Sunday, October 14, 2012

அதிகப்படியான பாரசிட்டமால் மரணத்தை விளைவிக்கும்


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவக்குழு ஒன்று ஒரு புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது. பாரசிட்டமால் (Paracetamol) மாத்திரைகளை அதிக டோஸ் எடுத்துக்கொண்டால் மரணத்தைக் கூட உண்டாக்கும் என்று கண்டுபிடித்திருக்கின்றனர். அதாவது இங்கிலாந்தில் தற்கொலை செய்து மாண்டுபோகிறவர்களை விட பாரசிட்டமால் அதிகமாக எடுத்துக்கொண்டு அதன் மூலம் ஈரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைவோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கின்றனர்.

மருத்துவ நிபுணர்கள் போதுமான அளவுள்ள பாரசிட்டமால் மாத்திரைகள் வலிக்கும் தடுமத்துக்கும் காய்ச்சலுக்கும் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதே வேளையில் ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு அதிகமாக பாரசிட்டமால் எடுத்துக் கொண்டால் நிச்சயம் மிகப்பெரிய பாதிப்பை கல்லீரலுக்கு அளித்து முடிவில் மரணத்தை உண்டாக்குவதாக கண்டுபிடித்திருக்கின்றனர்.



டாக்டர் கென்னத் சிம்ப்ஸன் என்பவரது தலைமையில் அமைந்த ஒரு மருத்துவர் குழு இதைக் கண்டுபிடித்திருக்கிறது. எடின்பர்க்கிலுள்ள ராயல் மருத்துமனையில் அவரது குழு கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட 660 நோயாளிகளை தொடர்ந்து ஆராய்ந்ததில் (1992 - 2008) இதற்கு காரணம் அதிகப்படியாக எடுத்துக்கொண்ட பாரசிட்டமால்தான் எனக் கண்டுபிடித்திருக்கின்றனர். அந்த நோயாளிகளில் 161 பேர் (சராசரியாக 40 வயது கொண்டவர்கள்) இவ்விதமாக அதிக டோஸ் எடுத்துள்ளனர். அவர்கள் மற்றவர்களை விட மரணத்துக்கு அருகில் இருந்தனர்.

அளவாக எடுத்துக்கொண்டால் வலியைக் குறைக்கும். ஆனால் அதிகப்படியாக எடுத்துக்கொண்டால் கல்லீரலைப் பாதித்து மரணத்தை விளைவிக்கும் இந்தப் பாரசிட்டமாலை மருத்துவரின் ஆலோசனைப்படி அளவாக பயன்படுத்துவோம். வளமாக வாழ்வோம்.

வாழ்க நலமுடன்!




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

12 comments:

  1. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதானே!
    சிலர் சிறு தலைவலிக்குக் கூட எடுப்பார்கள். அதைத் தவிர்ப்பது நலமே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

      Delete
  2. மிகவும் பயனுள்ள தகவலைத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  3. பயனுள்ள பதிவு.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

      Delete
  4. ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு அதிகமாக பாரசிட்டமால் எடுத்துக் கொண்டால் நிச்சயம் மிகப்பெரிய பாதிப்பை கல்லீரலுக்கு அளித்து முடிவில் மரணத்தை உண்டாக்குவதாக கண்டுபிடித்திருக்கின்றனர்.

    4 கிராமா 400 மில்லி கிராமா ? கவனம் தேவை .

    ReplyDelete
    Replies
    1. 4 கிராம்தான். சந்தேகமில்லை. அதாவது தலா 500 மில்லி கிராம் எடைகொண்ட 8 மாத்திரைகள் தாண்டினால்தான் ஓவர் டோஸ் எனப்படுகிறது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.