனைவியும் புத்தி பேதலித்து இறந்துவிட்டாள். அதிலிருந்து இவனும் சோகமயமாகவே காட்சியளித்தான்.

இந்த நிலையில், ஒருநாள் நண்பர்கள் இருவரும் சாலையில் பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தனர். அங்கே ஒரு இடத்தில் சாலையோரம் ஒரு நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அழுதுகொண்டிருந்தான். அவனுடைய தாய் அவனை அதட்டிக் கொண்டிருந்தாள்.

நண்பர்கள் இருவரும் அதைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். அந்தப் பையன் கடையில் ஏதோ வாங்கித் தரக் கேட்டு அடம்பிடித்தான். அவனது தாயோ முதலில் சாதாரணமாக சத்தம் போட்டுக்கொண்டிருந்தவள் பிறகு அவனது பிடிவாதம் கண்டு சபிக்க ஆரம்பித்தாள். கெட்ட வார்த்தைகள் கொண்டு ஏசத் தொடங்கினாள். பின்னும் அவன் பிடிவாதம் பிடிக்கவே இழுத்துப் போட்டு உதைக்கத் தொடங்கினாள்.

டேவிட் ரோபரது நண்பர் திடீரென அந்த சிறுவனது அருகே சென்று அவனைத் தூக்கி கையில் வைத்துக் கொண்டார். அவன் கண்ணீரைத் துடைத்து அவனுக்கு முத்தஞ் செய்து கடைக்கு கூட்டிப் போய் அவன் கேட்ட அந்தப் பண்டத்தை வாங்கிக் கொடுத்து பின்னர் அவனை அவனது தாயருகே கொண்டு வந்து இப்படிக் கேட்டார். “நீங்கள் இவனை விரும்ப வில்லை என்றால் சொல்லி விடுங்கள். நான் இவனைக் கொண்டு போய் வளர்க்கிறேன். சொல்லுங்கள். அவனை நான் எடுத்துக் கொள்ளட்டுமா?” கேள்வி கேட்டதும்தான் தாமதம். அவள் அழத் துவங்கினாள். அழுது கொண்டே இருந்தாள்.

வெகுநேரம் கழித்து அவள் அழுது முடித்தபிறகு, நண்பர் மறுபடியும் அந்தப் பையனை அவளிடம் கொடுத்த போது அவள் கண்கள் தெளிவாகியிருந்தன. கையெடுத்துக் கும்பிட்டாள். எதையோ புரிந்துகொண்ட உணர்வு தெரிந்தது அந்தக் கண்களில்.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

8 comments:

  1. உருக்கமான நிகழ்ச்சி!

    ReplyDelete
  2. மனதைத் தொட்ட நிகழ்ச்சி.... நீங்கள் படித்ததை எங்களுக்கும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பரே....

    ReplyDelete
  3. தாய் பாசத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம்.

    ReplyDelete
  4. ஏழ்மை அவள் பாசத்தை வெளிப்படுத்த முடியாமல் பண்ணிடுச்சு என்பதே உண்மை. பகிர்வுக்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
  5. பாசத்தை வெளிப்படுத்தக்கூட பணம் வேண்டுமோ?

    ReplyDelete
  6. நான் நினைத்ததை தங்கை ராஜி மேலே சொல்லி விட்டதால் உங்களுக்கு நனறி கூறி விடைபெறுகிறேன்.

    ReplyDelete
  7. அம்மாவைத் தேடி ஓடுகிறது மனம்.அம்மா மணம் நாசியில் !

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.