Saturday, November 19, 2011

என் யுகப்பயணம்

என் காலச் சிறகுகளை மாட்டிக்கொண்டு
யுகவீதியில் பறக்க ஆரம்பித்தேன்
பிரபஞ்சவெளியில்
கோளாடு கோளாய்
நட்சத்திரங்களோடு நட்சத்திரங்களாய் பயணித்தேன்

எத்தனை மனிதர்கள்
எத்தனை தேசங்கள்
எத்தனை வரலாறு
என்று
எல்லாம் தாண்டி
கணிக்க முடியாத
ஒரு இருண்ட காலத்துக்குள்
பிரவேசித்தேன்

அங்கே
இனம்புரியாத விலங்குகளும்
பெயர் தெரியாத உயிரினங்களும் கண்டேன்
வினோதவகை விருட்சங்களும்
செடிகொடிகளும் கண்டேன்

எல்லாம் இருந்தன
மனிதனைத் தவிர

ஆகவே
திரும்பினேன் இந்த கெட்ட பூமிக்கு
மேலிருந்து பார்த்தேன்
எல்லாம் கெட்டதாய் இருந்தது
இருந்தாலும் என்ன
எனக்குப் பிடித்திருந்தது
இந்த வாழ்க்கையும்
அதன் போராட்டங்களும்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

12 comments:

  1. கற்பனை கவிதை அருமை... வித்தியாசமா இருக்கு TM 1

    ReplyDelete
  2. அருமை அருமை கஷ்டமோ சுகமோ
    இன்பமோ துன்பமோ
    அது மனிதனோடுதானே இருக்க முடியும் !
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  3. Thangal varukaikkum karuthuraikkum nanri Sago.Sasikumar.

    ReplyDelete
  4. Thangal varukaikkum karuthuraikkum nanri Sago. Ramani.

    ReplyDelete
  5. Thangal varukaikkum karuthuraikkum nanri Sago.Snegithi.

    ReplyDelete
  6. Thangal varugaikkum vaakkukkum karuthuraikku nanri Sago.Chennaipithan.

    ReplyDelete
  7. //எனக்குப் பிடித்திருந்தது
    இந்த வாழ்க்கையும்
    அதன் போராட்டங்களும். //

    ஆமாம்,பிடித்துப்போவதே சரி!

    ReplyDelete
  8. Thangal varugaikkum karuthuraikkum nanri Sago. Shunmugavel.

    ReplyDelete
  9. அங்கே எல்லாம் இருந்தன
    மனிதனைத் தவிர,இருந்தாலும் என்ன
    எனக்குப் பிடித்திருந்தது
    இந்த வாழ்க்கையும்
    அதன் போராட்டங்களும்........... அருமை...தொடர வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  10. Thangal varugaikkum karuthuraikkum nanri Sago.Nadaasiva.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.