அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் (Parasympathetic Nervous System) அழுகையின் போது அசைக்கப்படுகிறது.
இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது. மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது. மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது. இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள்.
ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்குது பார்த்தீங்களா? அது பெரிய விஷயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு உடல்ரீதியான அமைப்பே காரணமாக இருக்கிறது. ஆண் செக்ஸ் ஹார்மோனான Testosterone கண்ணீர்ச்சுரப்பிகளை டிஸ்டர்ப் பண்ணுவதைக் காட்டிலும் பெண் செக்ஸ் ஹார்மோனான Prolactin கண்ணீர்ச் சுரப்பிகளை அதிகம் டிஸ்டர்ப் பண்ணுவதுதான். அது தவிர பெண்கள் இயல்பாகவே கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர்களாயிற்றே. அதுவும் ஒரு காரணம்.
ஆகவே மக்களே இனி அழ சந்தர்ப்பம் கிடைத்தால் அழுதுவிடுங்கள். கண்ணீரைக் கட்டுப்படுத்தாதீர்கள். அழுவது நல்லது.
வாழ்க நலமுடன்...!
.
Tweet | |||||
நல்ல பதிவு .நாம் அழுவது நல்லது.பிறரை அழ வைப்பது நல்லதல்ல
ReplyDeleteஉண்மைதான் தோழரே
ReplyDeleteநல்ல பதிவு
ada!
ReplyDeletenalla pathivu!
புதிய தகவல். பொய்யாக அழும் பெண்களைப்பற்றி ஒரு பதிவு போடுங்க சார்.
ReplyDeleteசேர்த்து வைக்க அது
ReplyDeleteபொன்னும் பொருளுமல்ல..
அழுகை வந்தாள் அழுது விடுங்கள் என
மருத்துவ ரீதியாக சொன்ன விதம்
அழகு நண்பரே..
அட அப்படியா??
ReplyDeleteஅழுகைல இவ்வளவு விஷயம் இருக்கா? இனிமே மெகா சீரியல்களை பார்க்க வேண்டியது தான்...
ReplyDelete:) :) :)
முணுக்குன்னா அழுகை வந்துடுது உனக்கு, அழுது அழுதே காரியம் சாதிச்சுக்கறே...ன்னு கணேஷ் Uncle அடிக்கடி கிண்டல் பண்ணுவார் என்னை. இந்தப் பதிவைப் படிக்கச் சொல்லப் போறேன். Thank You Friend!
ReplyDeleteசிறப்பான பதிவு சார் !
ReplyDelete@ அனைவருக்கும்
ReplyDelete- வருகை தந்து வாக்கிட்டு கருத்துதுரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.