Saturday, November 12, 2011

நொறுங்கத் தின்றால் நூறு வயதா? - ஓர் மருத்துவரீதியான அலசல்

நம் எல்லோருக்குமே நீண்ட நாட்கள் நொய்நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ ஆசைதான். ஆனால் அது சாத்தியமா? சில சுலபமான வழிகளை கடைப்பிடித்தால் சாத்தியமான விஷயம்தான் அது. எப்படி? தொடர்ந்து படியுங்கள்.

நொறுங்கத் தின்பது எப்படி நாம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது?

நீங்கள் தற்போது வழக்கமான முறையில் சாப்பிடுவதை மாற்றி உணவை நன்றாக சவைத்து, சுவைத்து, நொறுங்கத் தின்று பாருங்கள். அதிகமாக நாம் பற்களை வைத்து உணவை அரைத்து அசைபோடும் போது நம் மூளை நரம்புகள் நன்கு தூண்டிவிடப்படும். உணவை ஜீரணமாக்கத் தேவையான உமிழ்நீரை அது மிக அதிகமாக சுரக்கவைக்கும்.

ஒரு மருத்துவ ஆராய்ச்சி சொல்கிறது. நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகள் இந்த நொறுங்கத் தின்னும் பழக்கத்தை தொடர்ந்து பழக்கப்படுத்தினபோது அவர்கள் மூளை நல்லவிதமாக செயல்பட்டு அதன் மூலம் நரம்பு மண்டலம் நன்கு செயல்பட்டு அவர்களால் ஆள்துணையின்றி நடக்க முடிந்ததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பாருங்கள்! எவ்வளவு அற்புதமான விஷயம்! மேலும் பலரின் பேச்சுத்திறனும் பெரிய அளவில் கூடியிருப்பதும் தெரியவந்தது.

நம் மூளையின் பலவிதமான செயல்பாடுகள் நம் பற்களோடு மிகுந்த தொடர்புடையவையாக இருக்கின்றன. அதனால்தான் பல்வலி வரும்போது சிலர் தலையைப் பிடித்துக்கொண்டிருக்கிறதை நீங்கள் கவனித்திருக்கலாம். நன்றாக பற்களால் அரைத்து உணவை உண்ணும் இந்த பழக்கத்தினால் நம்முடைய மூளை மிகுந்த அளவில் தூண்டப்படுகிறது. அதன் பிறகு தன்னுடைய கட்டளைகளை அற்புதமாக நம் உடல் முழுவதும் அனுப்புகிறது. மேலும் உணவானது பற்களால் அரைபடும்பொழுது ஒருவித சப்தம் பற்களுக்கிடையில் உண்டாகிறது. இதை நீங்கள் இதுவரைக்கும் கவனிக்காதிருந்தால் இப்போது கவனித்துப் பாருங்கள். இந்த சத்தமானது நம்முடைய மூளைக்கு மிகவும் பிடித்தமான ஒரு சத்தமாகும். இந்த சத்தம் நம்முடைய மூளைக்கு மிகுந்த புத்துணர்ச்சி அளித்து அளவில்லா ஆற்றலுடன் இயங்க வழிவகை செய்கிறது.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

பற்களின் வேர்ப்பகுதியானது (Periodontal Ligament) ஒருவித குஷன் போன்ற பகுதியைக் கொண்டது. இதில் பல நுண்ணிய உணர் இழைகள் உள்ளன. இவை உணர்வுகளை கடத்துவதில் அபார ஆற்றல் கொண்டவை. இவை மூளையின் நரம்பு மண்டலத்தோடு நெருங்கிய, நேரடித்தொடர்பு கொண்டவை. ஆகவே நாம் உணவை எவ்வளவு அதிகமாக மெல்லுகிறோமோ அல்லது அரைத்து உண்ணுகிறோமோ அந்த அளவுக்கு நம் மூளையும் பிரமாதமாக வேலை செய்கிறது. நம் மூளை பிரமாதமாக வேலை செய்யும்போது நம் உடலும் பிரமாதமாக வேலை செய்யத்தானே செய்யும்.

மூளையின் வயதும் கூடுகிறது

நொறுங்கத் தின்னும் பழக்கத்தினால் நம்முடைய மூளையில் உள்ள செல்களுக்கு நல்ல எக்ஸர்சைஸ் கிடைப்பதனால் அவை மிகுந்த செயல்திறனுடன் இயங்கும் நிலையை பெறுகிறது. ஆகவே நம் மூளைக்கு வயதாவதும் தடுக்கப்படுகிறது. ஆகையினால் நாம் சிந்திக்கும் திறனும் கற்றுக்கொள்ளும் திறனும் அபாரமாக கூடுகிறது.

குழந்தைகளுக்கு நாம் இந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்துவிட்டால் விரைவில் அவர்களின் மூளையின் செயல்திறன் அதிகரித்து, புத்திசாலிகளாக செயல்திறன் மிகுந்தவர்களாக மாறுவதை நீங்கள் காணமுடியும்.

வயதானவர்களுக்கு அவர்களின் மூளை வயதாவது தடுக்கப்படுவதனால் அவர்களின் செயல்திறன் கூடுகிறதை உணரலாம்.

என்ன? இன்றைக்கே நொறுங்கத்தின்னும் பழக்கத்தை ஆரம்பித்துவிடுவீர்கள்தானே?

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

7 comments:

 1. புதுமையான அறிவியல் தகவலாய் இருக்கிறதே.நன்றி.

  ReplyDelete
 2. Thodarnthu pinnoottam ittu ennai ookkap paduthum Sago. R. CHEZHIYAN ku Nandrigal pala.

  ReplyDelete
 3. இதுவரை அறியாத புதிய பயனுள்ள தகவல்
  பதிவக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 4. பயனுள்ள பதிவு. நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சொன்ன நமது முன்னோர்கள் நிச்சயம் தீர்க்கத்தரிசியாகத்தான் இருக்கமுடியும்.

  ReplyDelete
 5. சும்மாவே நம்ம மக்கள் அரச்சுக்கிட்டே தான் இருக்றாங்க...இதையும் சொல்லிடீங்களா ...
  50 வருடம் இன்னும் அதிகமா எடுத்து ஆட்டம்தான்...

  ReplyDelete
 6. நன்றி தென்காசி தமிழ் பைங்கிளி! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.