Wednesday, February 15, 2012

குற்றத்துக்கு கடவுளா பொறுப்பு?
அந்த மாந்தோப்புக்குள் திருடன் ஒருவன் கள்ளத்தனமாக நுழைந்தான். மாமரத்தில் ஏறிய அவன் அதன் கிளையை வேகமாக உலுக்கினான். நிறைய பழங்கள் கீழே விழுந்தன. அந்தத் தோப்பின் உரிமையாளர் சத்தம் கேட்டு அங்கே ஓடி வந்தார்.

மரத்தில் இருந்த திருடனைப் பார்த்து, “டேய்! அயோக்கியப் பயலே! திருடும் எண்ணத்தில் வந்திருக்கிறாயே. இந்தத் தீய செயலுக்காக கடவுளின் முன் கூனிக் குறுகி நிற்க மாட்டாயா?” என்று கத்தினார் அவர்.

கடவுள் நம்பிக்கை உடைய அவரை ஏமாற்ற நினைத்தான் அந்தத் திருடன். அவரிடம் இவ்வாறு கூறினான் “ கடவுளின் வேலையாள் நான். கடவுளின் தோப்புக்குள் நுழைந்தேன். உண்பதற்காக கடவுள் இந்தப் பழங்களை எனக்குத் தந்தார். வேறொன்றுமில்லை அய்யா. தவறாக நினைக்கவேண்டாம் ” என்றான்.

அதற்குள் அந்த தோட்ட உரிமையாளரின் வேலையாட்கள் சிலர் அங்கே ஓடி வந்தனர். “அந்தத் திருடனைப் பிடித்து இந்த மரத்தில் கட்டு ” என்றார் அவர். வேலையாட்களும் அவனைப் பிடித்து மரத்தில் கட்டினார்கள்.

தடி ஒன்றை எடுத்த அவர் அவனை விளாசித் தள்ளினார். வலி தாங்க முடியாமல் அவன் “ அய்யா! என்னை இப்படி அடித்துக் கொடுமைப் படுத்துவதற்காக நீங்கள் கடவுளின் முன் நிற்க வேண்டும். தெரியுமா?” என்று அலறினான்.

“ இந்தத் தடி கடவுளுடையது. கடவுளின் வேலையாள்தான் நான். கடவுளின் ஆணைப்படியே இன்னொரு வேலையாளை அடிக்கிறேன். அடிக்கும் கையும் கடவுளுடையது. ஆதலால் இதில் தவறில்லை ” என்று சொல்லிக்கொண்டே திரும்பத் திரும்ப வெளுத்து வாங்கினார் அவர்.

கடைசியில் அந்தத் திருடன் “ அய்யா! குற்றத்திற்கு நானே பொறுப்பு. கடவுள் அல்ல. இனியும் என்னால் அடி தாங்க முடியாது. என்னை மன்னித்து விட்டு விடுங்கள் ” என்று கெஞ்சினான் அவன். அதன் பிறகே அவர் அவனது கட்டுகளை அவிழ்த்துவிடச் சொல்லி “ இனி இப்படிச் செய்யாதே” என்று அறிவுரை கூறி ஒரு கூடை நிறைய மாம்பழங்களை கொடுத்தும் அனுப்பினார்.


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

32 comments:

 1. நல்ல கருத்துள்ள பகிர்வு.... நன்றி நண்பரே...

  ReplyDelete
 2. கடவுள் நம்பிக்கையை ஓங்கிப் பிடிக்கும் கருத்துள்ள ஒரு கதை. அருமை துரை!

  ReplyDelete
 3. கதை அருமை!
  நீதி போதனை!
  சா இராமாநுசம்

  ReplyDelete
 4. செய்த தவறுகளை ஆம் என
  ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டால்
  மனிதனாக மாறிவிடுவோம்..
  அங்கே அந்த உள்ளத்தில் தெய்வம் குடியிருக்கும்.

  ReplyDelete
 5. @ வெங்கட் நாகராஜ்

  தங்கள் உடனடி வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 6. நல்ல பதிவு சகோ துரை டேனியல் . நீங்களும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல. கலக்குங்க.

  ReplyDelete
 7. @ கணேஷ்

  - தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 8. கடவுளைச் சாட்டி என்னல்லாம் அநியாயம் நடக்குது !

  ReplyDelete
 9. @ புலவர் சா இராமாநுசம்

  தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி புலவர் அய்யா!

  ReplyDelete
 10. @ மகேந்திரன்

  - வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 11. @ சிராஜ்

  அப்படியா? வேறென்ன செய்ய? ஹி....ஹி...!

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 12. @ ஹேமா

  - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 13. நல்ல பதிவு..

  ReplyDelete
 14. அருமை
  சிறிய கதை ஆயினும் மிகச் சீரிய கருத்தை
  உள்ளடக்கிய அருமையான கதை
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. நகைச்சுவையும் கருத்தும் அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
 16. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் சார் !

  ReplyDelete
 17. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. கருத்துள்ள கதை...பகிர்வுக்கு நன்றி துரைடேனியல்...

  ReplyDelete
 19. @ ரியாஸ்
  @ ரமணி
  @ சசிகுமார்
  @ தனசேகரன்
  @ திண்டுக்கல் தனபாலன்
  @ ரத்னவேல் நடராஜன்
  @ ரெவரி

  - நன்றி அனைவருக்கும்.

  ReplyDelete
 20. அருமை நண்பரே...
  சிந்திக்கும் விதமாகச் சொன்னீர்கள்..

  நன்று.

  ReplyDelete
 21. @நண்பர் துரை டேனியல்
  நமக்கு எந்த மதத்தின் மீதும்,மதம் சார்ந்தவர்கள் எவர் மீதும் வெறுப்பு கிடையாது.மதங்கள் வரலாற்று ரீதியாக உண்மையா என்பதை விட மதம் என்பது அரசியலில் கலக்காமல் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடே உடையவன்.
  ***********
  அப்பதிவின் முதல் இரு பின்னூட்டங்கள் இது சகோ ஆஸிக் அவர்களின் இபோதைய பதிவுக்கு அங்கு நான் இட்ட பின்னூடங்களின் பிரதி.
  ************
  வரலாற்றின் ஊடாக பார்த்தால் மதத்தின் பெயரால் செய்யப்பட்ட கொடுமைகளை மதத்தின் மேல் சுமத்துவது நியாயம் இல்லை,அதே சமயம் நடந்த கொடுமைகளை மறப்பதோ நியாயப் படுத்துவதோ தவறு.

  பரிணாமம் என்பதன் சில தவறான் பயன்பாடுகள் குறித்து சகோ ஆஸிக்[எதிர்க்குரல்] தனது தளத்தில் பல கட்டுரைகள் இட்டுள்ளார்.அதனை நீங்கள் படியுங்கள்.எந்த ஒரு கொள்கையும் தவறாக் பயன்படுத்தப்படும் சாத்தியமும் உண்டு.அதனை தவிர்க்க வேண்டும் என்பதே நம் ஆசை.

  கிறித்தவம் எந்த கலாச்சாரத்தையும் சுவீகரிக்கும்,ஊடுருவும் என்பது மிக நிச்சயமான் உண்மை.கிறித்தவம் பரவியதற்கு கல்வி,மருத்துவம் முதலியவற்றில் மிஷனரிகள் ஆற்றிய தொண்டுதானே தவிர மதம் அறிந்து ,புரிந்து மாறியவர்கள் குறைவே!!!!!!!!

  1.மதம்,பரிணாமம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல.

  2.பரிணாம‌ம் அறிவியல்ரீதியாக் மட்டுமே அதிகம் விமர்சிக்கப்பட வேண்டும்.பரிணாம ஆய்வாளர்கள் செய்த நிரூபிக்கப்பட்ட சில தவறுகள்,ஏமாற்று வேலைகளையும் வரலாற்றுரீதியான் உண்மைகள் என்று ஒத்துக் கொள்வதில் எனக்கு முரண்பாடு இல்லை.இதே நேர்மையை மதவாதிகளிடமும் எதிர்பார்க்கிறேன்.

  3.மதம் +புத்தகம் வரலாற்றுரீதியாகவே விமர்சிக்கப்பட வேண்டும்.தத்துவரீதியான் விள்க்கம் பின்பற்றுப‌வர்களுக்கு மட்டுமே,விமர்சக்ர்களுக்கு அல்ல.
  நன்றி

  ReplyDelete
 22. //வரலாற்றின் ஊடாக பார்த்தால் மதத்தின் பெயரால் செய்யப்பட்ட கொடுமைகளை மதத்தின் மேல் சுமத்துவது நியாயம் இல்லை,அதே சமயம் நடந்த கொடுமைகளை மறப்பதோ நியாயப் படுத்துவதோ தவறு.// மதத்தின் பெயரால் செய்யப்பட்ட கொடுமைகளை மறக்கக் கூடாது. ஆனால் நாத்திகர்கள் செய்த படுகொலைகளை மட்டும் மறந்துவிட வேண்டும்.

  //கிறித்தவம் பரவியதற்கு கல்வி,மருத்துவம் முதலியவற்றில் மிஷனரிகள் ஆற்றிய தொண்டுதானே தவிர மதம் அறிந்து ,புரிந்து மாறியவர்கள் குறைவே!!!!!!!!// கொஞ்சம் பேர் புரிந்து மாறிவிட்டார்களா? அது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று?

  //பரிணாம‌ம் அறிவியல்ரீதியாக் மட்டுமே அதிகம் விமர்சிக்கப்பட வேண்டும்// உறுதியான ஆதாரம் இல்லாத எதுவும் நம்பிக்கைதான். எனவே பரிணாமமும் ஒரு நம்பிக்கைதான்.

  //இதே நேர்மையை மதவாதிகளிடமும் எதிர்பார்க்கிறேன்.// இந்த நேர்மை பல நாத்திகர்களிடமே கிடையாது, குறிப்பாக ஆபிரகாமிய மதங்களை மட்டும் விமர்சிக்கும் நாத்திகர்களிடம்.

  ReplyDelete
 23. @ சார்வாகன்

  - நண்பரே! தொடர்புடைய பதிவுகளில் மட்டும் கருத்துரை இடுங்கள். பொதுவான இதைப் போன்ற பதிவுகளில் கருத்துரையிட வேண்டாம். பரிணாமத்தைக் குறித்து நான் எழுதிய பதிவில் கருத்திடுங்கள். நான் வேண்டாமென்று சொல்லவில்லை. ப்ளீஸ்....

  ReplyDelete
 24. @ முனைவர் குணசீலன்

  - நன்றி முனைவரே! தங்கள் தளத்திற்கு வர முயலும்போதெல்லாம் எனக்குப் பிரச்சினை. அதனால்தான் வரமுடியவில்லை. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!

  ReplyDelete
 25. @ Shunkugavel

  - வாங்க சகோ. நல்லாருக்கீங்களா? பார்த்து நாளாச்சு. தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 26. @ சார்வாகன் சொன்னது

  //தத்துவரீதியான் விள்க்கம் பின்பற்றுப‌வர்களுக்கு மட்டுமே,விமர்சக்ர்களுக்கு அல்ல.//

  - ஓ.கே. ஓ.கே. நீங்கள் விமர்சகரா? புரிந்துகொண்டேன். விளக்கத்திற்கு நன்றி!

  ReplyDelete
 27. @ Robin

  - நன்றி. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

  ReplyDelete
 28. @ கோவிகண்ணன்

  - அப்படியா? நன்றி சகோ.

  ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.