அந்த ஒற்றை பனைமரத்தின்
வேர்களை விசாரித்துக் கொண்டிருந்தபோது
கிழிந்த ஓலை ஒன்று விழுந்தது
என் தலைமேல்
நீயாய் வந்தாயா
இல்லை மரம் கழித்துப்போட்டதா
நீண்ட மவுனத்திற்குப்பின்
ஓலை கதறியது
நீ எப்படி இங்கு வந்தாயோ
அதே போலத்தான்
நானும் வந்திருக்கிறேன்
கிழிந்த ஓலையையா வாழ்ககையையா
எதை நினைத்து அழுவது
மவுனக்குழிக்குள் இறங்கினேன்
.
Tweet | |||||
mowna kuzhikkul iranginen!
ReplyDeletevidai kidaikkumaa?
paarppom!?
kavithai !
arumai!
அதானே..... விடையோடு வாருங்கள் மௌன குழியில் இருந்து வெளியே..
ReplyDeleteசில நேரங்களில் சில விஷயங்கள்
ReplyDeleteநதி மூலம், ரிஷி மூலம் போல...........
விடைகள் கானல் நீராகவே தெரியும்...
அந்த விடைகளை காண முற்பட்டு
வீழ்ந்து போதலை விட..
அந்த சமயத்தில் மௌனித்து இருத்தலே..
சாணக்கியம்...
அழகிய உணர்சிக் கவிதை நண்பரே..
வந்த இடம் தெரியவில்லை... வாழ்க்கை பல விசயங்களை ஒதுக்கிவிடும்.
ReplyDelete@ Seeni
ReplyDelete- பாராட்டுக்கு நன்றி.
@ மனசாட்சி
ReplyDelete- வந்துருவோம். பொதுவாக நான் என்று வருவதெல்லாம் என்னை பாத்திரமாக வைத்தல்ல. என்னைப் பாதித்த மனிதர்களின் குரலாக சில கவிதைகள் ஒலிக்கும். அதைப் போல்தான் இது. கருத்துரைக்கு நன்றி.
@ மகேந்திரன்
ReplyDelete- வருகைக்கும் பாராட்டுக்கும் அழகான விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்.
@ விச்சு
ReplyDelete- வீட்டை விட்டு வெளியேறிய உடன் ஒரு திகைப்பு உண்டாகும் அல்லவா? அந்த நேரத்தில் இருக்கும் கொந்தளிப்பான மனோநிலையில் எழுந்த கவி இது. வருகைக்கு நன்றி.
அருமை.
ReplyDeleteநன்றி.
கிழிந்த ஓலையையா வாழ்ககையையா
ReplyDeleteஎதை நினைத்து அழுவது// வாழ்வின் திசைகளை திரும்பிப் பார்க்க வைக்கும் வரிகள் .
அச்சச்சோ...
ReplyDeleteமௌனக்குழியாவது யோசிக்குமா...?
@ அனைவருக்கும்
ReplyDelete- வருகை தந்து வாக்கிட்டு கருத்துரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.